Wednesday, May 18, 2022

6 மாதத்துக்கு மேல பென்ஷன் பணம் எடுக்காம இருக்காதீங்க! அப்புறம் வருத்தப்படுவீங்க!

6 மாதங்களுக்கு மேல் ஓய்வூதியப் பணத்தை எடுக்காவிட்டால் ஓய்வூதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 6 மாதத்திற்கு மேல் ஓய்வூதியத்தை எடுக்காத நபர்களின் வங்கிக்கணக்கு விபரத்தை ஓய்வூதியம் வழங்கும் அமைப்புக்கு வங்கிகளே தெரிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

ஓய்வூதியதாரர்கள் கட்டாயமாக இந்த பணத்தை எடுத்தே ஆக வேண்டும் என்று எந்த விதியும் இல்லை. அந்தப் பணம் பெரும்பாலும், முதியவர்களின் உடல்நிலை, குடும்பத்தின் பெரும் செலவுகள் ஆகியவற்றின் போது பயன்படுத்தப்படும். அதுவரை வங்கிக்கணக்கில் இருப்பதை சேமித்து வைக்கும் பழக்கம் என்றுதான் இது நாள் வரையிலும் கருதி வந்தனர். இந்நிலையில், அதற்கும் ஆபத்தாக அமைந்துள்ளது இந்த உத்தரவு. இதனால், இந்த உத்தரவுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles