Friday, February 3, 2023

கேரளாவில் பி.எஃப்.ஐ. அமைப்பு வன்முறை! பேருந்துகள் உடைப்பு! பெட்ரோல் குண்டு வீச்சு! ஐகோர்ட் கண்டனம்!

கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அமைப்பு நடத்திவரும் கடையடைப்பின் போது பல இடங்களில் பஸ்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதைக் கண்டித்துள்ள கேரள உயர்நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது.தீவிரவாதிகளுடன் தொடர்பு, தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளித்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நாடு முழுவதும் 13 மாநிலங்களில் பிஎஃப்ஐ அலுவலகம், அதன் தலைவர்கள், நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ, அமலாக்கத்துறை வியாழக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது 100-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர்.

Also Read : உங்களை நம்பி கருணாநிதி கட்சியை ஒப்படைத்தாரா? மு.க. ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் அழைப்பு விடுத்தனர். மாநிலம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு அடைப்பு நடைபெறும் என பிஎப்ஐ அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை மீறி வாகனங்களை இயக்கியவர்கள் மீது கொல்லம், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு உள்ளிட்ட மாவட்டங்களில் மாவட்டங்களில் கல் வீச்சு சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அரசுப் பேருந்துகள் மீதும் கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஹெல்மெட் அணிந்தபடி ஓட்டுநர்கள் பேருந்துகளை இயக்கினர்.

Also Read : இணையதளம் மூலம் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

கன்னூர் மாவட்டம் நாராணயன்பரா பகுதியில் செய்தித்தாள் கொண்டு சென்ற பைக் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. ஆலப்புலா, கோழிக்கோடு, கோட்டயம் போன்ற மாவட்டங்களில் அரசு பஸ்கள், லாரி, ஆட்டோ, கார்களின் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு தாமரசேரியில் லாரி மீது கற்கள் வீசப்பட்டது. கண்ணூர் உளியிலுள்ள நாராயணபாரா எனும் இடத்தில் வாகனம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதனையடுத்து கோவை உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து, வழக்கமாக கேரளாவுக்கு இயக்கப்படும் 30க்கும் மேற்பட்ட தமிழக பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதே போல கேரளாவில் இருந்து கோவைக்கு பெரும்பாலான கேரள மாநில அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இந்த தீடீர் பந்த் காரணமாக தினமும் கேரளா சென்று வரும் பொதுமக்களும், அரசு ஊழியர்களும் அவதியுற்றனர். சில பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன.

Also Read : இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு பிரச்சாரங்கள் அதிகரிப்பு! அமெரிக்க நிறுவன ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.3 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக மார்க்கெட் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். வழக்கமாக நாளை காந்தி மார்க்கெட் விடுமுறை என்பதால் காய்கறிகள் மேலும் தேக்கமடைந்துள்ளது.

போராட்டம் மற்றும் வன்முறைக்கு எதிராக கேரள உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. ‛பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் நடத்தப்படும் போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை நடக்கிறது. அரசு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தப்படுகிறது. பொதுச் சொத்துக்களை சேதப்படுத்துவதை ஏற்க முடியாது. அனைத்து விதமான சாத்தியக்கூறுகளையும் பயன்படுத்தி, வன்முறை எந்த வடிவில் வந்தாலும் அதை மாநிலஅரசு தடுக்க வேண்டும்’ என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles