சற்றுமுன்

திருப்பதி ஆன்லைன் தரிசன டிக்கெட்! 90 நாட்களுக்கு செல்லும் என தேவஸ்தானம் அறிவிப்பு!

திருப்பதி ஆன்லைன் தரிசன டிக்கெட்! 90 நாட்களுக்கு செல்லும் என தேவஸ்தானம் அறிவிப்பு!

திருமலை திருப்பதியில் தரிசனத்துக்காக பெற்ற ஆன்லைன் டிக்கெட், 90 நாட்கள்வரை செல்லுபடியாகும் என்று திருமலா திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

கொரோனா 2-ம் அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் இலவச தரிசனத்தை முற்றிலும் ரத்து செய்துள்ளது. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யும் பக்தர்கள் எண்ணிக்கையையும் கோயில் நிர்வாகம் பாதியாக குறைத்துள்ளது. தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு அமலில் உள்ளதால், தரிசனத்திற்கு வர முடியாமல் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, ஏப்ரல் 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனா தொற்று காரணமாக வரமுடியாத சூழ்நிலை ஏற்படும் நிலையில், அவர்கள் 90 நாட்களுக்குள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி உள்ளவர்கள் திருமலைக்கு வரவேண்டாம் என்றும் தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது. அதேநேரம், ஆன்லைன் மூலம் வாடகை அறை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்களுக்கு அறை பெறுவதை தேவஸ்தானம் எளிதாக்கி உள்ளது. திருப்பதியில் உள்ள அலிபிரி பாதாள மண்டபம், சோதனை சாவடி, ஸ்ரீவாரிமெட்டு உள்ளிட்ட இடங்களில் வாடகை அறை ரிசிப்ட் ஸ்கேன் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு பக்தர்கள் ஸ்கேன் செய்து கொண்டால், திருமலைக்கு செல்லும் முன் அவர்கள் பதிவு செய்த அலைபேசி எண்ணிற்கு துணை விசாரணை அலுவலக எண் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். அதன்பின்னர் பக்தர்கள் மத்திய விசாரணை அலுவலகத்திற்கு செல்லாமல் நேராக துணை விசாரணை அலுவலகத்திற்கு சென்று தங்களின் அறையை பெற்றுக் கொள்ளலாம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

CATEGORIES
error: Content is protected !!