இனிப்பு எப்போது சாப்பிட வேண்டும்? சாப்பிடுவதற்கு முன்பா, பிறகா? Sugar and Digestion!

0
56
Discover how consuming sweets after meals can affect your digestion. This article examines the potential consequences for your digestive health and overall well-being.Getty Image.

பொதுவாக, மக்கள் விருந்துக்குப் போகும்போது சாப்பிட்ட பிறகு ஐஸ்கிரீம், பழங்கள், ஸ்வீட் போன்றவை சாப்பிடுவார்கள். இது செரிமானத்திற்கு உதவுவதாக சொல்லப்படுகிறது. இதில் எந்த அளவு உண்மை இருக்கிறது?

பாரம்பரியமாக நமது உணவு முறையில் சாப்பிட்டதும் இனிப்பு சாப்பிடுவது சில தோஷங்களை நீக்குவதாக சொல்லப்படுகிறது. எனவே, சாப்பிட்டதும் இனிப்போ அல்லது பாயசமோ சாப்பிடுவது நம்முடைய வழக்கம். பெரும்பாலான மக்களுக்கு உணவு சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடுவது Psychological Satisfactionஐ கொடுக்கும். இனிப்பு சாப்பிடுவது என்பது நமக்கு ஒரு மகிழ்ச்சியை கொடுக்கும். நன்றாக சாப்பிட்டதற்கான மனநிறைவைக் கொடுக்கும்.

Also Read : நல்ல தூக்கத்திற்கு வைட்டமின் பி6 ஏன் அவசியம்? Vitamin B6 உள்ள உணவுகள் எவை?

இதுபோல இனிப்பு எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை பாதிக்குமா? என்று கேட்டால், அது இனிப்பை எவ்வளவு எடுத்துக் கொள்கிறீர்கள், எத்தனை முறை எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதை பொறுத்திருக்கிறது. எப்போதாவது கல்யாண விருந்துக்கு போகும்போது சாப்பிட்டதும் இனிப்பு சாப்பிடுவது என்பது ஏற்புடையதாகும். இதுவே, தினமும் உணவுக்குப் பின்பு இனிப்பை எடுத்துக்கொள்ளும் பழக்கம் இருந்தால் அது உடலுக்கு நல்லதல்ல.

நம் உடலில் செரிமானம் அதிகமாக நடைபெற வேண்டும் என்றால், Digestive Enzymesஐ சற்று அதிகமாக சுரக்க வைக்க வேண்டும். Digestive Enzymes நம்முடைய வாய், வயிறு, கணையம், கல்லீரல் ஆகியவற்றில் இருந்து சுரக்கிறது. இது மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, புரதச்சத்துக்களை ஜீரணமாக்க உதவுகிறது.

Discover why Ayurveda advises eating sweets before meals. Learn how this ancient practice supports digestion, balances doshas, and promotes overall well-being. Getty Image.

நாம் எடுத்துக்கொள்ளும் இனிப்பு பொருட்களுக்கு Digestive Enzymesஐ துண்டக்கூடிய தன்மை கிடையாது. ரசம், இஞ்சி டீ போன்றவற்றில் இருக்கும் Spices, செரிமான நொதிகளை(Digestive Enzymes) தூண்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, இனிப்பு சாப்பிடுவது ஜீரணத்திற்கு கண்டிப்பாக உதவாது.

இனிப்புகள் மிக வேகமாக இன்சுலின் தன்மையை அதிகரிக்கச் செய்யும். இது இன்சுலின் எதிர்ப்புத்தன்மை, உடல் பருமன் உள்ளவர்களுக்கு நல்லதில்லை. மாவுச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக்கொண்டு அத்துடன் இனிப்புகளை எடுப்பது உடலில் கொழுப்பை அதிகரிக்கும். இனிப்பைக் கடைசியில் சாப்பிடுவது செரிமான நெருப்பை அணைக்கும் மற்றும் அமில சுரப்பு காரணமாக நொதித்தல் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தும். உங்கள் உணவை சர்க்கரையுடன் முடிப்பது வாயு உருவாவதற்கும் வழிவகுக்கும்.

Getty Image

மேலும், வளர்சிதை மாற்றம் மற்றும் தூக்க வழக்கத்தில் நாள்பட்ட எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தலாம். சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடுவது பற்களையும் பாதிக்கும். இதனால் பற்சொத்தை ஏற்படும் வாய்ப்புகள் உள்ளது. உணவை இனிப்புகளுடன் முடித்தால், அது அமிலத்துடன் வினைபுரிந்து, வயிற்று உப்புசம், அமிலத்தன்மை மற்றும் இரைப்பை அடைப்பு போன்ற செரிமானத் தடைகளை எதிர்கொள்ள துவங்குமென சில ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன. சாப்பிட்டவுடன் இனிப்பாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் பழங்கள் சாப்பிடுவது சிறந்ததாகும். எனவே, சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை.

அதேநேரம், சிறந்த செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்காக நமது உணவை இனிப்புகளுடன் தொடங்க வேண்டும் என ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. நம்முடைய ஆயுர்வேத உணவு முறையானது, இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு மற்றும் துவர்ப்பு என சுவைகளை அடிப்படையாக கொண்டது.

Also Read : செரிமானத்தை சீராக்கும் 10 முக்கிய பழக்க வழக்கங்கள்! சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா?

அதாவது, ஒருவர் இனிப்புடன் உணவை தொடங்க வேண்டும். அதைத் தொடர்ந்து மத்தியில் உப்பு, இறுதியில் துவர்ப்பு அல்லது காரமான ஒன்றைச் சாப்பிட வேண்டும். ஆறு சுவைகளையும் திருப்திப்படுத்தும் உணவை உண்பது ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஒரே மாதிரியான சுவை அல்லது சில சுவை கொண்ட உணவுகள் பலவித உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

சாப்பிடும் முன்னர் செரிமான சக்தி மிக அதிகமாக இருக்கும். இதனால் இனிப்பு உணவுகள் எளிதில் ஜீரணமாகும். சாப்பிட்ட பிறகு இனிப்பு சாப்பிடுவது உங்கள் வளர்சிதை மாற்றத்தை மெதுவாக்கும். உடலில் மெதுவான வளர்சிதை மாற்றம் இருந்தால், நீரிழிவு, உடல் பருமன், தைராய்டு கோளாறுகள் போன்ற பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். உணவுக்கு முன் இனிப்புகளை எடுத்து கொள்வது, உடலில் செரிமான ஹார்மோன்களை வெளியிடுவதற்கும், செரிமானத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்.

Disclaimer: If you have any concerns about your digestive health or blood sugar levels, please consult with a healthcare professional or a registered dietitian.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry