உஷார்… இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் 48 தரமற்றவை, 5ல் கலப்படம்! Full List Here! நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

0
85
Batches of over 50 drugs, including common medications like paracetamol, calcium, and vitamin D3 supplements, along with high blood pressure and anti-diabetes pills, have failed quality tests conducted by the Central Drugs Standards Control Organisation (CDSCO), India's drug regulator. This has raised concerns about their continued usage.

ஒவ்வொரு மாதமும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உரிய தரத்தில் இல்லாத மருந்துகளின் பட்டியலை வெளியிடும். ஆகஸ்ட் மாதத்துக்கான பட்டியலில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பாராசிடாமல், பேன் டி உள்ளிட்ட 48 மருந்துகள் இடம்பெற்றுள்ளன. பான்-டி, பாராசிட்டமால், BP மருந்துகள், நீரிழிவு எதிர்ப்பு மருந்துகள், வைட்டமின்கள் மற்றும் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் ஆகியவை பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள நன்கு அறியப்பட்ட மருந்துகளாகும்.

கர்நாடகா ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் ஃபார்மசூடிக்கல்ஸ் தயாரிக்கும் பாராசிடாமல் ஐபி 500 மிகி, Alkem Laboratories தயாரிக்கும் பேன் டி, Pure & Cure Healthcare தயாரிக்கும் மாண்ட்யர் எல்.சி.கிட், ஸ்காட்-எடில் ஃபார்மாசியா தயாரிக்கும் க்ளைசிமெட், Unicure India Ltd, Hetero Drugs, Health Biotech Ltd, Hindustan Antibiotics Limited (HAL), Life Max Cancer Laboratories and Meg Lifesciences உள்ளிட்ட நிறுவனங்களின் 48 மருந்துகள் ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்ட பரிசோதனைகளில் உரிய தரத்தில் இல்லை (NSQ – Not of Standard Quality) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மத்திய மருந்து கட்டுப்பாட்டாளர்(Central Drugs Standards Control Organisation (CDSCO) இரண்டு பட்டியல்களை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்று தர சோதனைகளில் தோல்வியுற்ற 48 மருந்துகள், மற்றொன்று ஆகஸ்ட் 2024 இல் “போலி / கலப்படம் / தவறான முத்திரை”(Spurious/Adulterated/Misbranded) என்று அறிவிக்கப்பட்ட ஐந்து மருந்துகளின் பட்டியல்.

List of drugs declared as Spurious/Adulterated/Misbranded: Check here for batch number and manufacturing date.

  1. Pulmosil (Sildenafil Injection)
  2. Pantocid (Pantoprazole Tablets IP)
  3. Ursocol 300 (Ursodeoxych olic Acid Tablets IP)
  4. Telma H (Telmisartan 40 mg and Hydrochlorot hiazide 12.5mg Tablets IP)
  5. Deflazacort Tablets (Defcort 6 Tablets)

Here’s the full list of 48 drugs declared “Not of Standard Quality” in CDSCO’s August 2024 report. Tap here to check the batch numbers and manufacturing dates of these drugs. 

NSQ(Not of Standard Quality) என்று வகைப்படுத்தப்படும் மருந்துகளைத் தயாரிப்பவர்கள் மீது, மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள்(சட்டத்திருத்தம்) 2008ன் (Drugs and Cosmetics Act Amendment 2008) கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். இந்தச் சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை முதல் வாழ்நாள் சிறைத் தண்டனை வரை வழங்கப்படலாம். அதேபோன்று, குறைந்தது பத்து லட்சம் அல்லது, கைப்பற்றப்பட்ட மருந்துகளின் மதிப்பைவிட மூன்று மடங்கு பணம் – இவற்றில் எது அதிகமான தொகையோ அதை அபராதமாக வசூலிக்கலாம்.

Also Read : தினசரி காபி குடிக்கலாமா? நன்மைகள், தீமைகள் குறித்த முழுமையான பகுப்பாய்வு! Benefits and Drawbacks of Daily Coffee!

தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலில், அமாக்சிலின் மற்றும் பொடாசியம் க்லாவுலனேட் மாத்திரைகள் ஐபி (க்லாவம் 625), அமாக்சிலின் மற்றும் பொடாசியம் க்லாவுலனேட் மாத்திரைகள் (மெக்ஸ்க்லாவ் 625), பாண்டப்ரசோல் -டோம்பெரிடோன் காப்ஸ்யூல் ஐபி (பேன் டி) ஆகியவற்றின் போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. போலி மருந்துகள் எனப்படுபவை ஒரு தயாரிப்பின் உண்மையான அடையாளத்தை மறைத்து, மற்றொரு மருந்து போல விற்கப்படுபவையாகும்.

இந்தப் பட்டியலில் உள்ள பிற மருந்துகள் அதன் உள்ளடக்கங்கள், dissolution-அதாவது அந்த மருந்து உடலில் எவ்வாறு கரைந்து உட்கொள்ளப்படுகிறது மற்றும் அதன் தோற்றத்தில் விரிசல் போன்ற புகார்களுக்காக உரிய தரத்தில் இல்லை என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருந்துகளைப் பரிசோதித்தபோது, அவை எந்தத் தொகுப்பில் தயாரிக்கப்பட்டனவோ அந்தக் குறிப்பிட்ட தொகுப்பிலிருந்து விற்கப்படும் மருந்துகள் அனைத்தும் சந்தைகளில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.

Also Read : காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்! வெந்நீர் குடிச்சா…!

அடிக்கடி பயன்படுத்தப்படும் மருந்துகள் உரிய தரத்தில் இல்லை என்ற செய்தி பொதுமக்கள் பலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மக்கள் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு இயக்ககமும், மருந்து வணிகர்களும் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பரிசோதனைகள் வழக்கமான ஒன்று எனக் கூறும் அவர்கள், இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விளைவுகள் ஏதும் இல்லை என்கின்றனர்.

மருந்து தயாரிப்பில் ஏற்படும் சிற்சில தவறுகள் காரணமாக அவை உரிய தரத்தில் இல்லை என்று வகைப்படுத்தப்படுவதாகவும், இது போன்ற கெடுபிடிகள், மருந்துகளை மேலும் தரமானதாக மாற்ற உதவும் என்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத் தலைவர் எஸ்.ஏ. ரமேஷ் கூறுகிறார். ஐந்து விநாடிகளில் வாயில் கரையும் என்று கூறப்பட்ட மருந்து ஆறு விநாடிகள் எடுத்துக் கொண்டால் அது தரத்தில் குறைபாடாகக் கருதப்படும் என்கிறார் அவர்.

மருந்துகளை முறையாக பேக்கிங் செய்யாவிட்டால், முறையாக சேமித்து வைக்காவிட்டால், காலாவதி காலத்தை நெருங்கும்போது அதன் செயல் திறன் குறைந்துவிடும். சில நேரம் ஐவி மருந்துகளில் பாக்டீரியாக்கள் தங்கிவிடும். இன்சுலினை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குக் கொண்டு செல்லும்போது 6 டிகிரி செல்சியஸ்-இல் வைக்க வேண்டும். எனவே இன்சுலின் மருந்தை ஆன்லைனில் வாங்கக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். உரிய தரத்தில் இல்லையென்று வகைப்படுத்தப்படும் மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளுதல் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தரமான மருந்துகளை எப்படித் தெரிந்துக்கொள்ளலாம்?

  • உரிய உட்பொருட்கள் இல்லாத பாராசிடாமல் எடுத்துக்கொண்டால் அது காய்ச்சலை, உடல் வலியைப் போக்காது.
  • தரமில்லாத மருந்துகளை நீண்டகாலத்துக்கு உட்கொண்டால் உடல் உறுப்புகள் பாதிக்கப்படும்.
  • சர்க்கரை , ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு நாள்தோறும் மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் உங்கள் மருத்துவரை ஒருமுறை அணுகிக் கொள்வது நல்லது.
  • கடைகளில் மருந்து வாங்கும்போது அதில் ISO (International Organisation for Standardization) அல்லது WHO-GMP (World Health Organisation Good Manufacturing Practices) என்ற அடையாளம் இருந்தால் அது தரத்துக்கான அறிகுறியாகும்.
  • காலாவதியாவதற்குச் சில நாட்களே மீதமிருக்கும் நிலையில் மருந்துகளை வாங்க வேண்டாம்.
  • ஊசிகள், இன்சுலின் போன்றவற்றை வாங்கும் கடைகளில் உரிய குளிர்சாதனப் பெட்டிகள் இருக்கின்றனவா என்று பார்த்து வாங்க வேண்டும்.

Image Source : Getty Image.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry