ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பு! தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த ஐபெட்டோ வலியுறுத்தல்!

0
327
AIFETO leader Annamalai has urged the DMK government to reinstate the Old Pension Scheme, highlighting its significance for government employees’ financial security. He emphasised the need for prompt action to address long-standing demands.

ஐபெட்டோ தேசிய செயலாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவருமான வா. அண்ணாமலை வெளியிட்டுள்ள புலன அறிக்கையில், மத்திய அரசு அறிவித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தினை (UPS) தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்த இருப்பதாக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அறிவித்த போதே இரண்டு பக்க அறிக்கையினை முழு விளக்கத்துடன் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும் ஐபெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பிலும் எதிர்ப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருந்தோம். இந்த செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் அனைத்து ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.

Also Read : ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பழைய ஓய்வுதியத் திட்டத்தை அமல்படுத்துவதன் அவசியத்தை விளக்கும் ஐபெட்டோ!

CPS ம் வேண்டாம், UPS ம் வேண்டாம், தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிப்படி OPS தான் வேண்டும் என்பதுதான் கொள்கை. இதை தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும், AIFETO அகில இந்திய அமைப்பின் சார்பிலும் பெரிதும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்.

சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளது போல ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை பற்றி மத்திய அரசு இதுவரையில் தெளிவான விளக்கம் தரவில்லை. 25 ஆண்டுகள் பணியாற்றிய ஒருவருக்கு 50% பென்ஷன் தருவார்கள். மத்திய அரசு 18% சதவீதம் பங்களிப்பு தருகிறது. ஆனால் இரண்டு ஆண்டுகளில் அவர் இறந்து போய்விட்டால் அந்த குடும்பத்திற்கு அந்த தொகை கிடைக்குமா? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

அதனால் ஒரு ரூபாய் கூட பங்களிப்பு செலுத்தாமல் நடைமுறையில் இருந்து வரும் பழைய ஓய்வூதியத் திட்டமே சிறந்ததாகும். தமிழ்நாடு அரசு தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் 6.25 லட்சம் பேர் சிபிஎஸ் திட்டத்தில் சேர்ந்துள்ளார்கள். UPS திட்டம் சிறப்பானது போல சிலருக்கு தெரியலாம்.

Also Read : பழைய ஓய்வூதிய திட்டம்! கைவிரித்த முதல்வர் ஸ்டாலின்? ஏமாற்றப்பட்ட அரசு ஊழியர்கள்! டாக்டர் ராமதாஸ் கடும் சாடல்!

பழைய பென்ஷன் திட்டத்தில் இருப்பவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை பெற்று வருகிறார்கள். அப்படி இருக்கும்போது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ஏன் நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்று கூட எண்ணலாம். ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (UPS) விட பழைய ஓய்வூதிய திட்டமே (OPS) சிறந்ததாகும்

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் கோரிக்கைகளுக்காக அழைத்துப் பேசியபோது, சிரித்துக் கொண்டே… எனது பெயருக்கு முன்பு உள்ள “கருணை ” என்னிடம் நிறைய இருக்கிறது, பின்னதாக உள்ள “நிதி” தான் என்னிடம் இல்லை என்று கூறினார்.

Also Read : கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 50 தொகுதிகளில் வெற்றி பாதிக்கும்! ஆசிரியர் சங்க மூத்த தலைவர் ஐபெட்டோ அண்ணாமலை எச்சரிக்கை!

அப்படி கூறினாலும் அவருடைய ஆட்சி காலத்தில் தான் மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கியதுடன், நான்கு ஊதிய குழுக்களையும் அமைத்து மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை அமல்படுத்தினார் என்பதை நெஞ்சிருக்கும் வரை மறக்கத்தான் முடியுமா?

தேசியக் கல்விக் கொள்கையினை நாம் கடுமையாக எதிர்க்கிறோம், அதேபோல் மத்திய அரசின் திட்டமான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தையும் (UPS) எதிர்க்கிறோம். தேர்தல் கால வாக்குறுதியினை சொன்னபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் பெரிதும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry