சற்றுமுன்

ரெட்மி நோட்-9…! வாங்க ரெடியா இருங்க

ரெட்மி நோட்-9…! வாங்க ரெடியா இருங்க

சியோமியின் ரெட்மி பிராண்டு விரைவில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனினை இந்தியா சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதை உணர்த்தும் வகையில் டீசரை வெளியிட்டு இருக்கிறது.

தற்சமயம் டீசர் மட்டும் வெளியாகி இருக்கும் நிலையில், ஸ்மார்ட்போனின் சரியான வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. புதிய ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருப்பது தற்சமயம் தெரியவந்து உள்ளது.

டீசரை தொடர்ந்து ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனும் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஏப்ரல் மாத வாக்கில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரெட்மி நோட்-9 சிறப்பம்சங்கள்

– 6.53 இன்ச் 2340×1080 FHD+ டிஸ்ப்ளே

– ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர்

– ARM Mali-G52 2EEMC2 GPU

– 3GB LPDD4x ரேம், 64GB (eMMC 5.1) மெமரி

– 4GB LPDD4x ரேம், 128GB (eMMC 5.1) மெமரி

– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

– டூயல் சிம்

– ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 11

– 48MP பிரைமரி கேமரா, f/1.79, PDAF, EIS, 0.8μm, எல்இடி ஃபிளாஷ், EIS

– 8MP 118° அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், f/2.2

– 2MP மேக்ரோ லென்ஸ்

– 2MP டெப்த் சென்சார், f/2.4

– 13MP செல்ஃபி கேமரா, f/2.25

– கைரேகை சென்சார், ஐஆர் சென்சார்

– 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ

– ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (P2i coating)

– டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5

– யுஎஸ்பி டைப்-சி

– 5020mAh பேட்டரி

– 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

CATEGORIES
error: Content is protected !!