வெட்ட வெளிச்சமான பாஜக – திமுக உறவு! நாணய வெளியீட்டுக்கு ராகுலை ஏன் அழைக்கவில்லை? என ஈபிஎஸ் கிடுக்கிப்பிடி கேள்வி?

0
102
Why did the DMK not condemn the Hindi language on the Rs 100 coin? - EPS.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, “ஆளுநர் தேநீர் விருந்தில் அரசாங்கம் கலந்துகொள்ளும். ஆனால் தி.மு.க கலந்து கொள்ளாது, என்று வேடிக்கையான விளக்கத்தைக் கொடுக்கின்றனர். தி.மு.க-வுக்கு ஸ்டாலின்தான் தலைவர். அந்தக் கட்சிக்கு துரைமுருகன்தான் பொதுச்செயலாளராக இருக்கிறார்.

அந்த இரண்டு பேருமே ஆளுநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, தி.மு.க கலந்துகொள்ளாது என இரட்டை வேடம் போடுகின்றனர். அ.தி.மு.க ஆட்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக நாங்களும் நாணயம் வெளியிட்டோம். அப்போது பா.ஜ.க-வுடன் கூட்டணியில் இருந்தும், அவர்களை அழைக்கவில்லை.

Also Read : இந்திய மருத்துவ மாணவர்களில் 6-ல் ஒருவர் தற்கொலை முயற்சி! தேசிய மருத்துவ ஆணைய சர்வேயில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுவதும், நாணயம் வெளியிடுவதும் அவர்களின் விருப்பம். அதேநேரத்தில் அதை யார் வெளியிடுவது என்பதுதான் கேள்வி. ராகுல் காந்தியை அழைத்து ஏன் நாணயத்தை வெளியிடவில்லை. இதிலிருந்து தி.மு.க, பா.ஜ.க ரகசிய உறவு வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவில், பாஜக பங்கேற்க வேண்டுமென்றால், ஆளுநர் கொடுக்கும் தேநீர் விருந்து முதல்வர் பங்கேற்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடுத்த நிர்பந்தமே முதல்வர் தேநீர் விருந்தில் பங்கேற்றதற்கான காரணம். தமிழ், தமிழ் என்று முரசு கொட்டும் திமுக, 100 ரூபாய் நாணயத்தில் இந்தி மொழி பொறித்திருப்பதற்கு ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை?

ஆளுநர் மாளிகை – தேநீர் விருந்து. Pic Credit : Vikatan

டெல்லி தி.மு.க. தேநீர் விருந்தில் பா.ஜ.க. தலைவர் நட்டா பங்கேற்கிறார். ஆனால் ராகுல் காந்தியை அழைக்கவில்லை. நாங்கள் பா.ஜ.க. அணியில் இருந்தபோது கூட, பா.ஜ.க. தலைவர்களை அழைத்து விழா நடத்தவில்லை. சென்னையில் கருணாநிதி சிலையை முன்னாள் ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். அவர் பாஜக தலைவராகவும், அமைச்சராகவும் இருந்தார். இப்படி பாஜகவைச் சேர்ந்த ஒருவரை வைத்துதான் திமுகவில் சிலையை திறந்தனர்.

Also Read : ஏ.சி. அறையில் ஜம்முனு தூங்குற ஆளா? இந்த 6 பிரச்னைகள் வரும்னு தெரியுமா? உஷாரா இருங்க..!

தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தனித்தன்மை இல்லை. அவர்கள் தி.மு.க கட்சியில் இணைந்துவிட்டனர். அங்கு மக்களின் பிரச்னைக்கு யார் குரல் கொடுக்கிறார்கள். விலைவாசி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட எந்த பிரச்னை பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை. பதவி அதிகாரத்துக்காக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர்.

தி.மு.க மற்றும் கூட்டணியின் 39 எம்.பி-க்களை மக்கள் தேர்வு செய்துள்ளனர். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள். கேரளாவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த மாநிலத்துக்கு சாதகமாக குரல் எழுப்புகிறார்கள். தி.மு.க-வுக்கும், கருணாநிதி குடும்பத்துக்கும் தமிழ்நாட்டை பற்றி எப்போதும் கவலை இல்லை. அ.தி.மு.க ஆட்சியிலேயே முல்லைப்பெரியாறு அணை எந்தளவுக்கு பலமாக உள்ளது என்பதை உறுதி செய்துவிட்டோம். அணைக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என திட்டமிட்டு அந்த மாநில அரசும், எம்.பி-க்களும் எதையாவது கூறிக்கொண்டிருக்கிறார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry