சற்றுமுன்

பாகிஸ்தானில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இந்து கோயில்! பரமஹன்ஸ் ஜி மஹராஜின் சமாதியையும் சூறையாடிய வன்முறை கும்பல்!

பாகிஸ்தானில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட இந்து கோயில்! பரமஹன்ஸ் ஜி மஹராஜின் சமாதியையும் சூறையாடிய வன்முறை கும்பல்!

பாகிஸ்தானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்கு கிருஷ்ண துவாரக மந்திர், தீ வைக்கப்பட்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு அருகிலுள்ள ஸ்ரீ பரமஹான்ஸ் ஜி மஹராஜின் சமாதியும் அழிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.

கோயிலும், சமாதியும் நிலத்தை ஆக்கிரமித்துவிட்டதாகக் கூறி, ஆயிரம் பேர் கொண்ட கும்பல் இந்த வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக நேரில் பார்த்தவர்கள் கூறும்போது, “அந்தக் கும்பல் பல மணி நேரம் போராடி கோயிலையும், சமாதியையும் இடித்து தீ வைத்தது. கோயிலை இடிக்கும்போது போலீஸார் தலையிடவில்லை” என்றனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிலரைப் பிடித்து போலீஸார் விசாரிக்கின்றனர். இந்து கோயில் அழிக்கப்பட்ட வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

பாகிஸ்தானில் கோயில் தகர்க்கப்படுவது இது முதல் முறை அல்ல. இதே கிருஷ்ண துவாரக மந்திர் கோயில் 1997-ம் ஆண்டு இடிக்கப்பட்டது. 2015-ல் பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்குப் பிறகு, கோயிலை புனரமைக்க உள்ளூர் முஸ்லீம்கள் ஒப்புக் கொண்டனர். இருந்தபோதிலும், கோயிலுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்பாக இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

பாகிஸ்தானில் வசிக்கும் ரோஹித் குமார் என்பவர் உள்ளூர் ஊடகங்களிடம், “கோயிலை புனரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்தை தாண்டவில்லை, ஆக்கிரமிப்பு செய்யவில்லை. கோயிலை இடித்ததன் மூலம் முஸ்லிம்கள்தான் ஒப்பந்தத்தை மீறியுள்ளனர் என்றார். பாகிஸ்தானில் இந்துக்கள் மிகப்பெரிய சிறுபான்மையினர். அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளின்படி, 75 லட்சம் இந்துக்கள் பாகிஸ்தானில் வாழ்கின்றனர்.  பெரும்பான்மையான இந்து மக்கள் சிந்து மாகாணத்தில் வசிக்கின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

CATEGORIES
error: Content is protected !!