சனி வக்ர பெயர்ச்சி! 5 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சனியால் வரப்போகும் அதிரடி மாற்றம்! பரிகாரம் செய்ய வேண்டிய 9 நட்சத்திரங்கள்!

0
250
சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும், யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

3.30 Mins Read : வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஜூன் மாதம் 29-ம் தேதி முதல் நவம்பர் மாதம் 15-ம் தேதி வரை சனிபகவான் வக்ரகதியில் சஞ்சாரம் செய்கிறார். அதாவது பூரட்டாதி 4 -ம் பாதத்தில் சஞ்சரிக்கும் சனிபகவான், தற்போது வக்ரமாகி சதய நட்சத்திரம் வரை சஞ்சாரம் செய்ய இருக்கிறார்.

சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும், யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த சனி வக்ர பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். அதேபோல், குறிப்பிட்ட 9 நட்சத்திர அன்பர்கள் செய்யும் வழிபாடுகள், அவர்களுக்கு பாதிப்புகளை எல்லாம் விலக்கி, நன்மைகள் நடக்க வழிசெய்யும்!

மேஷம்: லாப சனியால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். சிலருக்கு வேலை மாற்றம் ஏற்படும். சுய தொழில் செய்பவர்கள் பணத்தை அதிகம் முதலீடு செய்ய வேண்டாம்.  மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் அமையும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்கும். புதிய வண்டி வாகனம் வாங்குவீர்கள். வீடு மாற வாய்ப்பு உள்ளது.  உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை.

ரிஷபம்: சனி பகவான் தொழில் ஸ்தானத்தில் வக்ரமடைந்துள்ள இந்த கால கட்டத்தில், தேவையற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். உயர்கல்வி பயில்பவர்களுக்கு சிறு தடைகள் ஏற்பட்டு பின்னர் நிவர்த்தியாகும்.  வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. சிறு சிறு விபத்துக்கள் எற்படலாம்.

கடகம்: அஷ்டமத்து சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தேவையில்லாத ஆடம்பர செலவுகளை தவிர்த்து விடுங்கள். வேலைப்பளு அதிகரிக்கும்.

Also Read : ஆழ் மனதில் ஸ்டோராகும் எண்ணச் சுமைகள்! இயல்பாக வாழ வழிகாட்டும் ஆன்மிகம்! Part – 2

துலாம்:  வேலை செய்யும் இடத்தில் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சுய தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களால் நன்மைகள் நடைபெறும்.  உறவினர்களால் இருந்து வந்த உபத்திரவங்கள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சின்னச்சின்ன மனக்கசப்புகள் நீங்கி குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும்.

தனுசு: கடன் பிரச்சினை தீரும். கடனாக கொடுத்த பணம் திரும்ப வரும். எதிர்பாராத பண வருமானம் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் தடைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது, கவனம் தேவை. உடல் உழைப்பு அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமும் எச்சரிக்கையும் தேவை. காதலிப்பவர்களுக்கு இது கொஞ்சம் கஷ்ட காலம்தான். வாய் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை.

மகரம்: வக்ர சனி காலத்தில் தேவையற்ற முதலீடுகளை தவிர்க்கவும்.  அடுத்தவர்களின் விசயங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்க வேண்டாம். உங்கள் பிரச்சினைகளை மூன்றாம் நபரை தலையிட விட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் சிறு பிரச்சினைகள் ஏற்படும், அவசரப்பட்டு வேலையை விட்டு விட வேண்டாம். அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவைப்படும்.

கும்பம்: சனி வக்ர நிலையில் பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் புதிய சொத்துக்கள், வண்டி வாகனங்கள் வாங்குவீர்கள். பெண்கள் ஆடைகள், பொன் நகைகள் வாங்குவீர்கள்.  பிள்ளைகளுக்கு திருமணம் கை வரும். உறவினர்கள், நண்பர்களுடன் இதுநாள் வரை இருந்து வந்த மனவருத்தங்கள் முடிவுக்கு வரப்போகிறது.

Also Read : குலதெய்வத்தை வீட்டிற்குள் வரவழைக்கும் சக்தி வாய்ந்த முறை! குலதெய்வம் வீட்டில் தங்க சிம்ப்பிள் பரிகாரம்!

இதனிடையே, பரிகாரம் தேவைப்படும் 9 நட்சத்திரங்கள் எவை, எவ்விதமான பரிகாரங்கள் செய்யலாம் என்பது குறித்து ஜோதிட ஆலோசகர் பாரதி ஶ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார்.

ஸ்ரீமதி பாரதி ஸ்ரீதர், ஜோதிட ஆலோசகர்.

பரணி: மேஷ ராசியைச் சேர்ந்த பரணி நட்சத்திரக்காரர்கள், செவ்வாய் ஆதிக்கம் கொண்டவர்கள். பொதுவாக இவர்களுக்கு ராகு தசா காலத்தில் உடல் ஆரோக்கியக் குறைபாடுகள் உண்டாகலாம். பரணி உஷ்ணத் தனமை கொண்டது. ஆக, ராகு மற்றும் செவ்வாய் தசாகாலத்தில் அல்சர், உணவுக்குழாய் பகுதியில் பாதிப்புகள் ஏற்படும். நடப்புக் காலத்தில் இந்த நட்சத்திரத்தைச் சேர்ந்த அன்பர்கள், செவ்வாய், ஞாயிற்றுக் கிழமைகளில் – புற்று வளர்ந்திருக்கும் அம்மன் ஆலயங்களில் விளக்கு ஏற்றி வழிபடுவது விசேஷம். அங்காளம்மனை தரிசித்து ஆராதிப்பதால், நற்பலன்கள் கிடைக்கும்; பாதிப்புகள் விலகும்.

கிருத்திகை: ரிஷப ராசியைச் சேர்ந்த கிருத்திகை, சூரிய ஆதிக்கம் கொண்டது. பொதுவாக இந்த நட்சத்திரக்காரர்களுக்கு ராகு தசா காலத்தில் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். சூரிய தசா காலத்தில் எலும்பு தொடர்பான பிரச்னைகள் வரும். அக்னி நட்சத்திரக் காலத்தில் இந்த நட்சத்திர அன்பர்களே அதிகம் பாதிப்புகளைச் சந்தித்திருப்பார்கள். இவர்கள் சூரியனுக்குப் பிரீத்தி செய்வது நலம். ஞாயிற்றுக் கிழமைகளில் கோதுமை தானம் செய்யலாம். ஆதித்ய ஹிருதயம் படித்து வழிபடலாம். சிவபெருமானுக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபடுவதால் சங்கடங்கள் நீங்கும்.

திருவாதிரை: மிதுனம் ராசி திருவாதிரைக்காரர்களுக்கு ராகு தசை ஆரம்ப தசையாக இருந்திருக்கும். பொதுவாக இவர்கள், மனதில் குழப்பம் உள்ளவர்களாக இருப்பார்கள். சனி வக்ர காலத்தில் வீண் குழப்பங்கள் அதிகரிக்கலாம். இவர்கள் சந்திர வழிபாடு செய்வது அவசியமாகும். திங்கள்கிழமை தோறும் நவக்கிரக சந்திரனுக்கு விளக்கு ஏற்றி வழிபடுவது சிறப்பாகும். மேலும், வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திங்களூர் சென்று வழிபட்டு வரலாம். திங்கள் கிழமைகளில் சிவபெருமானுக்குப் பாலபிஷேகம் செய்து வழிபடுவதும், சோமவாரப் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்வதும் விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும். இதன் மூலம் சிந்தனை சிறக்கும்; செயல்களில் வேகம் உண்டாகும்.

Also Read : ட்ரூ காலரை ஒழிக்க TRAIயின் பலே திட்டம்! அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகள் குறித்த முக்கிய உத்தரவு!

