Monday, January 24, 2022

தேர்தல் களத்திற்கு தெளிவான வியூகம் வகுக்கும் ரஜினி! திக்குத் தெரியாமல் தவிக்கும் திமுக

எழுத்தாளர் மாரிதாஸ், ஊடகவியலாளர்கள் மதன் ரவிச்சந்திரன், (ஐகோர்ட்) வி.எம். சுப்பையா ஆகியோர் மூலம் தேர்தல் மற்றும் அரசியல் வருகைக்காக ரஜினி வகுக்கும் சக்கர வியூகம், தி.க மற்றும் திமுக தலைமைகளை கலக்கமடையச் செய்துள்ளது

எழுத்தாளர் மாரிதாஸ் விவகாரத்தில் கொஞ்சம் பொறுமையாகக் கவனித்தாலே பல வியூகங்களை நாம் புரிந்துகொள்ள முடியும்ஜூலை 24 காலையில் போலியான Email உருவாக்கி மோசடியில் ஈடுபட்டதாகமாரிதாஸ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுஎன்று புதியதலைமுறை தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது. NEWS18 சார்பாகவே மாரிதாசுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகின. வலைத்தளத்தில் திமுக, திக ஆதரவாளர்கள் இதனை கொண்டாடினர். சங்கி மாரிதாஸ் தலைமறைவு என்று அவர்கள் பதிவிட்டனர்.

இதற்கு காத்திருந்த மாரிதாஸ், சற்று நேரத்தில்தனக்கு வந்த Email குறித்து 10 நாட்கள் முன்பே புகார் கொடுத்துவிட்டதாகவும், அதற்கான ஆதாரத்தையும் வெளியிட்டார். வழக்கு தன் மீதானதல்ல, அந்த போலி Email உருவாக்கிய நபரின் மீதுதான் என்று தெளிவான விளக்கம் கொடுத்து வீடியோ வெளியிட்டார். புதிய தலைமுறை உடனடியாக இதுதொடர்பான செய்தியை நீக்கியது. இதைத்தொடர்ந்து பலரும் அந்தச் செய்தியை உடனே நீக்கத் தொடங்கினர்.

இதில் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால், Email குறித்து 14ஆம் தேதி புகார் அளித்த விஷயத்தை மாரிதாஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிடவே இல்லை. திட்டமிட்டே புகார் அளித்த தகவலை அவர் வெளியிடாமல் இருந்துள்ளார். ஜூலை 24-ல் மாரிதாஸ் மீது வழக்குப் பதிவு என்று செய்தி வெளியிட வைத்து, அடுத்த 15 நிமிடத்தில் வழக்கு தன் மீது அல்ல, அது Email அனுப்பிய நபர் மீதுதான், இதுதான் அதற்கான ஆதாரம் என்று அவர் வெளியிட்டார். ஆக மாரிதாஸ் இதற்காகக் காத்திருந்தார் என்பது புரிகிறது.

 

இது ஒருபுறமிருக்க, News18 தமிழ்நாடு தமிழ் ஆசிரியர் செந்திலை கண்டித்து மாரிதாஸ் வீடியோ வெளியிட, அதனை கண்டித்தும், News18 தமிழ்நாடுக்கு ஆதரவாகவும், திமுக மற்றும் அதன் ஆதரவு இயக்கங்கள் சமூக ஊடகங்களில் களமாடின.

இதேபோன்று News18 தமிழ்நாடு தலைமை நிர்வாகி குணசேகரன், திக, திமுக ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பதையும், குறிப்பிட்ட சித்தாந்தத்தை பின்பற்றுவோருக்கு பணி வழங்குவதாகவும் மாரிதாஸ் அடுத்த குண்டை வீசினார். அதேபோன்று கந்த சஷ்டி கவசத்தை ஆபாசமாக சித்தரித்த கறுப்பர் கூட்டத்தின் பின்னணியில் தி.., தி.மு.., இருப்பதை மாரிதாஸ் வெட்ட வெளிச்சமாக்கினார். கறுப்பர் கூட்டத்துக்கும், தங்களுக்கும் சம்பந்தமில்லை என திமுகவும், திகவும் வழக்கமான பல்லவியைபாடினார்கள். எங்கள் கட்சியில் ஒருகோடி இந்துக்கள் இருக்கிறார்கள் என அவர்களை மாரிதாஸ் புலம்பவிட்டார்.

ஆனாலும் இந்துக்களில் பெரும்பான்மையானோர் தி.., திமுக மற்றும் தோழமை இயக்கங்களுக்கு எதிராக திரும்பியுள்ளனர். மொத்தத்தில் மாரிதாஸ் வகுத்த சக்கர வீயூகத்தில் திமுகவும், திகவும் வசமாக சிக்கிக் கொண்டுள்ளது. திமுக இதிலிருந்து மீள முடியாத நிலையில் உள்ளது.

மாரிதாஸ் நோக்கம் கறுப்பர் கூட்டம் அல்ல, ஏன் என்றால் periyar statue committe 1973 பற்றியும் அவர் கொளுத்திப் போட்டுள்ளார். இங்கே ஒட்டுமொத்த அரசியல் மாற்றத்திற்கான ஏற்பாட்டை அவர் செய்து வருகிறார். 2021 தேர்தலை நோக்கியே அவரது செயல்பாடுகள் அமைந்துள்ளன.

திமுக, திகவினரின் சாதிப் பிரிவினை அரசியல் செய்வதாக கூறப்படும் நிலையில், வரும் தேர்தலில் அது எடுபடாத வகையில் அவரது செயல்பாடுகள் இருக்கின்றன. மாரிதாஸைப் போன்றே ஊடகவியலாளர் மதன் ரவிச்சந்திரனும் திமுகவுக்கு எதிராக முழுவீச்சில் களமாடி வருகிறார். திமுக இந்துக்களுக்கு எதிர்ப்பாக உள்ளதாக கூறப்படும் நிலையில், திமுக-வின் தவறுகளை அவர் தோலுரித்துக்காட்டுகிறார். இவரைப்போலவே, மூத்த ஊடகவியலாளர் வி.எம். சுப்பையாவும் திமுகவின் பாரபட்சங்களை, தவறுகளை அவருக்கே உரிய பாணியில் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகிறார். அதேபோன்று, பெரியாரின் பெண்ணியம் குறித்தும், அதன்பேரில் நடக்கும் கலாச்சார சீர்கேடுகளையும் அவர் கண்டிப்பதால், பல எதிர்ப்புகளையும் அவர் சந்தித்து வருகிறார். இவர்கள் ஒருபக்கம் என்றால், அண்ணாமலை IPS-ம் இந்து ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.

இவர்களைப் போலவே பத்திரிகையாளர் பரத்தும் ரஜினி ஆதரவு நிலைப்பாட்டையே எடுத்திருக்கிறார். ஊடக விவாதங்களிலும் ரஜினி ஆதரவு கருத்தை அவர் முன்வைத்து வருகிறார்.

இவர்களைப்போன்று அடுத்தடுத்து யார் யார் வரப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த விவகாரத்தில் ஒன்றை கூர்ந்து கவனிக்க வேண்டும். இவர்கள் அனைவருமே ரஜினி ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கின்றனர். திமுகவின் உண்மை முகத்தை மக்களிடையே அம்பலப்படுத்தினால் மட்டுமே, ஆன்மிக அரசியலும், மாற்று அரசியலும் எடுபடும் என்ற நிலையில், ரஜினி இவர்கள் மூலம் காய் நகர்த்துவதாகவே தெரிகிறது.

ரஜினி தன்னை மட்டும் முன்னிறுத்தாமல் இரண்டாம் கட்ட தலைவர்களையும் உருவாக்கிவிட்டு தான் தேர்தலை சந்திக்க போகிறார் என்று தான் தோன்றுகிறது. மாரிதாஸ் பேசியதில் ஒன்றை கவனித்தால், இது நமக்கு தெளிவாக விளங்கும். தான் பா... ஆதரவாளர் என்பதை தவறு என நிரூபிக்கும் வகையில், ஆன்மிக அரசியலை ஏன் அங்கிகரீக்க வேண்டும், மொத்த சதுரங்க ஆட்டத்தை அண்ணாமலையார் சரியாக முடித்துவைப்பார் என்பது போன்ற அவரது கருத்து, ரஜினி ஆதரவு நிலைப்பாட்டை உறுதியாக்குகிறது.

ரஜினியை மையமாக வைத்து மாரிதாஸ், மதன் ரவிச்சந்திரன், சுப்பையா, பரத், அண்ணாமலை போன்ற இளம் வயதினர் திமுகவை எதிர்த்து நடத்தும் கருத்துப்போருக்கு பலன் இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ரஜினி சொன்னது போல் 2021ல் அதிசயம் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles

error: Content is protected !!