பீங்கான் பாத்திரங்களை உபயோகிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்! Ceramic Cookware’s Top Health Benefits!

0
38
The term ‘ceramic’ refers to any item forged by mixing natural clay and organic additives with water, moulding the mixture into the desired shape and then firing it at extreme heat to solidify the structure.

பார்ப்பதற்கு பளபளப்பாகவும், கண்ணைக் கவரும் டிசைன் மற்றும் வடிவமைப்புகளிலும் கிடைக்கும் ‘செராமிக்’ எனப்படும் ‘பீங்கான்” பாத்திரங்கள் பலரது தேர்வாக இருக்கின்றன. சீனாவில் முதன்முறையாக கண்டுபிடிக்கப்பட்ட பீங்கான், தற்போது உலகம் முழுவதும் பெரும்பான்மையான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிமு 9000-10000 முதலே பீங்கான் பாத்திரங்கள் புழக்கத்தில் இருந்துள்ளது.

சமைப்பதைவிட சமையலுக்கு உபபோகித்த பாத்திரங்களை சுத்தம் செய்வது பலருக்கும் கடினமான வேலையாக இருக்கிறது. அந்த வகையில், பாத்திரம் கழுவும் நேரத்தையும் செராமிக் பாத்திரங்கள் குறைக்கின்றன. காரணம், இவற்றில் எண்ணெய், உணவுத் துகள்கள் ஆகியவை அதிகமாக ஒட்டுவது இல்லை. இதனால் செராமிக் பாத்திரங்களை விரைவாக
சுத்தப்படுத்த முடியும்.

பீங்கான் சமையல் பாத்திரங்களின் தனித்துவமான அம்சங்களில் ஒன்று அதன் எதிர்வினை அல்லாத மேற்பரப்பு ஆகும். அதாவது, தக்காளி, சிட்ரஸ் அல்லது வினிகர் போன்ற அமில உணவுகளுடன் தொடர்பு கொள்ளாது, உங்கள் உணவுகள் தேவையற்ற உலோக சுவை இல்லாமல் அவற்றின் உண்மையான சுவைகளைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது.

Also Read : இரவு சாப்பிட்ட பிறகு இதை செய்யவே செய்யாதீங்க..! 7 Things You Should Never Do After Dinner!

பீங்கான் பாத்திரங்கள் நீடித்து நிலைக்கும் தன்மை வாய்ந்தவை. அவை நீண்ட நாட்களுக்கு உழைக்கும். பீங்கான் விரிசல்களை எதிர்க்கும். நல்ல தரமான பீங்கான் பொருட்கள் அவ்வளவு எளிதில் உடையாது. காலங்கள் சென்றாலும் அவை அப்படியே இருக்கும்.

பீங்கான் நுண்துளை இல்லாதவை. அதாவது அதில் வைக்கப்படும் உணவுப் பொருள்களின் மனம், அது ஏற்படுத்தும் கறைகள் அல்லது சுவைகளை உறிஞ்சாது. இவற்றை சுத்தம் செய்வதும் பராமரிப்பதும் மிகவும் எளிது. மேலும், பாக்டீரியா வளர்ச்சியின் அபாயத்தையும் குறைக்கிறது. சரும உணர்திறன் வாய்ந்தவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கிறது.

பீங்கான் பாத்திரங்கள் அதிக வெப்பநிலையை தாங்கும். சூடான உணவுப் பொருட்களை அதில் வைத்தாலும் அவற்றை தாங்கி நிற்கும் வல்லமை படைத்தவை. பிங்கான் பூச்சு பூசப்பட்ட பாத்திரங்களை 500 டிகிரி பாரன்ஹீட் வரை சூடுபடுத்தினாலும் அது எவ்விதமான ரசாயன புகையையும் வெளியிடாது. இதற்கு தரமான பீங்கான் பாத்திரங்களை வாங்கி பயன்படுத்துவது முக்கியமானது.

பிங்கான் பூச்சு பூசப்பட்ட உலோகப் பாத்திரங்களை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும். இவற்றில் ஏதேனும் விரிசலோ, கீறலோ ஏற்பட்டால் அடிப்பகுதியில் உள்ள உலோகம் சமைக்கும் உணவுடன் கலக்க நேரிடும். கீறல் விழுந்த பிங்கான் பாத்திரங்களை சுத்தப்படுத்துவது கடினமாக இருக்கும்.

பீங்கான் பூசப்பட்ட சமையல் பாத்திரங்கள் வெப்பத்தை சமமாக விநியோகிக்கும் திறன் கொண்டவை. சூடான இடங்களைத் தடுப்பதற்கும், சீரான சமையலை உறுதி செய்வதற்கும் பீங்கான் பாத்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. காய்களை வேகவைக்கிறீர்களோ, காய்கறிகளை வதக்குகிறீர்களோ அல்லது மீன்களை வறுக்கிறீர்களோ, பீங்கான் சமையல் பாத்திரங்கள் முழுவதுமாக சமைப்பதை உறுதி செய்கின்றன. கேஸ் ஸ்டவ், எலக்ட்ரிவ் ஸ்டவ் மற்றும் இன்டக்ஷன் ஸ்டவ் உள்ளிட்டவைகளில் பீங்கான் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்தலாம்.

