சற்றுமுன்

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’! பெரும் வரவேற்பை பெற்றுள்ள டீஸர்!

நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘நெற்றிக்கண்’! பெரும் வரவேற்பை பெற்றுள்ள டீஸர்!

நடிகை நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி, அவர் நடித்துள்ள நெற்றிக்கண் படத்தின் டீஸர் வெளியாகி உள்ளது. திரில்லராக உருவாகியுள்ள  இப்படத்தை மிலந்த் ராவ் இயக்கியுள்ளார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் அடுத்து உருவாகியுள்ள படம்தான் ‘நெற்றிக்கண்’. அறம், மாயா, கோலமாவு கோகிலா, ஐரா போல் இதுவும் கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம்தான். மிலந்த் ராய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார். சித்தார்த், ஆண்ட்ரியா நடித்திருந்த ‘அவள்’ படத்தை இயக்கியவர் மிலந்த் ராய் என்பது குறிப்பிடத்தக்கது.

சில மாதங்களுக்கு முன்பு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாள் பரிசாக நெற்றிக்கண் படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அவர் பார்வைக் குறைபாடு உள்ள பெண்ணாக நடித்துள்ளார். ஆனால் தனது நடிப்பின் மூலம் கதாபாத்திரத்திற்கு உயிரோட்டம் கொடுத்துள்ளார் என்பது டீஸரில் தெரிகிறது. இதில் பரபரப்பான த்ரில் காட்சிகளும், அதிரடி காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தப் படத்தை எதிர்பார்த்து நயன்தாராவின் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

2015 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து பெரும் வெற்றிபெற்ற படம் ‘நானும் ரவுடிதான்’. இப்படம் வெளியாகி நேற்றோடு 5 ஆண்டுகள் ஆகின்றன. அப்படத்தின் நினைவாக விக்னேஷ் சிவன் தனது தயாரிப்பு நிறுவனத்துக்கு ரவுடி பிக்சர்ஸ் என்று பெயரிட்டுள்ளார். 2011-ஆம் ஆண்டு வெளியான கொரியன் படமான ‘ப்ளைண்ட்’ படத்தின் ரீமேக் ‘நெற்றிக்கண்’ என்று தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

CATEGORIES
error: Content is protected !!