தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு எதிர்க்கவில்லை! உண்மையை அம்பலப்படுத்திய மத்திய அரசு!

0
136

சென்னையில், கிண்டியில் உள்ள PIB அலுவலகத்தில், மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஸ் சர்க்கார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை தமிழக அரசு எதிர்க்கவில்லை. தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழ்நாடு அரசு புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளது.

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான எந்த ஒரு கருத்தையும் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்யவில்லை. கல்வி அறிவும், உயர் கல்வி பயில்வோர் எண்ணிக்கையுமே(GER) தரத்தை அளித்துவிடாது. புரிந்துகொள்ளும் திறன், கற்றல் வெளிப்பாடு, வேலைவாய்ப்புக்கேற்ற படிப்பு, ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகள்தான் உண்மையான தரத்தை வெளிக்கொண்டு வரும்.

Also Read : தமிழ்நாடு தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை! உண்மையை அம்பலப்படுத்திய மத்திய அரசு!

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தமிழக அரசின் பரிசீலனையில் உள்ளது. புதிய கல்விக் கொள்கை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தும் நிலையில், மூன்றாவது மொழி என்பது இந்தி உட்பட எந்த மொழியாக வேண்டுமானாலும் இருக்கலாம். எந்த மொழியையும் தேசிய கல்விக் கொள்கை திணிக்கவில்லை.

அதே நேரத்தில் தாய் மொழிக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதுதான் கல்விக் கொள்கையின் நோக்கம். மாநிலங்கள் அவரவர் விருப்பத்துக்கேற்ப கல்விக் கொள்கைகளை வடிவமைத்துக் கொள்கின்றன. ஆனால் அது தரமானதா என்பதை ஆராய வேண்டும்.

அதனால்தான் தேசிய அளவில் தரமான கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதை அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும்.
தமிழ்நாட்டில் கல்வியின் தரம் நன்றாக உள்ளது. புதிய கல்விக் கொள்கை அமலானால், தரம் இன்னும் மேம்படும். புதிய கல்விக் கொள்கை குறித்துத் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த, மத்திய அரசு தயாராக உள்ளது.’’ இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry