சற்றுமுன்

ஹூஸ்டன் நகரிலுள்ள தூதரகத்தை மூட 72 மணிநேரம் கெடு! சீனாவுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் டிரம்ப்

ஹூஸ்டன் நகரிலுள்ள தூதரகத்தை மூட 72 மணிநேரம் கெடு! சீனாவுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுக்கும் டிரம்ப்

வாஷிங்டன் : ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் தூதரகத்தை 72 மணிநேரத்துக்குள் மூட அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் அமெரிக்காவில் பரவத் தொடங்கியதற்குப் பின் சீனாவை அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வருகிறார். இதைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளால் இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் நாளுக்கு நாள் விரிசல் அதிகரித்து வந்தது.

இந்தச் சூழலில் அமெரிக்க மக்களின் தனிப்பட்ட தகவல்கள், அறிவுசார் சொத்துரிமை, கரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இருக்கும் ரகசியத் தகவல்கள் ஆகியவற்றை சீனாவின் ஹேக்கர்கள், சீனத் தூதரகத்தின் உதவியுடன் திருடுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி, அதுகுறித்து அமெரிக்க நீதித்துறையும் எச்சரிக்கை விடுத்தது.

இதையடுத்து முதல் கட்டமாக ஹூஸ்டன் நகரில் உள்ள சீனத் துணைத் தூதரகத்தை அடுத்த 72 மணிநேரத்துக்குள் மூடுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையே வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், சீனத் தூதரகங்களை மூட உத்தரவிட்டுள்ளீர்களா என்று நிருபர்கள் கேட்டனர்.

அதற்கு அதிபர் ட்ரம்ப் பதில் அளிக்கையில், “ஆமாம், ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகம் மூடப்பட உள்ளது. இன்னும் கூடுதலாக சீனத் தூதரகங்கள் மூடப்படவும் சாத்தியங்கள் இருக்கின்றன என்பதையும் நான் மறுக்கவில்லை.

ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அங்கு தீப்பிடித்தது, அதனால் மூடிவிட்டோம் என நினைத்திருந்தோம். ஆனால் என்னைப் பொறுத்தவரை அங்குள்ள ஆவணங்கள் எரிக்கப்பட்டதாகவே நினைக்கிறேன்எனத் தெரிவித்தார்.

CATEGORIES
error: Content is protected !!