பத்துப் பொருத்தம் பார்த்தும் விவாரத்து ஆவது ஏன்? ஜோதிடம் பொய்யா?, ஜோதிடர்களுக்கு கணிக்கத் தெரியவில்லையா? Part – 1

0
101
What is the Meaning of Ten Poruthams in Marriage?

திருமண பேச்சை வீட்டில் ஆரம்பித்தாலே, முதலில் பார்ப்பதுஜாதகத்தை தான். அதிலும், அடிக்கடி காதில் விழுவது 10 பொருத்தம். 10-ல் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். அதென்ன பத்து பொருத்தம்?

ஜோதிடர் ஏதோ சொல்கிறார், நாங்களும் கேட்கிறோம் என்றுதான் இந்த கேள்விக்கு நம்மில் பலர் பதில் சொல்வார்கள். பத்துப் பொருத்தம் என்றால், 10 விதமான பொருத்ததை குறிப்பிடுகிறது. தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திரப் பொருத்தம், ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம், ராசி அதிபதி பொருத்தம், வசிய பொருத்தம், ரஜ்ஜூ (கயிறு) பொருத்தம், வேதைப் பொருத்தம். இவற்றைதான் பத்துப் பொருத்தம் என்று சொல்வார்கள். (இந்த 10 பொருத்தம் குறித்து விரிவாக பாகம்-2ல் பார்ப்போம்)

Also Read : திருமணத்திற்கு எத்தனைப் பொருத்தம் தேவை? பூப்பெய்திய நேரம் வைத்து ஜாதகம் கணிப்பது சரியா? Part – 2

பத்துக்குப் பத்து பொருத்தங்கள், எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானது என ஜோதிடர்கள் சிலர் சொல்கிறார்கள். நிச்சயிக்கும் திருமணத்திற்கு பத்துப் பொருத்தமும் பார்க்க வேண்டியது அவசியம் என பெற்றோர் எண்ணுகிறார்கள். அதில் தவறில்லை. திருமணத்திற்கு பத்துப் பொருத்தம் தேவைதான். ஆனால் 10 பொருத்தம் மட்டும் போதும் என்று நினைப்பதுதான் தவறு. பத்துப் பொருத்தம் பார்த்தும் பிரச்னை வருவது ஏன்?

“எல்லாப் பொருத்தமும் பார்த்துத்தான் கல்யாணம் பண்ணோம். பத்துக்கு ஒன்பது பொருத்தம் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. ஆனா கல்யாணம் ஆகி முழுசா ஒருமாசம் கூட வாழல. அதுக்குள்ள ரெண்டு பேருக்கும் சண்டைன்னு பிரிஞ்சிட்டாங்க.” என்ற பேச்சை தற்காலத்தில் பரவலாகக் கேட்க முடிகிறது. காதல் திருமணங்களுடன் ஒப்பிடும் போது நிச்சயிக்கும் திருமணங்களின் தோல்வி விழுக்காடு குறைவுதான் என்றாலும், பார்த்துப் பார்த்து செய்த திருமணங்கள் நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறுவதால், இளைய தலைமுறையினருக்கு மட்டுமல்ல, பெற்றோருக்கும் ஜோதிடத்தின் மீதான நம்பிக்கை குறைகிறது.

Also Read : ரஜினிகாந்த் முதல் யோகி பாபு வரை வெற்றிபெறுவதன் ரகசியம் இதுதானா? யார் இந்த கரணநாதன்?

பொருத்தம் பார்த்துத்தானே திருமணத்தை நடத்தினோம், ஆனால் பிரிந்துவிட்டார்களே..! அப்படியென்றால் ஜோதிடம் பொய்யா?, அல்லது ஜோதிடர் பொய் சொன்னாரா? என்ற சந்தேகம் தோன்றுவதும் இயற்கையே. இதற்கு நேரடியாக பதில் சொல்ல வேண்டும் என்றால் நிச்சயமாக ஜோதிடம் பொய் சொல்லாது. ஜோதிடர்களும் பொய் சொல்ல மாட்டார்கள். அப்படியென்றால், தவறு உண்டானது எங்கே? கொஞ்சம் அலசுவோம்.

பொருத்தம் பார்க்கும் விதம் தான் தவறு

பத்துப் பொருத்தம் பார்க்கும் முறை என்பது ஆண், பெண் ஆகியோரின் ஜென்ம நட்சத்திரத்தைக் கொண்டு கணிக்கும் முறை. அதாவது பெண்ணின் நட்சத்திரத்தில் இருந்து ஆணின் நட்சத்திரம் வரை எண்ணி வரும் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு, அதனை வைத்துப் பொருத்தம் பார்த்துச் சொல்வார்கள். இங்கேதான் தவறு நிகழ்கிறது. இந்த பத்துப் பொருத்தமும் முழுக்க முழுக்க ஆண், பெண் இருவரின் ஜென்ம நட்சத்திரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகிறதே தவிர ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளின் அடிப்படையில் அமைவது அல்ல.

Also Read : ராசிக்கல்லா? ராசிக்குக் கல்லா..? எந்த விரலில் ராசிக்கல் மோதிரம் அணிய வேண்டும்?

திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ஜாதகக் கட்டத்தை ஆராய்ந்து பலனைப் பார்க்காமல், வெறும் நட்சத்திரத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளும்போது நாம் நினைப்பதற்கு மாறாக நடந்துவிடுகிறது. இது அனைத்திற்கும் மேலாக, திருமணத் தகவல் மையங்களே இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு ஆண், பெண்ணுக்குப் பொருத்தம் பார்த்து வரன்களை அனுப்புவதுதான் உச்சக்கட்ட கொடுமை. (பத்துப் பொருத்தம் வந்தது எப்படி? பாகம் – 2ல்).

தொடர்புக்கு :- ‘ஜோதிட சிரோன்மணி’ ஆர்.கே.வெங்கடேஸ்வரர், ஸ்ரீ மாருதி ஜோதிட ஆராய்ச்சி மையம், சென்னை. astrovenkataeswar@gmail.com, அலைப்பேசி – 91590 13118.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry