இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகரிப்பு! அமெரிக்க நிறுவன ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

0
247

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் நெட்வொர்க் கன்டேஜியன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் (Network Contagion Research Institute) இந்துக்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

Also Read : பூமி பூஜை செங்கற்களை எட்டி உதைத்த தருமபுரி திமுக எம்.பி.! கோபமடைந்த கட்சியினர் ஒருமையில் பேசியதால் பரபரப்பு!

அந்த இன்ஸ்டிட்யூட்டின் தலைவரும், இணை நிறுவனருமான ஜோயல் ஃபிங்கள்ஸ்டீன், ”இந்துக்களுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரங்கள், மீம்ஸ் போன்றவை 1000% அதிகரித்துள்ளதைக் காண்கிறோம். வெள்ளை இனத்தவரும், இஸ்லாமியர்களும் இன்னும் பிறரும் இந்த வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர்.

அமெரிக்காவிலும், கனடாவிலும் சில நாட்களாகவே இந்துக் கோயில்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. அதேபோன்ற கீழ்த்தரமான விஷயங்கள் தற்போது பிரிட்டனிலும் நடந்துள்ளது. இந்து ஃபோபியா என்ற இந்து வெறுப்பு மிகவும் சிக்கலானது. இந்த அபாயகரமான போக்கு அண்மைக்காலமாக வளர்ந்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source : Quantitative Methods for Investigating Anti-Hindu Disinformation

மேலும், இந்துக்கள் பரந்துப்பட்ட சமூகமாக அமெரிக்காவில் வாழ்கின்றனர். அமெரிக்காவின் வளர்ச்சிக்கு அவர்கள் நிறைய செய்திருக்கிறார்கள். அமெரிக்க ஜனநாயகக் கொள்கைகளை வளர்ப்பதில் அவர்களின் பங்களிப்பு இருந்துள்ளது. அமெரிக்க சமூகம் அவர்கள் மீது வெறுப்பை உமிழ்கிறது. எஃப்பிஐ தகவலின்படி அமெரிக்காவில் 2020-ல் மட்டும் இந்துக்களுக்கு எதிரான குற்றங்கள் 500 சதவீதம் அதிகரித்துள்ளது’ என்று கன்டேஜியன் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரவித்துள்ள அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஹேங்க் ஜான்சன், “மதங்களுக்கு எதிரான வெறுப்பு துரதிர்ஷ்டவசமானது. அமெரிக்காவில் இந்துக்களுக்கு எதிராக நிறைய வெறுப்புச் சம்பவங்கள் நடந்துவருகின்றன. அமெரிக்காவின் வளர்ச்சியில் இந்துக்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. அதை மதிக்க வேண்டும்.” என்றார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry