சற்றுமுன்

பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்! டெல்லி ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

பிரணாப் முகர்ஜி உடல்நிலை கவலைக்கிடம்! டெல்லி ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 84.

மூளை நரம்பில் உறைதந்துபோன ரத்தத்தை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவதற்காக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகர்ஜி அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை முன்னதான உடல் உபாதைகளை அடுத்து, அவருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா தொற்று உறுதியானது.

ஆனாலும், அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில், உரிய பாதுகாப்புகளுடன் மருத்துவர்கள், மூளையில் உறைந்திருந்த ரத்தத்தை நீக்கினார்கள். அறுவை சிகிச்சை மற்றும் கொரோனா தொற்று காரணமாக பிரணாப்புக்கு மூச்சு விடுவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

பிரணாப்பின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும், விரைவில் அவர் அபாய கட்டத்தைத் தாண்டுவார் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று பிராணப்புக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைந்து வர வேண்டுமென ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரணாப் விரைவில் உடல்நலம் பெறவேண்டி பிரார்த்தனை செய்யுமாறு அவரது மகன் அபிஜித் முகர்ஜி கேட்டுக்கொண்டுள்ளார்.

CATEGORIES
error: Content is protected !!