உங்க பேர்ல எத்தனை சிம் கார்டு இருக்குன்னு தெரியுமா? ரூ.2 லட்சம் வரை அபராதம், சிறைத்தண்டனை..! De Activate பண்ண இதமட்டும் செஞ்சா போதும்!

0
146
Taking multiple SIM cards under your name can get you in trouble. You may have to pay a huge penalty if you have taken more SIM cards than what is specified by the telecom law. Violating the rule repeatedly can also land you in jail | Getty Image

இந்தியாவில் ஸ்மார்ட்போன் (Smart Phone), மொபைல் போன் (Mobile Phone), பியூச்சர் போன் (Feature Phone) சாதனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகளவு உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக சிம் கார்டுகளின் (SIM Card) எண்ணிக்கையும் இரண்டு மடங்காக அதிகரித்துவிட்டது. பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் இப்போது இரண்டு சிம் கார்டுகளை பயன்படுத்தும் டூயல் சிம் (Dual SIM) அம்சம் வந்துவிட்டது. ஆகையால், போனில் இருக்கும் ஒரு SIM Slotஐ கூட யாரும் சும்மா விட்டு வைப்பதில்லை. இரண்டு சிம் ஸ்லாட்களிலும் இரண்டு சிம்களை பயன்படுத்துகிறார்கள்.

இதன் காரணமாக சிம் கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட தனிநபரால் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சிம் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த The Telecommunications Act 2023 அனுமதிக்கிறது. அந்த குறிப்பிட்ட எண்ணிக்கையை மீறும் பொழுது, அந்தநபரின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

பலரும் தங்கள் பெயரில் சிம் கார்டுகளை வாங்கி குவித்து இருப்பார்கள். சொல்லப்போனால் பலருக்கும் தனது பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பது கூட தெரியாது. தற்போதுள்ள சட்டப்படி ஒரு தனி நபர் இஷ்டத்திற்கு சிம் கார்டுகளை வாங்கி குவிக்க முடியாது. கடந்த மாதம் 26 ஆம் தேதி The Telecommunications Act 2023 அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ஒருவர் தனது பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகளை மட்டுமே வைத்திருக்க முடியும்.

இதனை மீறி அதிக சிம் கார்டுகள் உங்கள் பெயரில் இருந்தால் ரூ.2 லட்சம் வரை அபராதம் கட்ட வேண்டியிருக்கும். ஜம்மு மற்றும் காஷ்மீர் அல்லது வடகிழக்கு பகுதிகளில் வசிப்பவர்கள் 6 சிம் கார்டுகள் வரை வைத்திருக்கலாம். இந்த விதியை மீறினால் முதல் முறை ரூ. 50,000 அபராதமும், அதைத் தொடர்ந்து மீறினால் ரூ. 2 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். இதேபோல் மற்றொருவரின் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி சிம்கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை, ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

Also Read : இரவில் பசி எடுத்தால் சுகர் பேஷன்ட்டுகள் எதைச் சாப்பிடலாம்? இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்காத ஸ்நாக்ஸ் பட்டியல்!

புதிய தகவல் தொடர்பு சட்டத்தின்படி, தகவல் தொடர்பு நெட்வொர்க்கை நிறுவவோ, இயக்கவோ, சேவைகளை வழங்கவோ அல்லது டவர் போன்ற கட்டமைப்புகளை வைத்திருக்கவோ விரும்பும் எந்தவொரு நிறுவனமும் அரசாங்கத்திடம் உரிய அனுமதி பெற வேண்டும். தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காகவும், தகவல் தொடர்பு சேவைகள், நெட்வொர்க்குகள் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றுக்கான தரநிலைகளை நிர்ணயிக்கும் அதிகாரத்தை இந்த சட்டம் மத்திய அரசுக்கு வழங்குகிறது.

மேலும், “மற்றொருவரின் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி சிம்கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை, ரூ.50 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்” எனவே புதிய விதிகளின் படி 9 சிம் கார்டுக்கு மேல் உங்கள் பெயரில் சிம் கார்டுகள் இருந்தால் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

Also Read : கமிஷன் விவகாரத்தால் காவு வாங்கப்படும் மேயர்கள்! பெரும் நெருக்கடியில் காஞ்சிபுரம் திமுக மேயர்! உடனடியாக நீக்கக் கோரும் சொந்தக் கட்சி கவுன்சிலர்கள்!

உங்கள் பெயரில் எத்தனை சிம்கார்டுகள் உள்ளது என்பது கண்டறிவது பற்றி தெரிந்துகொள்ளலாம். இதற்காக Sanchar Sathi (https://tafcop.sancharsathi.gov.in/telecomUser/.) என்ற இணையதளத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இதில், உங்கள் மொபைல் எண்ணை டைப் செய்ய வேண்டும். உடனடியாக ஒரு ஓடிபி கேட்கும். இந்த ஓடிபியை பதிவு செய்ததும் அடுத்த பக்கத்திற்கு செல்லும்.

அதில், உங்கள் பெயரில் மொத்தம் எத்தனை செல்போன் எண்கள் வாங்கப்பட்டு இருக்கின்றன என்ற விவரம் தோன்றும். அதிலேயே ‘Not My Number’, ‘Not Required’, and ‘Required’ என மூன்று ஆப்ஷன்கள் காட்டும்.
* உங்களுக்கு தெரியாமலே உங்கள் பெயரில் சிம் கார்டு ஆக்டிவாக இருந்தால் ‘Not My Number’ என்ற ஆப்ஷனை தேர்வு செய்து இணைப்பை துண்டிக்க ரெக்யூஸ்ட் கொடுக்கவேண்டும்.
* உங்கள் பெயரில் சிம் கார்டுகள் இருந்து அது தேவையில்லை என நீங்கள் நினைத்தால் not required ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
* குறிபிட்ட எண்களை நீங்கள்தான் உபயோகப்படுத்துகீறீர்கள், எந்த நடவடிக்கையும் தேவையும் இல்லை என்றால், Required என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

யாராவது உங்கள் பெயரில் SIM கார்டுகளை எடுத்து மோசடியில் ஈடுபடுவதற்குப் பயன்படுத்தினால், எங்கு, எப்படி புகாரைப் பதிவு செய்வது என்பதை நீங்கள் அறிந்திருப்பது மிகவும் முக்கியம்.(Call 1930 cyber helpline or file a complaint at cybercrime.gov.in website or nearby police station) அதேபோல், உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை அவ்வப்போது சரிபார்ப்பதும் அவசியம்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry