சற்றுமுன்

கோவிட்-19! நுரையீரல் மட்டுமல்ல, அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும்! எச்சரிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள்!

கோவிட்-19! நுரையீரல் மட்டுமல்ல, அனைத்து உறுப்புகளையும் பாதிக்கும்! எச்சரிக்கும் எய்ம்ஸ் மருத்துவர்கள்!

கோவிட் – 19 கிருமி தொற்று அனைத்து உடல் உறுப்புகளையும் செயலிழக்க வைக்கும் அளவுக்கு அபாயம் மிக்கது என எய்ம்ஸ் மருத்துவமனை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லியில் நிதி ஆயோக் அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட ஆய்வு கருத்தரங்கில், இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் பல்துறை மருத்துவர்கள் கலந்து கொண்டனர். அப்போது கோவிட் – 19 கிருமி தொற்றால் நுரையீரல் மட்டுமல்ல இதயம், மூளை மற்றும் நரம்பு மண்டலம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பாதிக்கப்படும் என்ற அதிர்ச்சி தகவலை அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

பெரும்பாலான நோயாளிகள், அறிகுறி முழுமையாக தென்படாதவர்களாகவோ அல்லது, குறைவான பாதிப்புகளுடன் அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், அவர்களில் பலருக்கு பக்கவாதம், இதயத்தில் அடைப்பு போன்றவை ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ACE2 Receptors மூலமாக கோவிட்-19 வைரஸ் பரவி, நுரையீரல் மட்டுமல்லாமல், மற்ற உடல் உறுப்புகளையும் பாதிப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.  குறைந்த அறிகுறியுள்ள கோவிட் – 19 நோயாளிகள் பலருக்கு மாரடைப்பு, பக்கவாதம், நரம்பு மண்டல பாதிப்பு, இரத்தம் உறைதல், இரத்தக் கட்டு ஆகியவற்றின் ஆரம்ப அறிகுறிகள் உறுதியாகி இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே கோவிட் – 19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை, ஆரம்ப நிலை, மிதமான பாதிப்பு மற்றும் அதிகளவு பாதிப்பு ஆகிய மூன்று வகையாக பிரித்து, நுரையீரல் தவிர்த்த, பிற உறுப்புகளின் செயல்பாடுகளை பரிசோதிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். கோவிட்-19 நுரையீரலை பாதித்து சுவாச பிரச்சனையை மட்டுமே ஏற்படுத்தும் என்ற கண்ணோட்டத்தை மருத்துவ உலகம் மாற்றி கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

CATEGORIES
error: Content is protected !!