நிக்கல் மற்றும் குரோமியம் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள்; உலோகங்களை உணவில் வெளியிடக்கூடிய துருப்பிடிக்காத எஃகு பான்களைப் போலன்றி, பீங்கான் சமையல் பாத்திரங்கள் பொதுவாக உலோகங்களை வெளியேற்றாது. உணவில் உலோக மாசுபாடு குறித்து அக்கறை கொண்டவர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான விருப்பமாக அமைகிறது. பீங்கான் சமையல் பாத்திரங்களின் நச்சுத்தன்மையற்ற தன்மை சுகாதார உணர்வுள்ளர்களின் தேர்வாகும்.

நான் ஸ்டிக் பாத்திரங்களோடு ஒப்பிடும்போது குறைந்த எண்ணெய் அல்லது கொழுப்புடன் ஆரோக்கியமான சமையலை செராமிக் பாத்திரங்கள் அனுமதிக்கிறது. சுவை அல்லது சமையல் செயல்திறனை தியாகம் செய்யாமல், கொழுப்பு உட்கொள்ளலைக் குறைக்க விரும்புவோருக்கு பீங்கான் சமையல் பாத்திரங்கள் மிகவும் நன்மை பயக்கும்.

பீங்கான் பாத்திரங்களில் சேமிக்கப்படும் உணவு பாதுகாப்பாக இருக்கும். உணவு அல்லது பானங்களில் இருந்து ரசாயனங்கள் அல்லது நச்சுக்களை வெளியேற்றாது. பாதுகாப்பான உணவு மற்றும் ஆரோக்கியமான உணவு அனுபவத்தை இது உறுதி செய்கிறது.

பீங்கான் பாத்திரங்கள் இயற்கையான பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. இவற்றை மறுசுழற்சி செய்யலாம் அல்லது மறு பயன்பாடு செய்யலாம். எனவே, இவை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளன. பீங்கான் பாத்திரங்களை தரமானவைகளாகப் பார்த்து வாங்கினால் அவை பல ஆண்டுகளுக்கு உழைக்கும். பல தலைமுறைகள் தாண்டி நிற்கும்.

Also Read : கத்திரிக்காயின் பிரமிப்பூட்டும் நன்மைகள்! தவிர்க்கவே கூடாத பட்டியலில் பிரிஞ்சாலுக்கு முக்கிய இடம்!

பீங்கான் பாத்திரங்களைக் கையாளும் முறை:

செராமிக் பூச்சு பூசப்பட்ட பாத்திரங்களை மென்மையான திரவம் கொண்டே சுத்தப்படுத்த வேண்டும். கரடு முரடான ஸ்கிரப்பர்களை பயன்படுத்தாமல் ஸ்பாஞ்சு கொண்டு இவற்றை சுத்தப்படுத்துவது நல்லது. செராமிக் பாத்திரங்களில் சமைக்கும்போது குறைவான அல்லது மிதமான தீயை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக சூடாக இருக்கும் செராமிக் பாத்திரங்களை உடனடியாக குளிர்ச்சியான வெப்பநிலைக்கு உட்படுத்தகூடாது.

செராமிக் பாத்திரங்களை டிஷ்வாஷரால் சுத்தப்படுத்துவதைவிட கைகளால் சுத்தப்படுத்துவதே சிறந்தது. செராமிக் பாத்திரங்களில் சமைப்பதற்கு பிளாஸ்டிக் அல்லது மரத்தால் ஆன கரண்டிகளையே பயன்படுத்த வேண்டும். உலோகக் கரண்டிகள் செராமிக் பூச்சுகளில் கீறலை உண்டாக்கும்.

பீங்கான் கப்புகளில் காப்பியோ டீயோ குடித்து முடித்த பின் உடனே அவற்றைக் கழுவி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் கறை படிய வாய்ப்புகள் உள்ளன. அதேபோல பீங்கான் தட்டுகளில் உணவு உண்டு முடித்த பின், உடனே சுத்தம் செய்து வைத்து விட்டால் நீடித்து உழைக்கும். நேரடியான சூரிய ஒளியில் அவற்றை காய வைக்கக் கூடாது. அப்படி வைத்தால் அதனுடைய வண்ணம் மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

பீங்கான் பாத்திரங்கள் கனமாக இருக்கும். எனவே அவற்றை கையாளும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். இவற்றை மைக்ரோவேவ் அடுப்பில் உபயோகப்படுத்தக் கூடாது. ஒழுங்கற்ற வடிவம் கொண்ட, சேதம் அடைந்த, தரம் குறைந்த பிங்கான் பாத்திரங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். மேலும் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் வண்ணங்கள் அதிகமாக பூசப்பட்ட பீங்கான் பாத்திரங்களை வாங்குவதையும் தவிர்க்கவும். ஏனெனில் இந்த வண்ணங்களை அடர்த்தியாக காட்டுவதற்காக அவற்றுடன் ஈயம் அதிகமாக கலக்கப்படுகிறது.

Image Source : Getty Image

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry