அதிக விலைக்கு தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல்! ஒழுங்கு முறை ஆணையத்தை உதாசீனப்படுத்தி அரசு அத்துமீறுவதாக குற்றச்சாட்டு!

0
31
Dr. Anbumani Ramadoss demands the cancellation of power tenders called by the electricity board without the necessary approval from the Tamil Nadu Electricity Regulatory Commission.

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியைப் பெறாமல், மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக கோரப்பட்டுள்ள ஒப்பந்தப்புள்ளிகளை மின்சார வாரியம் ரத்து செய்ய வேண்டும் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கோடைக்கால மின் தேவை கடுமையாக அதிகரிக்கும் என்பதால், அதை சமாளிப்பதற்காக தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்க, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் முன் அனுமதியை பெறாமலேயே, ஒப்பந்தப்புள்ளிகளை மின்வாரியம் கோரியிருக்கிறது.

Also Read : விளம்பரத் துறையாக மாறிவிட்ட பள்ளிக்கல்வித்துறை! பெற்றோருக்கு ஒருவேளை உணவு வழங்காமல் நடத்துவதுதான் பெற்றோரைக் கொண்டாடுவோம் மாநாடா?

மின்சார வாரியத்தின் இந்த அத்துமீறல் மிகவும் கவலையளிப்பதாக தெரிவித்திருக்கும் மின்சார ஒழுங்குமுறை ஆணையம், இனியும் இத்தகைய அத்துமீறல்கள் தொடரக்கூடாது என்றும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஆட்சியாளர்களின் சுயலாபத்திற்காக அரசும், மின்வாரியமும் எப்படியெல்லாம் விதிகளை வளைக்கின்றன என்பதற்கு இதுவே சான்று.

தமிழ்நாட்டில் நடப்பாண்டின் கோடைக்கால மின் தேவை, கடந்த ஆண்டு கோடைக்காலத்தின் அதிகபட்ச மின் தேவையாக 02.05.2024-ஆம் நாளில் பதிவான 20,830 மெகாவாட், 30.04.2024-ஆம் நாளில் பயன்படுத்தப்பட்ட 45.43 கோடி யூனிட் ஆகியவற்றை விட 6% அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், மின்வாரியத்திற்கு மரபுசார்ந்த ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 15,707 மெகாவாட் மட்டும் தான். இதை சமாளிக்க 24 மணி நேரமும் கிடைக்கும் வகையில் 2750 மெகாவாட் மின்சாரமும், அதிகபட்ச மின் தேவை உள்ள மாலை நேரங்களில் மட்டும் கிடைக்கும் வகையில் 5775 மெகாவாட் மின்சாரமும் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தபுள்ளிகளை மின்சார வாரியம் கோரியிருக்கிறது.

தமிழ்நாட்டின் மின்சாரத் தேவை உற்பத்தியை விட அதிகமாக இருந்தால் அதை வெளிச்சந்தையிலிருந்து தான் வாங்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அதற்கு முன்பாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும், முன் அனுமதியையும் பெற வேண்டும். மின்சார வாரியம் எந்த விஷயத்திலும் அத்துமீறி செயல்படக்கூடாது என்பதற்காகவும், அதன் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்காகவும் தான் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதை சற்றும் மதிக்காத மின்சார வாரியமும், தமிழ்நாடு அரசும் தங்களின் விருப்பங்களையும், தேவைகளையும் செயல்படுத்தி விட்டு, அதற்குப் பிறகு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதியை கட்டாயப்படுத்திப் பெறுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. கோடைக்காலத்திற்கு தேவைப்படும் மின்சாரத்தை வாங்குவதற்கான ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரும் விஷயத்திலும் மின்சார வாரியம் அதே அணுகுமுறையைத் தான் பின்பற்றியிருக்கிறது. மின்வாரியத்தின் இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள ஒழுங்குமுறை ஆணையம், இனிவரும் காலங்களில் இத்தகைய போக்கு கூடாது என்றும் எச்சரித்துள்ளது.

ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்படுவதற்கு முன்பாக ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலையும், முன் அனுமதியையும் கோரினால், அது பல்வேறு நிபந்தனைகளை விதிக்கும்; தங்களின் விருப்பங்களையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றிக் கொள்ள அது பெரும் தடையாக இருக்கும் என்று அரசும், மின்சார வாரியமும் கருதுகின்றன.

அதனால் தான், தங்களின் விருப்பப்படி ஒப்பந்தப்புள்ளிகளை கோரி விட்டு, அதற்குப் பிறகு ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலை பெறுவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றன. இது சட்டப்பூர்வ அமைப்பான தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தை அவமதிக்கும் செயலாகும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry