மினரல்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த நெல்லிக்காய், பல்வேறு நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. நெல்லிக்காய் சாற்றில் வைட்டமின் சி அதிகம் உள்ளது, இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் சளி மற்றும் இருமலை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும் இது செரிமானத்திற்கும் உதவுகிறது, ஆரோக்கியமான மற்றும் அழகான சருமத்தை ஊக்குவிக்கும் நெல்லிக்காய் ஜூஸ் ஆனது முடி வளர்ச்சியை பலப்படுத்துகிறது மற்றும் கண் பார்வை திறனையும் மேம்படுத்துகிறது.
நெல்லியில் நமது ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் சக்திவாய்ந்த கலவையைக் இது கொண்டுள்ளது.
1. வைட்டமின்கள்
- வைட்டமின் சி நிரம்பியுள்ளது.
- வைட்டமின்கள் A, B1, B2, B3, B5, B6, B12 மற்றும் K ஆகியவையும் அடங்கியுள்ளது.
2. கனிமங்கள்
- பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன.
3. ஆக்ஸிஜனேற்றிகள்
- ஃபிளாவனாய்டுகள், டானின்கள் மற்றும் எலாஜிக், கேலிக் மற்றும் ஃபைலெம்பெலிக் அமிலங்கள் போன்ற பாலிபினோலிக் கலவைகள் உள்ளன.
ஊட்டச்சத்து நிறைந்ததாக இருப்பதால், நமது ஆரோக்கியத்தை அதிகரிக்க நெல்லிக்காய் சக்திவாய்ந்த இயற்கை வழியாகும். இதிலுள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்கள் எனப்படும் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளால் ஏற்படும் சேதத்தை எதிர்த்துப் போராடவும் இது உதகிறது. கூடுதலாக, ஆம்லாவின் பல்வேறு வகையான தாதுக்கள், உடல் செல்கள் மற்றும் திசுக்களின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்கு உதவக்கூடும்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் புளிப்புச் சுவை நிறைந்த நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை பற்றி உங்களுக்கு தெரியுமா? தினமும் காலையில் வெறும் வயிற்றில் ‘ஸ்நெல்லிக்காய் ஜுஸ்’ (ஆம்லா ஜூஸ்) குடிப்பதால் கிடைக்கும் சில அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம்.
கல்லீரல் ஆரோக்கியம்: நெல்லிக்காய் அதன் ஹெபடோப்ரோடெக்டிவ் குணங்களுக்கு நன்கு அறியப்பட்டதாகும்., அதாவது, கல்லீரலின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. நெல்லிக்காய் சாறு குடிப்பதால் கல்லீரல் சுத்திகரிப்பு மற்றும் பொதுவான கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நன்கு உதவும்.
வெயிட் லாஸ்: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது உடல் எடையை குறைத்து நல்ல வடிவத்தை பெற உதவும். நெல்லிக்காய் சாறு செரிமான அமைப்பை வலுப்படுத்தும். இதனுடன் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களை கொண்டுள்ளது. இது கொழுப்பை ‘Burn’ செய்யவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவுகிறது. மேலும் நெல்லிக்காய் சாற்றில் ஃபேட்டி ஆசிட்ஸ், வைட்டமின்கள் உள்ளன மற்றும் கொழுப்பை சேர்க்காமல் ஆற்றலை அதிகரிக்கும் கூறுகளும் உள்ளன.
நச்சுக்களை நீக்குகிறது: வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடித்தால் அது உங்கள் உடல் அமைப்பில் உள் நச்சுத்தன்மையை நீக்கும். நெல்லிக்காய் சாற்றில் தண்ணீர் உள்ளது, இது அதிக சிறுநீர் உற்பத்திக்கு உதவும். அதிகப்படியான சிறுநீர் ஓட்டம் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுகளை அகற்றவும், சிறுநீரக கற்களை அகற்றவும் உதவுகிறது. மேலும் நெல்லிக்காய் சாறு சிறுநீர் தொற்றுகளையும் குறைக்கும்.
கண் பார்வைக்கு நல்லது: கண் பார்வை திறனை அதிகரிப்பதில் நெல்லிக்காய் ஒரு கில்லாடி. நெல்லிக்காயில் கரோட்டின் உள்ளது, இது பார்வை மேம்பாட்டிற்கு உதவுகிறது. நெல்லிக்காய் சாற்றை தினமும் உட்கொள்வது உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கண்புரை, எரிச்சல் மற்றும் ‘ட்ரை ஐஸ்’ போன்ற பிரச்சனைகளைப் போக்கும்.
ஆற்றலை அதிகரிக்கும்: காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால், நாள் முழுவதும் அதிக ஊட்டச்சத்தும் ஆற்றலும் கிடைக்கும். நெல்லிக்காய் ஜூஸை ஒரு எனர்ஜி பூஸ்டர் அல்லது எனர்ஜி ட்ரின்ங் என்றே கூறலாம். அது அப்படிதான் செயல்படுகிறது, நாள் முழுவதும் நம்மை ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் வைத்திருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: வைட்டமின் சி அதிகம் உள்ள நெல்லிக்காய் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. வைட்டமின் சி ஆனது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் பலப்படுத்தும் ஒரு வைட்டமின் ஆகும். நெல்லிக்காயில் ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல எட்டு மடங்கு வைட்டமின் சி உள்ளது. இது பாக்டீரியா மற்றும் வைரஸ் தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை தடுப்பதற்கும் உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது: நெல்லிக்காய் செரிமான குணங்கள் கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. வெறும் வயிற்றில் குடிக்கப்படும் நெல்லிக்காய் ஜுஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலுக்கு நிவாரணமாகவும் மற்றும் செரிமானத்துக்கும் உதவும்.
முடி ஆரோக்கியம்: நீண்ட காலமாகவே ஆரோக்கியமான முடியை பராமரிக்க நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது. இது மயிர்க்கால்களை பலப்படுத்தவும், முடி உதிர்வதை நிறுத்தவும், முடி பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது. நெல்லிக்காய் சாற்றைத் தொடர்ந்து உட்கொள்வது முடி உதிர்வைக் குறைக்க உதவும்.
கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது: குறைந்த கொழுப்பு அளவுகள், குறிப்பாக குறைந்த அடர்த்தி கொழுப்புப் புரதம்(LDL கொலஸ்ட்ரால்) நெல்லிக்காயில் உள்ளது. இதன் மூலம் இதய ஆரோக்கியம் மேம்படும்.
Also Read : தினமும் தலைக்கு குளித்தால் முடி கொட்டுமா? ஷாம்புவோடு கண்டிஷ்னர் பயன்படுத்துவது கட்டாயமா?
சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: கொலாஜனை உருவாக்க வைட்டமின் சி அவசியம், இது நமது சருமத்தை மென்மையாகவும் இளமையாகவும் வைவத்திருக்க உதவுகிறது. ஆம்லா சாற்றில் உள்ள கலவைகள் முகப்பருவைக் குறைக்க உதவும், இது தெளிவான சருமத்திற்கு வழிவகுக்கும்.
அழற்சி எதிர்ர்பு குணங்கள்: நெல்லிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பொருட்கள் உடல் வீக்கத்தை குறைக்க உதவும். வீக்கத்தைக் குறைப்பது ஆரோக்கியத்தில் பலவிதமான நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஏனெனில், உடல் வீக்கம் என்பது பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளுடன் தொடர்புடையது.
மூட்டு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது: நெல்லிக்காய் சாற்றை தொடர்ந்து குடிப்பதால் மூட்டு வலி மற்றும் வீக்கம் குறையும். கீல்வாதத்துடன் போராடுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
வளர்சிதை மாற்றம்: நெல்லிக்காய் ஜூஸ் அடிக்கடி குடிப்பதால், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம். இது எடை மேலாண்மை, இரத்த சர்க்கரை கட்டுப்பாடு மற்றும் ஆற்றல் மட்டங்களில் நன்மைகளுக்கு வழிவகுக்கும்.
Also Read : சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா? இதோ உங்களுக்கான பதில்! Vels Exclusive
வெற்று வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் :
வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிப்பது வயிற்றை தொந்தரவு செய்யலாம். சில சந்தர்ப்பங்களில், வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாற்றை உட்கொள்வது ஆசிட் ரிஃப்ளக்ஸ் எனப்படும் எதுக்களித்தலை ஏற்படுத்தும்.
நெல்லிக்காய் ஜுஸின் முக்கிய சிறப்பம்சங்களின் சுருக்கம்:
- ஆம்லா வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களின் சக்திவாய்ந்த மூலமாகும்.
- வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தி, செரிமான ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியமான முடி மற்றும் சருமத்தை ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
- தினசரி நெல்லிக்காய் ஜுஸ் அருந்தி வர, கொழுப்பின் அளவைக் குறைக்கவும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவும்.
நெல்லிக்காய் ஜூஸ் அருந்தும் முறை:
காலையில் வெறும் வயிற்றில் ஒரு சிறிய கிளாஸ் (சுமார் 30-50 மில்லி) நெல்லிக்காய் சாற்றைக் குடிக்கவும். சாறு மிகவும் அடர்த்தியாகவோ அல்லது புளிப்பாகவோ இருந்தால், தண்ணீர் சேர்த்துக்கொள்ளவும். சுவையை மேம்படுத்த நீங்கள் ஒரு டீஸ்பூன் தேன் அல்லது ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கலாம். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் தினமும் நெல்லிக்காய் சாற்றை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry