சற்றுமுன்

பாகிஸ்தானுக்கு அடுத்த பேதி வைத்தியம்! ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க மோடி – அமித் ஷா தீவிரம்!

பாகிஸ்தானுக்கு அடுத்த பேதி வைத்தியம்! ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க மோடி – அமித் ஷா தீவிரம்!

அயோத்திக்குப் பிறகு, மத ரீதியாக, காசி, மதுரா பிரச்னைகள் வரிசையில் இருக்க, பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை மீட்பதற்கான முன்னெடுப்பில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டணி தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகான அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜை, இந்துக்களின் மறுமலர்ச்சிக்கான தொடக்கமாகவே கருதப்படுகிறது. அதேநேரம் ராமர் கோயில் பூமி பூஜை, புதிய கேள்விக்கும் வித்திட்டுள்ளது. நீண்ட நெடிய போராட்டம் முடிவுக்கு வந்துள்ளதா? அல்லது, புதிய போராட்டத்துக்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளதா?

ஹிந்துக்களின் மற்ற புனிதத் தலங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றக்கோருதல், வழிபாடு கூடாது எனபன போன்ற எந்த முன் நிபந்தனைகளும் அயோத்தி தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை. எனவே, பா... திட்டங்களின் படி, அயோத்தி மீட்கப்பட்ட நிலையில், அடுத்து, கிருஷ்ண ஜென்ம பூமியான மதுராவும், புண்ணியமான காசியும் வரிசை கட்டி நிற்கின்றன.

காசி, மதுரா பாக்கி ஹை

கிருஷ்ணர் பிறந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த கோயிலை இடித்து, அதன் பாதியில் ஷாயி ஈத்கா மசூதியும், காசி விஸ்வநாதர் கோயில் அமைந்த இடத்தின் பாதியை இடித்து, அங்கு, கியான் வாபி மசூதியும் மொகலாயர்களால் கட்டப்பட்டுள்ளது. கிருஷ்ணர் பிறந்த சிறை அறை பூட்டப்பட்டு அங்கு இருள் சூழ்ந்துள்ளது. ஏனெனில் அந்த அறை பள்ளிவாசலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்கு வெளியேதான் பூஜை நடக்கும். பாதுகாப்பு என்ற பெயரில், துப்பாக்கிகளுடன் நிற்கும் காவலர்களால், அங்கு இறைத்தன்மையை உணரமுடியாத சூழல் நிலவுவதாக பக்தர்கள் குமுறுகின்றனர்.

புனிதத் தலங்களான காசி மற்றும் மதுராவுக்குச் செல்லும் இந்துக்கள், மனம் வெதும்பித்தான் அங்கிருந்து வெளியே வருவார்கள். அரசியலமைப்புக்கு உட்பட்டு, இந்த இரண்டு புண்ணிய ஸ்தலங்களிலும், ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோயில்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பதே, இந்து அமைப்புகள் என்றில்லை, எந்த அரசியல் கட்சியையும் சாராத நடுநிலை இந்துக்களின் கோரிக்கையும் ஆகும்.

அடுத்த குறி ஆக்கிமிப்பு காஷ்மீர்!

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம், அயோத்தி விவகாரம் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில், ஒரே நாடு, ஒரே சட்டம் அதாவது, பொதுசிவில் சட்டத்தை கொண்டு வர மோடி அரசு திட்டமிடுகிறது. அடுத்த ஆண்டு(2021) ஆகஸ்ட் 5-ல் இந்தச் சட்டம் கொண்டுவரப்படலாம் என கருதப்படுகிறது.

http://Also Read: https://velsmedia.com/how-5-august-redefined-national-politics-in-india/

ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்த இந்த விவகாரங்களோடு, அரசியல் ரீதியாக முன் நிற்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரையும் மீட்டாக வேண்டும் என்பதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளது மோடிஅமித் ஷா கூட்டணி.  ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க உயிரைக் கூட தியாகம் செய்யத் தயார் என நாடாளுமன்றத்தில் அமித் ஷா கூறியதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். அதேநேரம், இது மிகவும் சவாலான காரியம் என்பதையும் அவர்கள் உணர்ந்துள்ளனர்.

ஆக்கிரமிப்பு காஷ்மீரை விட்டு பாகிஸ்தான் வெளியேற வேண்டும் என பி.வி. நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், 1994-ம் ஆண்டு பிப்ரவரி 22-ந் தேதி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் தீர்மானம் இயற்றப்பட்டது. எனவே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து பாகிஸ்தானை விரட்ட, உள்நாட்டு அரசியல் கட்சிகளிடையே மோடிஅமித் ஷா கூட்டணியால் எளிதில் கருத்தொற்றுமையை ஏற்படுத்திவிட முடியும்.

அதேநேரம், பாகிஸ்தான் ஆதரவு சர்வதேச நாடுகளை சமாளிக்க அல்லது ஆதரவைப் பெற துல்லியமான திட்டமிடல் தேவை என்பதை மோடியும், அமித் ஷாவும் உணர்ந்துள்ளனர். அயோத்தி ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழா தந்த உற்சாகம், எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தும் அழுத்தம் ஆகியவை, தங்களது திட்டங்களின் முன்னுரிமையை மாற்ற வேண்டிய கட்டாயத்தை, பாரதிய ஜனதா கட்சிக்கு ஏற்படுத்தியுள்ளது.

CATEGORIES
error: Content is protected !!