சாப்பிட்ட பிறகு ஒரு துண்டு வெல்லம்! அந்த மாத்திரையையே நிறுத்திடலாம்! ரசாயனம் கலக்காத வெல்லத்தை கண்டுபிடிப்பது எப்படி?

0
115
Pure jaggery is usually dark brown or black, while white or yellowish jaggery may be chemically treated.

வெல்லம் என்பது கரும்பில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகை இனிப்பு. சர்க்கரையின் ஒரு ஆரோக்கியமான மாற்று என்று கூறலாம். முன்னோர்கள் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெல்லம் கலந்து குடித்துவிட்டுதான் அன்றைய தினத்தை தொடங்குவார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். இதை பானகம் என்றும் சொல்வார்கள். அதாவது, வெல்லத்தை கரைத்து, அதில் சுக்குத்தூள், ஏலக்காய் தூள், சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பார்கள்.

இப்படி குடிப்பது அன்றைய நாள் முழுவதும் செரிமான அமைப்பை சீராக வைத்துக்கொள்ளுமாம். வெல்லம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பண்புகளை கொண்டுள்ளது. அதாவது இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் மற்றும் பல வைட்டமின்கள் வெல்லத்தில் உள்ளன. உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். வெல்லத்தை ஆங்கிலத்தில் Jaggery என்று அழைப்பார்கள். “சூப்பர்ஃபுட் ஸ்வீட்னர்” எனப்படும் வெல்லம் சுக்ரோஸ் வடிவில் சர்க்கரையைக் கொண்டுள்ளது.

Also Read : பேப்பர் கப்பில் டீ, காபி அருந்துவதில் உள்ள ஆபத்துகள்! குடல் புற்றுநோய் வரை வரக்கூடும் என எச்சரிக்கை!

செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது: வெல்லம் செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உணவிற்கு பிறகு வெல்லம் சாப்பிடுவது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. வாயு, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது: உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவது ஆற்றலை அதிகரிக்கும். இதனை உட்கொள்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எலும்புகளை வலுவாக்கும்: உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும். வெல்லத்தில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல வகையான சத்துக்கள் போதுமான அளவில் காணப்படுகின்றன. இது எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்: இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வெல்லம் ஒரு மருந்து. வெல்லம் சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். வெல்லத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவும். அதேநேரம் வெல்லத்தை அதிகமாக உட்கொள்வது கொலஸ்ட்ரால் பிரச்சனையில் தீங்கு விளைவிக்கும்.

Also Read : இரவில் சாப்பிடக்கூடாத 25க்கும் மேற்பட்ட உணவுகள்! நிம்மதியாக தூங்க இதை செய்துதான் ஆக வேண்டும்!

உடல் எடையை குறைக்க உதவும்: வெல்லத்தை தொடர்ந்து சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது. இதன் காரணமாக எடையை எளிதாக குறைக்கலாம்.

இரத்த சோகையில் பலன் தரும்: வெல்லத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் இரத்த சோகை ஏற்படாது. இரத்த சோகை நோயாளிகளுக்கு வெல்லம் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். வெல்லத்தில் இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் உடலில் இரத்தத்தை அதிகரிக்கும். உடலில் ரத்தம் குறைவாக இருப்பவர்கள் கண்டிப்பாக வெல்லம் சாப்பிட வேண்டும்.

சுவாசப் பிரச்சனையை தடுக்கும்: வெல்லம் உடலில் இருந்து தூசி மற்றும் தேவையற்ற துகள்களை வெளியேற்றுவதாக நம்பப்படுகிறது. இது சுவாசக்குழாய், நுரையீரல், உணவு குழாய்கள், வயிறு மற்றும் குடல்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. மிளகு, துளசி, உலர்ந்த இஞ்சி அல்லது எள்ளுடன் வெல்லம் சேர்த்து சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது.

Also Read : கருப்பு பூஞ்சைகள் உள்ள வெங்காயத்தை சாப்பிடலாமா? Black Fungus on Onion and Mucormycosis!

நீரிழிவு நோயாளிகள் வெல்லம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். 10 கிராம் வெல்லத்தில் கிட்டத்தட்ட 65%-85% சுக்ரோஸ் உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள் இதைத் தொடர்ந்து உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், ஆயுர்வேதமும் நீரிழிவு நோயாளிகளுக்கு இதை உட்கொள்ள பரிந்துரைக்கவில்லை. சர்க்கரை மற்றும் வெல்லம் இரண்டும் ஒரே மாதிரியான பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. ஆனால், வெல்லம் தயாரிக்கும் செயல்முறை சர்க்கரையிலிருந்து வேறுபட்டது.

ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் வெல்லம் ஒரு சிறப்பு இடத்தில் உள்ளது. மிளகுடன் சேர்த்து வெல்லத்தை சாப்பிடும் போது பசியை தூண்ட முடியும்.  ஆயுர்வேத கூற்றுப்படி, வெல்லத்தை வழக்கமாக சாப்பிடுவதால் உங்கள் பார்வையை மேம்படுத்த முடியும். வெல்லம் என்பது முகப்பருவிற்கு சிகிச்சையளிக்கவும், உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்தவும் உதவுவதாக அறியப்படுகிறது. கல் உப்புடன் சேர்த்து வெல்லத்தை சாப்பிடுவதால், புளித்த ஏப்பம் வரும் தொல்லையை குணப்படுத்த முடியும்.

பொதுவாகப் பார்த்தால், வெல்லம், அடிப்படையில் சுத்திகரிக்கப்படாத சர்க்கரை. வெல்லத்தில் உள்ள சத்துக்கள் சர்க்கரையை விட அதிக நன்மை பயக்கும். அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமான வெல்லத்தில், கார்போஹைட்ரேட், புரோட்டீன், கோலின், பீடைன், வைட்டமின் பி12, பி6, ஃபோலேட், கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், மெக்னீசியம், செலினியம் மற்றும் மாங்கனீஸ் ஆகியவை உள்ளன. மாதவிடாய் வலிக்கும் வெல்லம் ஒரு சிறந்த மருந்தாகும். மொத்தத்தில், வெல்லத்தை அளவோடு உட்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க சிறந்தது என்று சொல்வது சரியாக இருக்கும்.

வெல்லத்தை அதிகமாக உட்கொள்வதால், வயிற்றுவலி, சளி, இருமல், குமட்டல், தலைவலி மற்றும் வாந்தி போன்ற பல்வேறு வகையான அலர்ஜிகள் ஏற்படலாம். சுகாதாரமற்ற சூழ்நிலையில் வெல்லம் தயாரிக்கப்பட்டு அசுத்தங்கள் இருந்தால், அது குடல் தொற்றுக்கு வழிவகுக்கும். வெல்லத்தை பற்றி இவ்வளவு தெரிந்துகொண்ட பிறகு, ரசாயனம் கலக்காத, சுத்தமான வெல்லத்தை வாங்குவது எப்படி என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும் அல்லவா?

வெல்லம் தயாரிக்க கரும்புச் சாற்றைக் காய்ச்சும் போது அதில் தடைசெய்யப்பட்ட அல்லது உடல்நலனுக்கு ஊறு விளைவிக்கக் கூடிய ரசாயனச் சேர்மானங்கள் ஏதேனும் சேர்க்கப்பட்டிருக்கிறதா? என்பதை ஒருமுறைக்கு இருமுறை உறுதி செய்து கொண்ட பிறகே வெல்லம் வாங்க வேண்டும்.

  • கடைகளில் வெல்லம் வாங்கும் போது அதில் ஒரு துண்டு எடுத்து வாயில் போட்டுப் பாருங்கள். வெல்லம் இனிப்புச் சுவையுடன் இருந்தால் அது சுத்தமான வெல்லம். ஆனால் சற்றே உப்புத்தன்மையுடன் இருந்தால் அதில் அதிகளவிலான மினரல் உப்புக்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்று அறிந்து கொள்ள வேண்டும். அதுமட்டுமல்ல வெல்லத்தில் உப்புத் தன்மை இருந்தால் அது ஃப்ரெஷ் ஆகத் தயாரிக்கப்பட்ட வெல்லம் இல்லை நாட்பட்ட வெல்லம் என்பதையும் கண்டறிந்து கொள்ளலாம். ஏனெனில் நாட்பட்ட வெல்லத்தில் உப்புச்சுவை அதிகமிருக்கும்.
  • வெல்லத்தை வாயில் இடுகையில் ஊன்றிக் கவனித்தால் மட்டுமே உணரும் அளவுக்கு வாய் கசக்கிறது எனில் அந்த வெல்லம் தயாரிக்கப்படும் போது உச்சபட்ச கொதிநிலையில் கேரமலைஸேஷனுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்று பொருள். கேரமலைஸேஷன் என்பது வெல்லத்திற்கு இயற்கையாக அல்லாமல் செயற்கையாக பிரெளன் நிறம் ஏற்றப்படுதல் என்று பொருள்.
  • வெல்லத்தை வாயிலிடுகையில் கரையாத உப்புக்கள் ஏதேனும் தென்படுகின்றவனா என்றும் ஆராய வேண்டும். அப்படி உப்பு போன்ற பொருட்கள் நாக்கில் நெருடினால் அதிக இனிப்புத் தன்மையை உருவாக்கும் பொருட்டு செயற்கையாக இனிப்புச் சுவையூட்டும் உப்புகள் அதில் கலக்கப்பட்டுள்ளன என்று பொருள்.
  • வெல்லம் வாங்கும் போது அதன் நிறத்தையும் கவனிக்க வேண்டும். அடர் பிரெளன் நிற வெல்லமே தூய்மையான வெல்லத்திற்கு அறிகுறி. அப்படியல்லாது மஞ்சள் நிறத்தில் வெல்லம் இருந்தால் அதை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். மஞ்சள் நிற வெல்லம் பொதுவாக வேதியியல் சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவதால் தான் அதற்கு அந்த நிறம் கிடைக்கிறது என்கிறார்கள்.

  • சில வியாபாரிகள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, வெல்லம் தயாரிக்கும் போது அதில் சுண்ணாம்புத் தூளை கலப்படம் செய்கின்றனர். நீங்கள் வாங்கும் வெல்லத்தில் சுண்ணாம்புத் தூள் கலப்படம் உண்டா? இல்லையா? என்பதை அறிய, வெல்லத்தில் ஒரு சிறு துண்டை எடுத்து நீர் நிறைந்த கோப்பையில் இடுங்கள். வெல்லம் கரைந்ததும் பார்த்தால் சுண்ணாம்புத் தூள் கோப்பையின் அடியில் படிந்திருக்கும்.
  • சில நேரங்களில் வெல்லத் தயாரிப்பில் செயற்கை நிறமூட்டிகளும் கூடப் பயன்படுத்தப்படுகின்றன. ஒருவேளை நிறமூட்டிகள் சேர்க்கப்பட்ட வெல்லம் ஒரிஜினல் தூயமையான வெல்லம் போலவே பார்வைக்குத் தட்டுப்படலாம். அம்மாதிரியான சூழலில் தூய வெல்லத்தைக் கண்டுபிடிக்க ஒரு நுட்பமான வழி இருக்கிறது. ஒரு டீஸ்பூன் வெல்லம் எடுத்துக் கொண்டு அதில் 6 மில்லி லிட்டர் ஆல்கஹால் சேர்த்து நன்கு கலக்க வேண்டும், பின் அதில் 20 துளிகள் அடர் ஹைட்ரோ குளோரிக் அமிலம்(HCl) சேர்க்க வேண்டும். அப்படிச் சேர்க்கையில் வெல்லம் உடனே இளஞ்சிவப்பு நிறமாக மாறினால் அதில் செயற்கை நிறமூட்டிகள் அளவுக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளன என்று பொருள்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry