மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாத 12 உணவுகள் எவை தெரியுமா? 12 Foods You Should Never Reheat!

0
217
Why should you avoid reheating food? Reheating can turn healthy food to harmful food. Reheating food can destroy the nutrients in the food and cause food poisoning and food-borne diseases. Getty Image.

நமது முன்னோர்கள் சாப்பிட்ட உணவில் இருந்த சத்துக்களில் இப்போது பாதிதான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட உணவுகளும், ஃப்ரிட்ஜில் வைத்த உணவுகளும், மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடும் உணவுகளும் நமக்கு நஞ்சாக மாறி விடுகின்றன. துரதிருஷ்டவசமாக, சில உணவுகளை மீண்டும் சூடாக்குவது ஃபுட் பாய்சனிங் அல்லது அதைவிட மோசமமான ஆபத்தை ஏற்படுத்துகிறது. மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக் கூடாத 12 உணவு வகைகளை தெரிந்துகொள்வோம்.

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கில் நார்ச்சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. மற்ற காய்கறிகளுடன் ஒப்பிடும்போது கலோரிகள் குறைவாக இருந்தாலும், இவற்றை வேகவைத்து சாப்பிடுவதுதான் சிறந்தது. உருளைக்கிழங்கை மீண்டும் சூடாக்குவதில் உள்ள சிக்கல் என்பது மைக்ரோவேவ் அல்லது அடுப்பில் அவற்றை வெப்பப்படுத்தும் செயல்முறை அல்ல. சமைத்த உருளைக்கிழங்கை அறை வெப்பநிலையில் அதிக நேரம் குளிர்விக்க விட்டால், போட்டுலிசத்தை(botulism) ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் உருவாகக்கூடும். இவற்றை கொல்லும் அளவுக்கு உருளைக்கிழங்கை மறு சூடாக்க இயலாது. எனவே, உருளைக்கிழங்கு பயன்படுத்தி சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் அவை உடலுக்குத் தீங்காக மாறி விடுகிறது.

Also Read : சுகர் பேஷன்ட்டும் பயமில்லாம உருளைக்கிழங்கு சாப்பிடலாம்! இப்படி குக் பண்ணுங்க, என்ஜாய் பண்ணுங்க…!

காளான்: காளான்களை மறு சூடு செய்வது பெரிய தவறு. காளான்களில் புரதங்கள் உள்ளன, அவை சரியாக சேமிக்கப்படாவிட்டால் என்சைம்கள் மற்றும் பாக்டீரியாக்களால் சேதமடையக்கூடும். காளான்களை மீண்டும் சூடாக்கி உட்கொள்வது வயிற்று வலியைக் கொடுக்கும். காளானில் உள்ள செலினியம், எலும்புகளின் உறுதித் தன்மையை ஊக்குவிக்கிறது. காளான் இரும்பு சத்து அதிகம் கொண்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும்  காளான் உணவை மீண்டும் மீண்டும் சூடுபடுத்துவதால் வயிற்றுப்போக்கு, வாந்தி, குமட்டல் போன்ற வயிற்று பிரச்னைகளை உண்டாகும். காளான்களை மீண்டும் சூடாக்க வேண்டும் என்றால், ஐரோப்பிய உணவு தகவல் கவுன்சில் அவற்றை குறைந்தது 158 டிகிரி பாரன்ஹீட்டுக்கு வெப்பமாக்க பரிந்துரைக்கிறது.

அரிசி சாதம் : சமைத்த அரிசி பேசில்லஸ் செரியஸ் என்ற பாக்டீரியாவால் பாதிக்கப்படலாம். இந்த பாக்டீரியாக்கள் வெப்பத்தால் பாதிக்கப்படாதவை. நச்சுத்தன்மை மற்றும் வெப்பத்தை எதிர்க்கும் பண்புகளை கொண்டவை. சமைத்த அரிசியை அறை வெப்பநிலையில் நீண்ட நேரம் வைக்காமல் விரைவில் சாப்பிடுங்கள். நீங்கள் அரிசியை மீண்டும் சூடாக்க வேண்டும் என்றால், சாதத்தை சூடு செய்து முழுமையாக கிளறிவிட வேண்டும். பின்னர் மீண்டும் ஒரு முறை சூடுபடுத்தி கிளறிவிட்டு சாப்பிடலாம். ஆனாலும், சமைத்தவுடன் சாதத்தை சாப்பிடவே பரிந்துரைக்கப்படுகிறது.

Foods that turn harmful when reheated.

கீரைகள்: அதிக ஊட்டச்சத்துக்கள் அடங்கியது என்றால் அதில் கீரை வகைகள்தான் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. இருப்பினும், சமைத்து மீந்துபோன கீரை அநேகமாக யாருக்கும் பிடிக்காது. கீரையை சூடுசெய்து சாப்பிடுவதையும் பெரும்பாலும் யாரும் விரும்புவதில்லை. எந்த வகை கீரையாக இருந்தாலும் அதை சூடுபடுத்தி சாப்பிடும்போது ஃபுட் பாய்சனாக மாறி விடுகிறது. கீரையை மீண்டும் சூடாக்கும்போது, கீரையில் உள்ள நைட்ரேட், நைட்ரேட்டுகளாகவும் – நைட்ரோசமைன்களாகவும் மாறுகிறது. சில நைட்ரோசமைன்கள் ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் உடலின் திறனை பாதிக்கும்.

கோழி : கோழியில் அதிக அளவு பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. இதை சரியாக சமைக்காமல் சாப்பிட்டால் நமது உடலில் பாக்டீரியாக்கள் சேரும். அதைவிட மிகவும் முக்கியம் கோழியால் செய்த உணவுகளை திரும்பத் திரும்ப சூடு படுத்தும்பொழுது பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரித்து உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கிறது. ஆபத்தான பாக்டீரியாக்கள் கொல்லப்படுவதை உறுதி செய்ய கோழியின் ஒவ்வொரு பகுதியும் குறைந்தது 175 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலையை எட்டியுள்ளதா என்பதை சமையல் வெப்பமானி மூலம் உறுதிப்படுத்த வேண்டும். மீண்டும் சூடாக்க திட்டமிட்டால், சமைத்த கோழி எல்லா நேரங்களிலும் 42 டிகிரி பாரன்ஹீட்டுக்குக் கீழே இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவுகள் : வெவ்வேறு எண்ணெய்கள் வெவ்வேறு வெப்ப சகிப்புத்தன்மையைக் கொண்டுள்ளன. நீங்கள் ஒரு எண்ணெயை பாதுகாப்பான அளவைத் தாண்டி சூடாக்கினால், அது நச்சுப் புகைகளை உருவாக்கும். நிறைய எண்ணெயைக் கொண்ட உணவுகள் மைக்ரோவேவ் அவனில் சூடுபடுத்தக்கூடாது. ஏனெனில் அதிக வெப்பம் எண்ணெயில் புகையை உண்டாக்கி ஆபத்தான நச்சுகளை உருவாக்கக்கூடும்.

முட்டை உணவு :  முட்டை உணவு வகைகளில் உடலுக்குத் தேவையான புரதம் அதிக அளவில் இருக்கிறது. ஆனால்,  முட்டையை வைத்து செய்யப்பட்ட உணவுகளை மீண்டும் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அது வாயுக் கோளாறுகளை ஏற்படுத்தி உடல் ஆரோக்கியத்தை பாதித்து விடுகிறது. சமைத்த முட்டை அல்லது முட்டை உணவை ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளியே வைத்திருக்கக் கூடாது. ஃப்ரிட்ஜில் வைத்திருப்பதே சிறந்தது. சாப்பிடுவதற்கு சிறிது நேரத்துக்கு முன் ஃப்ரிட்ஜில் இருந்து எடுத்து அறை வெப்பநிலைக்கு வந்த பிறகு சாப்பிடலாம். ஏனென்றால் சால்மோனெல்லா போன்ற பாக்டீரியாக்கள் முட்டை உணவுகளில் வேகமாக பெருகி கடுமையான ஃபுட் பாய்சனிங்குக்கு வழிவகுக்கும்.

பஃபே உணவுகள் : அறை வெப்பநிலையில் ஒரு மணிநேரத்துக்கு மேல் வைக்கப்படும் பஃபே உணவுகள், ஆபத்தான நுண்ணுயிரிகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களாக மாறிவிடும். பெரும்பாலான தொழில்முறை கேட்டரிங் நிறுவனங்கள் மற்றும் உணவகங்கள், உணவில் பரவும் நோய்களைத் தடுக்க கடுமையான உணவு பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்றினாலும், அலுவலக விருந்துகள் அல்லது வீட்டுக் கூட்டங்களில் விதிமுறைகளை கடைப்பிடிப்பது இல்லை. இதன் பொருள் பஃபே உணவில் உள்ள பாக்டீரியாக்கள் ஏற்கனவே பாதுகாப்பற்ற மட்டத்தில் இருக்கக்கூடும். மீண்டும் சூடாக்குவது கிருமிகளை முழுவதுமாக கொல்லாது. நீங்கள் ஒரு பஃபே பாணி விருந்தை நடத்துகிறீர்கள் என்றால், ஏற்கனவே நிரப்பப்பட்ட பரிமாறும் உணவில் புதிய உணவை ஒருபோதும் சேர்க்க வேண்டாம். குளிர்ந்த காலநிலையில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக அல்லது சூடான காலநிலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அறை வெப்பநிலையில் எஞ்சியிருக்கும் உணவை நிராகரிக்கவும்.

Also Read : ஜீரண பிரச்சனை இருக்கா? சிறந்த செரிமானத்திற்கு உதவும் புரோபயாடிக் உணவுகள்!

தாய்ப்பால் : தாய்ப்பால் மற்றும் குழந்தை உணவை மைக்ரோவேவ் அவனில் மீண்டும் சூடாக்கக்கூடாது. மைக்ரோவேவ் உணவை சீரற்ற முறையில் சூடாக்கக்கூடும், இதன் விளைவாக குழந்தையின் வாய் மற்றும் தொண்டையில் எரிச்சலை உண்டாக்கக்கூடும். தாய்ப்பால் அல்லது குழந்தை உணவை மீண்டும் சூடாக்க வேண்டியிருந்தால், அடுப்பில், குடுவை ஒன்றில் நீர் நிரப்பி அதனுள் குழந்தை உணவை வைத்து சூடு செய்ய வேண்டும்.

கடல் உணவுகள் : கடல் உணவு எவ்வாறு சேமிக்கப்பட்டது என்பதைப் பொறுத்ததே மீண்டும் சூடாக்குவதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்ய முடியும். கடலில் இருந்து பிடிக்கப்பட்டவுடனேயே உறை வெப்பநிலைக்கு மாற்றப்பட்டால் மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடலாம். அதேநேரம், புதிய அல்லது சமைத்த கடல் உணவுகள் அறை வெப்பநிலையில் இருக்கும்போது harboring பாக்டீரியாவால் பாதிக்கப்படலாம். இது உணவு மூலம் பரவும் நோய்களை ஏற்படுத்தக்கூடும். சாதாரணமாக கடல் உணவை சூடாக்குவது இந்த பாக்டீரியாக்களைக் கொல்லாது. குளிர்ந்த காலநிலையில் இரண்டு மணி நேரமும், வெப்ப காலத்தில் ஒரு மணி நேரமும்தான், ஃப்ரிட்ஜில் இருந்து வெளியே இருக்கலாம். 40 முதல் 140 டிகிரி பாரன்ஹீட் வரை எந்த வெப்பநிலையிலும் கடல் உணவுகளில் பாக்டீரியாக்கள் வேகமாக வளரக்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

Also Read : கடலில் மீன்களைவிட அதிகரிக்கும் கழிவுகள்! பூமியில் உள்ள மனிதர்களின் எடைக்கு நிகராக ஆண்டுதோறும் உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக்குகள்!

பிரியாணி : நீங்கள் மைக்ரோவேவில் பிரியாணியை மீண்டும் சூடாக்குகிறீர்கள் என்றால், ஒவ்வொரு கப் அரிசிக்கும் 1 தேக்கரண்டி தண்ணீரைச் சேர்த்து, ஒரு கரண்டியால் சாதக் கட்டிகளை உடைத்து, தண்ணீர் உறிஞ்சப்படும் வரை சூடாக்கவும். மைக்ரோவேவில் வைப்பதற்கு முன்பு பாத்திரத்தின் வாயை ஒரு தட்டு போட்டு மூடி வைக்கலாம். இவ்வாறு செய்வது அரிசி ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ள உதவும். சமையல் அடுப்பில் பிரியாணியை சூடாக்குகிறீர்கள் என்றால், தண்ணீர், எண்ணெய் அல்லது வெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி சூடுசெய்ய வேண்டும்.

எண்ணெய்: சமையல் எண்ணெய் அதிக வெப்பமடைந்தால் அல்லது மீண்டும் மீண்டும் பயன்படுத்தினால் ஆபத்தான டிரான்ஸ் கொழுப்புகளாக மாறும். மேலும், வால்நட் எண்ணெய், வெண்ணெய் எண்ணெய், திராட்சை விதை மற்றும் ஹேசல்நட் எண்ணெய் ஆகியவை மிகக் குறைந்த புகைப் புள்ளிகளைக் கொண்டுள்ளன. அவற்றை மீண்டும் சூடாக்கும்போது கெட்டுப்போகக்கூடும்.

பொதுவாக, உணவுகளை அப்போதைக்கு அப்போது சமைத்து சாப்பிடுவதுதான் சிறந்தது. தவறும் பட்சத்தில் மேற்கூறிய உணவுகளை எக்காரணத்தை முன்னிட்டும் சூடு படுத்தி சாப்பிடுவதைத் தவிர்ப்பது உடல் நலத்திற்கு நன்மை பயக்கக்கூடிய ஒன்றாகும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry