சற்றுமுன்

தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி! தமிழக பாஜக துணை தலைவர் துரைசமி திட்டவட்டம்

தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி! தமிழக பாஜக துணை தலைவர் துரைசமி திட்டவட்டம்

தமிழகத்தில் வரும் தேர்தலில் பாஜகவை அனுசரித்து செல்லும் கட்சியுடன் தான் கூட்டணி என்றும், பாஜக தலைமையில் தான் ஆட்சி நடைபெறும் எனவும் அக்கட்சியின் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.

சென்னையில் கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடஒதுக்கீடு தொடர்பாக எதிர்க்கட்சிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இட ஒதுக்கீட்டில் மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து மக்களிடம் விளக்கம் அளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை தவறு. இதை அவர் அரசியலுக்காக செய்கிறார்.

திமுக தவிர வேறு எந்த கட்சியும், எங்களால் தான் இட ஒதுக்கீடு கிடைத்தது என்று சொல்லவில்லை. அதேபோல, கட் ஆப் மார்க் தொடர்பாக ஸ்டாலின் கூறும் கருத்து பொய். மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியது தவறில்லை. ஆனால், முன்னேறிய வகுப்புகளுக்கு 10 சதவீதம் ஒதுங்கியது தவறா என ஊடகம் வாயிலாக நான் கேள்வி கேட்கிறேன்.

வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீடு என எந்த விவகாரத்திலும் மத்திய அரசு தவறாக செல்லவில்லை. பொய் பிரச்சாரம் மூலம் மக்களை திசை திருப்ப வேண்டாம். ஸ்டாலினை நான் கேட்டுக்கொள்வது, நீண்ட காலமாக ஜாதியை சொல்லி அரசியல் செய்து விட்டீர்கள், இனி இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்.

திமுக அதிக எம்.பி.க்களை கொண்டுள்ளனர். அவர்கள் நாடாளுமன்றத்தில் பேசுவதை விட, வெளியில் வந்து தான் அதிகம் பேசுகின்றனர். வெளிநடப்பு செய்வதை மட்டுமே முதல் காரியமாக அவர்கள் செய்து வருகின்றனர். எதிர்க்கட்சிகள் கோவிட் காலத்தில் ஆக்கபூர்வமான கருத்துகளை, யோசனைகளை அளிக்க வேண்டும். கனிமொழிக்கு விமான நிலையத்தில் இந்தி மொழியால் பிரச்னை ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. முறையாக விசாரித்தால் உண்மை தெரியும்.

தமிழகத்தில் திமுகஅதிமுக என்ற நிலை மாறி, திமுகபாஜக என்ற நிலை உருவாகியுள்ளது. பாஜகவை எந்த கட்சி அனுசரித்து செல்கிறதோ அவர்களுடன் தான் கூட்டணி; பாஜக தலைமையில் தான் ஆட்சி நடைபெறும். பாஜகவிற்கு திமுக வினர் நிச்சயம் நிறைய பேர் வருவார்கள்; நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் என்றும் வி.பி. துரைசாமி கூறினார்.

CATEGORIES
error: Content is protected !!