ஆயில்யம்: கடக ராசியைச்சேர்ந்த ஆயில்ய நட்சத்திரக்காரர்களுக்குப் பெரும்பாலும் ராகு, கேது கிரகங்களால் பாதிப்புகள் உண்டாகும். தோல் மற்றும் சளி தொடர்பான பாதிப்புகள் ஏற்படலாம். நடப்புக் காலத்தில் இந்த நட்சத்திரக்காரர்கள், வெள்ளிக் கிழமை அன்று ராகுகாலத்தில் துர்கையை வழிபடுவது சிறப்பு. மட்டுமன்றி ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட பெருமாள் அருளும் ஆலயங்களுக்குச் சென்று துளசி சாத்தி வழிபடலாம்.

பூரம்: சிம்ம ராசியைச் சேர்ந்த பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு சனி தசாகாலத்தில் சற்றுப் பாதிப்புகள் உண்டாகும். காரியத் தடைகள் ஏற்படும். ராசி அடிப்படையில் இவர்களுக்கு கண்டகச் சனி நடைபெறுகிறது. இவர்கள், சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு சாத்தி வழிபடுவதால் நற்பலன்கள் ஏற்படும்; உடல் – மனபலம் உண்டாகும்.

விசாகம்: துலாம் ராசி விசாக நட்சத்திரக்காரர்களுக்குப் சஞ்சலங்கள் மிகுந்திருக்கும். சிந்தனையில் ஒருவித தடுமாற்றம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே பிணக்குகள், பிள்ளைகளுடன் சச்சரவுகள் போன்ற பலன்கள் ஏற்படலாம். நடப்புக் காலத்தில் சனி வக்ர பெயர்ச்சி மற்றும் பிற கிரக நிலைகளால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, முருகன் வழிபாடு துணை இருக்கும். இவர்கள் செவ்வாய்க்கிழமைகள், சஷ்டி தினங்களில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதால் சங்கடங்கள் விலகும்; சந்தோஷம் உண்டாகும். குறிப்பாக இவர்கள் வைகாசி விசாகத்தன்று விரத மிருந்து முருகனை வழிபட்டால், ஆயுள் முழுவதுமே நல்ல பலன் கள் உண்டாகும்; எல்லாவிதத்திலும் முன்னேற்றம் ஏற்படும்.

Also Read : துளசி மாடத்தை எந்தத் திசையில் வைக்க வேண்டும்? பணம் பெருமளவில் சேர துளசிக்கு எப்படி தண்ணீர் ஊற்ற வேண்டும்? Vastu for Tulsi Plant!

கேட்டை: விருச்சிக ராசி கேட்டை நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களுக்கு சந்திரன் நீச்சம். அவருடைய தசா காலத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இவர்கள் திங்கள் கிழமைகளில் உபவாசம் இருப்பது நல்லது. அன்று அரிசி உணவைத் தவிர்க்கலாம். பெளர்ணமி தினங்களில் சத்யநாராயண பூஜை செய்வதால், எதிர்காலம் சிறக்கும். மேலும் குளத்து மீன்களுக்கு உணவிடலாம். ராமேஸ்வரம் போன்று கடற் தீரங்களில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடுவதால் சந்திரன், சனிக்கிரக பாதிப்புகளும் தோஷங்களும் நீங்கும்.

மூலம்: தனுசு ராசி மூல நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்களுக்குச் சந்திரன், செவ்வாய், ராகு ஆகிய மூன்று கிரகங்களின் தசாகாலங்கள் பாதிப்புகளை ஏற்படுத்தும். நடப்புக் காலத்தில் இவர்கள், ஞாயிறு தோறும் விஸ்வரூப கோலத்தில் அருளும் அனுமனை தரிசித்து வழிபட்டு வரவேண்டும். இதனால் சகலவிதமான சங்கடங்களும் விலகி, ஜாரிய ஜெயம் உண்டாகும். தேகம் பொலிவு பெறும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry