பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில், ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிராக வரும் 15-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் அழைப்பு விடுத்தார்.
தற்போது,காவிரி டெல்டாவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை முடக்கிவிட்டு,ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற O.N.G.Cக்கு துணை போகும் விடியா திமுக அரசை கண்டித்து, விவசாயிகள் சங்கங்கள் ஒருங்கிணைந்து 15 -8-2022 அன்று நடத்த உள்ள உண்ணாவிரத போராட்டத்திற்கு கழகத்தின் ஆதரவினை கோரினர். 2/2
— AIADMK (@AIADMKOfficial) August 10, 2022
திருவாரூர் மாவட்டம் பெரியகுடியில் ஓஎன்ஜிசியின் எண்ணெய் கிணறுகள் உள்ளன. அதில் கடந்த 2013 ஆம் ஆண்டு எரிவாயு கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்பட்டது. மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து அந்தக் கிணறு மூடப்பட்டது. சில ஆண்டுகளுக்கு முன்பு திரும்பவும் அந்த கிணற்றிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி ஆயத்தமானது. மக்கள் போராட்டத்தால் அந்த முயற்சி கைவிடப்பட்டது.
Also Read : நெல் கொள்முதலை கார்ப்பரேட்டுகளிடம் தாரைவார்ப்பதா? கொந்தளிக்கும் விவசாய சங்கங்கள்!
இந்த நிலையில், முந்தைய ஆட்சியில் காவிரி டெல்டா பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிககப்பட்டதால் புதிய எண்ணெய் கிணறுகளைத் தோண்டுவதற்கு ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு தமிழகத்தில் அனுமதி தரப்படவில்லை. அதனால் பழைய கிணறுகளில் இருந்து மீண்டும் எண்ணெய் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுக்க அந்த நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பெரியகுடியிலுள்ள பழைய கிணற்றிலிருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்க ஓஎன்ஜிசி திட்டமிட்டது. அதற்கான ஒப்புதல் வேண்டி ஓஎன்ஜிசி நிறுவனம் தமிழக அரசை அணுகியது. அந்த கிணற்றைப் பயன்படுத்துவது குறித்து மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதற்கு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள், பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தால் அந்த கூட்டம் ரத்தானது.
Also Read : இடுக்கி, முல்லைப் பெரியாறு அணைகள்! கேரளாவின் பொய் பரப்புரைகள்! அம்பலப்படுத்தும் விவசாயிகள் சங்கம்!
இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்த பி.ஆர். பாண்டியன், “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட டெல்டா பகுதியில் மீண்டும் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு தமிழக அரசு மறைமுகமாக துணைபோகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து வருகிற 15-ந் தேதி(திங்கட்கிழமை) சுதந்திர தினத்தன்று மன்னார்குடியில் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள், அரசியல் கட்சியினர் பொதுநல அமைப்புகளை ஒருங்கிணைத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.” என்றார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry