
காரியத் தடை விலக வேண்டும் என்றால் விநாயகர் வழிபாடு செய்வது சிறப்பு என்பது எல்லோருக்கும் தெரியும். பல முறை முயற்சி செய்து தோற்றுப் போன ஒரு விஷயத்தில், ஜெயிக்க வேண்டும் என்றால், விநாயகரை கீழே சொல்லியபடி வழிபட்டால் கைமேல் பலன் கிடைக்கும்.
தினம்தோறும் வரக்கூடிய எமகண்ட நேரத்தில் விநாயகர் வழிபாடு செய்தால், உங்களுடைய வாழ்க்கையில் காரியத் தடை இருக்காது. உங்கள் வீட்டுப் பக்கத்தில் எந்த விநாயகர் கோவில் இருந்தாலும் அங்கு செல்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். தினமும் எமகண்ட நேரத்தில், விநாயகர் கோவிலுக்குச் சென்று அருகம்புல் போட்டு, கற்பூரம் ஏற்றி, விநாயகரை 8 முறை வலம் வர வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம்.
Also Read : சனிக்கிழமைகளில் கண்டிப்பாக இந்த 10 விஷயங்களை செய்யவே செய்யாதீங்க!
தினமும் எமகண்ட நேரத்தில் விநாயகரை வழிபாடு செய்ய முடியவில்லையா? பரவாயில்லை, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை எமகண்ட நேரமான 3:00-4:30 மணிக்குள் விநாயகர் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த நேரத்தில் விநாயகரை எட்டு முறை வலம் வரும்போது, நிச்சயமாக உங்களுடைய வாழ்வில் வெற்றி கிடைக்கும். சில இடங்களில் விநாயகர் கோவில் இந்த குறிப்பிட்ட எமகண்ட நேரத்தில் திறந்து இருக்காது. அப்போது என்ன செய்வது?
நம்முடைய ஊர்களில் விநாயகர் கோவிலுக்கா பஞ்சம்? தெரு முனையில் கூட ஒரு பிள்ளையார் இருப்பார். அந்தப் பிள்ளையாரிடம் நீங்கள் தாராளமாக வழிபாடு செய்யலாம், தவறே கிடையாது. அரச மரத்தடியில் ஒரு பிள்ளையார் இருக்காரா, அவரைப் போய் வழிபாடு செய்யுங்கள். இந்த எமகண்ட நேரத்தில் பலரும் வீட்டில் இருக்க மாட்டார்கள், அலுவலகத்தில் இருப்பார்கள், அவர்கள் என்ன செய்யலாம்?
Also Read : சாமிக்கு தேங்காய், வாழைப்பழம் படைப்பதன் பின்னணி! முன்னோர்கள் சும்மா சொல்லிட்டு போகவில்லை..!
எமகண்ட நேரம் வந்துவிட்டது என்றால், இருந்த இடத்திலிருந்து “ஓம் விக்ன விநாயகா போற்றி போற்றி” என்ற மந்திரத்தை ஒரு நிமிடமோ அல்லது 108 முறையோ ஜபிக்கலாம். நிச்சயம் நல்லது உங்களைத் தேடி வரும். தொடர்ந்து 11 நாட்கள் எமகண்ட நேரத்தில் மனம் உருகி விநாயகரை வழிபாடு செய்து முடித்துவிட்டு, முடியவே முடியாது என நீங்கள் நினைத்திருந்த காரியத்திற்கான முயற்சிகளை மேற்கொண்டு பாருங்கள். நிச்சயமாக உங்களுடைய முயற்சிகள் வெற்றி அடையும்.
எமகண்ட நேரம் என்பது தவறான நேரம் கிடையாது. அந்த நேரத்தைக் கண்டு யாரும் பயப்பட வேண்டாம். எமகண்ட நேரத்திற்கும் நல்லது செய்யக்கூடிய தன்மை உண்டு என்பதற்காகத் தான் இந்த பதிவு. உங்களுடைய காரிய தடைகள் விலக வேண்டும், நீங்கள் எல்லா விஷயத்திலும் சீக்கிரம் ஜெயிக்க வேண்டும் என்றால் எமகண்ட நேரத்தில் நம்பிக்கையுடன் விநாயகர் பாதங்களை பற்றிக் கொள்வது தான் ஒரே வழி. நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry