சற்றுமுன்

ஐ ஃபோன்-12…! நோ சார்ஜர், இயர்பட்ஸ்

ஐ ஃபோன்-12…! நோ சார்ஜர், இயர்பட்ஸ்

ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் மாடல்களை சார்ஜர் மற்றும் இயர்பாட்ஸ் இல்லாமல் வழங்க இருப்பதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் தகவல் வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் புதிய ஐபோன் பேக்கேஜிங் விவரங்களில் 2020 ஐபோன் பாக்ஸ் மெல்லியதாக இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் புதிய ஐபோன் சார்ஜர் மற்றும் இயர்பட்ஸ் இல்லாமலேயே வழங்கப்படும் என கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதால், ஐபோன் 12 விலை ஐபோன் 11 போன்றே நிர்ணயம் செய்யப்படலாம் என தெரிகிறது. புதிய ஐபோன் பேக்கேஜிங் ரென்டர்களின் படி புதிய ஐபோனிற்கான லைட்னிங் கேபிள் மற்றும் மேனுவல் புக்லெட் உள்ளிட்டவை வழங்கப்படும் என கூறப்படுகிறது.

இவைதவிர சார்ஜர் மற்றும் இயர்பாட்ஸ் வைப்பதற்கான இடம் நீக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே புதிய ஐபோன் பாக்ஸ் மெல்லியதாக இருக்கிறது. ஏற்கனவே வெளியான தகவல்களின்படி புதிய ஐபோன் 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதனால் புதிய ஐபோன் விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்பட்டது. எனினும், தற்போதைய தகவல்களின் படி சார்ஜர் மற்றும் இயர்போன்களை நீக்குவதன் மூலம் விலையை எதிர்பார்க்கப்பட்டதை விட குறைவாக நிர்ணயம் செய்ய முடியும் என தெரிகிறது.

CATEGORIES
error: Content is protected !!