சற்றுமுன்

தீபாவளிக்காக அதிரடி ஆஃபர்! ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் கார் நிறுவனங்கள்!

தீபாவளிக்காக அதிரடி ஆஃபர்! ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கும் கார் நிறுவனங்கள்!

மாருதி, ஹோண்டா, ஹூண்டாய், டாடா, டொயோட்டா, டாட்சன் உள்பட பல முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்கள் பண்டிகை கால சலுகையாக ஒவ்வொரு கார் மாடலுக்கும் ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்குகின்றன.

அக்டோபர் மாதத்தில் மொத்த விற்பனையில் பயணிகள் வாகன விற்பனையில் 18 சதவீத வளர்ச்சி ஏற்பட்டது. ஆட்டோமொபைல் டீலர் அசோசியேசன் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, செப்டம்பர் மாதத்தில் 24 சதவீத வீழ்ச்சி ஏற்பட்டிருந்தது. அக்டோபர் மாதத்தில் ஒட்டுமொத்தமாக வாகனப் பதிவில் 5 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

கொரோனாவால் படுத்துக் கொண்ட கார் மார்க்கெட்டை அலேக்காக தூக்கி நிறுத்தி இருக்கிறது நவராத்திரி பண்டிகை. கடந்த ஆண்டு விற்பனையை விட இந்த ஆண்டு கிட்டத்தட்ட ஒரு மடங்கு விற்பனை கூடுதலானதால், முன்னணி கார் நிறுவனங்கள் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளன. இது பண்டிகை காலங்களில் வாகனத் தொழில் புத்துயிர் பெறுவதற்கான அறிகுறிகளாக கருதப்படுகிறதுகுறிப்பாக தீபாவளி பண்டிகையை ஒட்டி வாகன விற்பனை இந்த மாதம் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.

அதேநேரம், கோவிட்-19 ஏற்படுத்திய பொருளாதார தாக்கம் இன்னும் குறையாத போதிலும் , கார் தயாரிப்பாளர்கள் தள்ளுபடிகள் மற்றும் பண்டிகைகால சலுகைகளை வழங்குவதன் மூலம் விற்பனையை அதிகரிக்க முடியும் என்று நம்புகின்றனர். இதன்படி, மாருதி, ஹோண்டா, ஹூண்டாய், டாடா, டொயோட்டா, டாட்சன் மற்றும் பல முன்னணி கார் தயாரிப்பாளர்களும், ஒவ்வொரு மாடலுக்கும் ரூ.2.5 லட்சம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளார்கள்.

மாருதி, ஹோண்டா, ஹூண்டாய், டாடா, டொயோட்டா, டாட்சன், ரெனால்ட் உள்பட முன்னணி கார் நிறுவனங்களும் தங்களின் ஒவ்வொரு மாடல் கார்களுக்கும் குறிப்பிட்ட தள்ளுபடித்தொகை, தங்க நாணயங்கள், பரிசுகள் போன்ற சலுகைகளை அறிவித்துள்ளன. பண்டிகை காலத்தை முன்னிட்டு புதிய கார்களுக்கான விற்பனை களைகட்டி உள்ள அதே நேரத்தில், பயன்படுத்தப்பட்ட கார்களுக்கான விற்பனையும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

CATEGORIES
error: Content is protected !!