சற்றுமுன்

அதிகரிக்கும் உதயநிதி தலையீடு! மேலும் சிலர் வெளியேறுவார்கள் – கு.க. செல்வம்

அதிகரிக்கும் உதயநிதி தலையீடு! மேலும் சிலர் வெளியேறுவார்கள் – கு.க. செல்வம்

உதயநிதியின் தலையீடுதான் பிரச்னைக்கு காரணம் என தி.மு..,விலிருந்து நீக்கப்பட்ட ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.., கு..செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை மேற்கு மாவட்ட செயலர் பதவியை எதிர்பார்த்த, கு..செல்வத்திற்கு அப்பதவி வழங்கப்படவில்லை. அதற்கு பதிலாக, உதயநிதியின் ஆதரவாளர் சிற்றரசுக்கு வழங்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த செல்வம், சமீபத்தில், பா.., தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து, அக்கட்சிக்கு ஆதரவு அளித்தார். இதையடுத்து, தி.மு.., வில் இருந்து செல்வம், ‘சஸ்பெண்ட்செய்யப்பட்டார். அவரிடம் விளக்கம் கேட்டு, ‘நோட்டீஸ்அனுப்பப்பட்டது. அதற்கு, செல்வம் பதில் அளித்திருந்தார்.

தி.மு..,வை விட்டு, மூத்த நிர்வாகிகள் அனைவரும் வெளியேறுவர்என, நேற்று முன்தினம், முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கருத்து தெரிவித்து இருந்தார். இந்நிலையில், கு..செல்வத்தை நேற்று நிரந்தரமாக நீக்கி, ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த கு..செல்வம், தெளிவான விளக்கம் அளித்தும் நேரில் சந்திக்க துணிவு இல்லாமல் நீக்கப்பட்டேன். திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது. எனது கடிதத்திற்கு பதில் கடிதம் கூட திமுக தரவில்லை.

இது ஜனநாயக படுகொலை. சட்டசபையில், பா...விற்கு ஆதரவாக செயல்படுவது குறித்து முடிவு செய்யவில்லை. கட்சி சார்பற்று செயல்படுவேன். தற்போது எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை. இதுவரை எந்த கட்சியிலும் சேரவில்லை. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட எந்த கட்சி வாய்ப்பு தருகிறதோ, அந்த கட்சி சார்பில் போட்டியிடுவேன்.

உதயநிதியின் தலையீடுதான் நான் கட்சியிலிருந்து விலக்கப்படுவதற்கு காரணம். திமுகவில் இருந்து நிறைய பேர் வெளியே வருவார்கள். தி.மு..வில் அதிருப்தியில் உள்ள எம்.பி.,க்கள் எம்.எல்..,க்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். மேலும் சிலர் வெளியே வருவார்கள் என்றும் அவர் கூறினார்.

CATEGORIES
error: Content is protected !!