தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது என ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “குழந்தைகளுக்கு பட்டாசுகள் அளித்திடும் சந்தோஷத்தை மறுக்க, காற்றுமாசு ஒரு காரணமல்ல. நீங்கள் அவர்களுக்காக செய்யும் தியாகமாக, 3 நாட்களுக்கு அலுவலகத்திற்கு நடந்து செல்லுங்கள். குழந்தைகள் பட்டாசு வெடித்து மகிழட்டும் என்று தெரிவித்துள்ளார்.
அந்த டிவீட்டுடன் சேர்த்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், நான் சிறுவனாக இருந்த போது பட்டாசு வெடிப்பது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு செயலாக இருந்தது. நாங்கள் செப்டம்பர் மாதத்தில் இருந்தே பட்டாசுகள் பற்றி கனவு காண தொடங்கிவிடுவோம். தீபாவளி பண்டிகை முடிந்த பிறகும் ஓரிரு மாதங்களுக்கு அந்த பட்டாசுகளை பத்திரப்படுத்தி தினமும் வெடித்து மகிழ்வோம்.
ஆனால், இப்போது என்னவென்றால், சுற்றுச்சூழல் மீது திடீர் அக்கறை காட்டும் சிலர் குழந்தைகள் பட்டாசு வெடிக்க கூடாது என கூறுகிறார்கள். இது சரியல்ல. யாரெல்லாம் காற்று மாசுபாடு குறித்து கவலை கொள்கிறீர்களோ, நீங்கள் பட்டாசு வெடிக்கும் ஆனந்தத்தை தியாகம் செய்துவிடுங்கள். வேண்டுமென்றால், பெரியவர்கள் பட்டாசுகள் வெடிப்பதை நிறுத்திவிடுங்கள். ஆனால், குழந்தைகள் பட்டாசுகள் வெடித்து ஆனந்தமாக இருக்கட்டும். அவர்களுக்காக, நீங்கள் உங்கள் அலுவலகங்களுக்கு 3 நாட்கள் வாகனங்களில் செல்வதற்கு பதிலாக நடந்து செல்லுங்கள்” என்று கூறியுள்ளார். #Diwali #DontBanCrackers என்ற ஹேஷ்டேக்குகளையும் அவர் டிவிட்டரில் சத்குரு பதிவிட்டுள்ளார்.
Concern about air pollution is not a reason to prevent kids from experiencing the joy of firecrackers. As your sacrifice for them, walk to your office for 3 days. Let them have the fun of bursting crackers. -Sg #Diwali #DontBanCrackers pic.twitter.com/isrSZCQAec
— Sadhguru (@SadhguruJV) November 3, 2021
இதனிடையே சத்குரு ஜக்கி வாசுதேவ் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில், அன்பிலும், ஆனந்தத்திலும், விழிப்புணர்விலும் நீங்கள் ஒளிர்வது, உங்களை இருளில் தள்ளக்கூடிய இக்கட்டான் காலங்கட்டங்களில் மிக அவசியம். இந்த தீபாவளி திருநாளில், உங்கள் மனிதத் தன்மையை அதன் முழு சிறப்புடன் ஒளிரச் செய்திடுங்கள்” என தெரிவித்துள்ளார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry