சற்றுமுன்

கொரோனா அறிகுறி தெரிஞ்சா உடனே வாங்க! நுரையீரலுக்கு பரவமா தடுத்திடலாம்:  அமைச்சர் விஜயபாஸ்கர் 

கொரோனா அறிகுறி தெரிஞ்சா உடனே வாங்க! நுரையீரலுக்கு பரவமா தடுத்திடலாம்:  அமைச்சர் விஜயபாஸ்கர் 

கரோனா நோய்த்தொற்றுக்கான அறிகுறி தெரிந்து, ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை மையத்துக்கு வந்தால், நுரையீரலுக்கு நோய் பரவுவதை தடுக்கமுடியும் என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,  ஓமந்தூரார் மருத்துவமனையில் படுக்கை வசதி 750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனையில் 200 படுக்கை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2174 கர்ப்பிணிகளில் 1517 கர்ப்பிணிகள் குணமடைந்துள்ளனர். பிரசவ காலத்தில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். குழந்தைகள் பிறந்த 210 நாட்களுக்குள் தொற்றை குணப்படுத்தியுள்ளோம். தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஜூலை 1 அன்று 42 சதவீதமாக இருந்த நோய் பாதிப்பு தற்போது 22.5 சதவீதமாக குறைந்துள்ளது. வீட்டுத்தனிமையைப் பொறுத்தவரை சென்னையில் மட்டுமே அவர்கள் கேட்டுக்கொள்வதன் அடிப்படையில் அவர்கள் வீட்டில் உள்ள நிலைமையை ஆராய்ந்து அனுமதிக்கிறோம். மற்ற மாவட்டங்களில் அனுமதிப்பதில்லை.

சென்னையில் மிக அதிக அளவில் தொற்று அதிகரித்தபோது அனுமதித்தோம். தற்போது அதிக அளவில் பரிசோதனை செய்வதை அரசு ஊக்குவித்து வருகிறது. பொதுமக்கள் லேசான காய்ச்சல் மாதிரி இருக்கிறது, உடல் வலிப்பதுபோல் உள்ளது, லேசாக மூச்சு விட சிரமமாக உள்ளது போல் தெரிகிறது என்றால் ஆரம்பத்திலேயே சிகிச்சைக்கு வந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. ஆரம்பத்தில் சிகிச்சைக்கு வந்தால் அது நுரையீரலுக்கு பரவாமல் தடுக்கலாம்.

உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதல் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நோயிலிருந்து மீள்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

CATEGORIES
error: Content is protected !!