ரஜினியின் இ–பாஸ் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை வியாசர்பாடி பகுதியில் தெரு நாடகம் வாயிலாக கொரோனா தொற்று பரவலை விளக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சென்னை மாநகராட்சி ஆணையர் கோ.பிரகாஷ், “ களப்பணிகளால் எந்த அளவிற்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதற்கு வட சென்னை பகுதி உதாரணம் என்றார். ராயபுரம், தண்டையார்பேட்டை மண்டலங்களில் தொற்றுகள் குறைந்துவிட்டது, தொடர்ந்து 3-4 மாத காலத்திற்கு இதே களப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
ரஜினி இ–பாஸ் வாங்கினாரா என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார். ஒன்றரை லட்சம் இ–பாஸ்களை ஆய்வு செய்ய வேண்டி உள்ளதாகவும், ரஜினி அவர் பெயரிலோ அல்லது அவரது ஓட்டுநர் பெயரிலோ இ–பாஸ் வாங்கி இருக்கலாம் என்றும் அவர் கூறினார்.

நிலவரம் என்ன? என்பதை ஆய்வு செய்து விரைவில் கூறப்படும் என்று குறிப்பிட்ட பிரகாஷ், பாஸ் எடுக்காமல் ரஜினி பயணம் செய்திருந்தால் காவல்துறையினர் அவர்கள் மீது நடவடிக்கைகளை எடுப்பார்கள் என உறுதிபட தெரிவித்தார்.
