ஒரே இடத்தில் பல மணி நேரம் உட்கார்ந்து இருக்கும்படி பலரது வேலை முறையும், வாழ்க்கை முறையும் அமைந்துவிடுகிறது. இன்று பலரின் பணிச்சூழல் உட்கார்ந்தபடி வேலை செய்ய வேண்டிய வகையிலேயே உள்ளது. அதிக நேரம் உட்கார்ந்திருப்பது சமூகத்தில் சகஜமான செயலாகிவிட்டது.
எனவே மக்கள் அதிக நேரம் தங்களை அறியாமல் உட்கார்ந்து விடுகிறார்கள். தொடர்ச்சியாக உட்கார்ந்திருப்பது, தொடர்ச்சியாக டிவி பார்ப்பது, வீடியோ கேம்களை விளையாடுவது, வாகனம் ஓட்டுவது அல்லது உட்கார்ந்து வேலை செய்வது போன்ற வாழ்க்கை முறை பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்.
Also Read : ஆபீஸ் பிரஷர், வீட்டு டென்ஷன்..! மனசும், உடலும் சோர்வா இருக்கா? புத்துணர்ச்சி பெற உதவும் சூப்பர் டிப்ஸ்!
நாற்காலியை விட்டு நகராமல் அமர்ந்தே நாள் முழுக்க வேலை செய்வதால், தலையில் தொடங்கி கால் வரை வலி நிறைய கிடைக்கிறது. ஆனால் யாரும் வேண்டுமென்றே உட்கார்ந்திருப்பது இல்லை, வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும்போது, நாம் அதிகம் அலைய வேண்டியதில்லை என்னும் சூழல் ஏற்படுகிறது.
நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கான பாதிப்புகள் குறித்து வெளியான ஒரு அறிக்கையின்படி, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த சர்க்கரை போன்ற பல கடுமையான நோய்களின் ஆபத்து அதிகரிக்கிறது. உடல் உழைப்பு சிறிதளவும் இல்லாமல் நீண்டநேரம் உட்கார்ந்திருக்கும் வாழ்க்கை முறை உடல்நலத்தில் எந்த மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை தெரிந்துகொள்வோம்.
உடல் பருமன் & முதுகு வலி
மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பதால் உடல் பருமனாக மாறலாம். நாற்காலியில் மணிக்கணக்கில் அமர்ந்து வேலை செய்பவர்களின் எடை வேகமாக அதிகரிக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. மணிக்கணக்கில் உட்கார்ந்து எந்த உடல் செயல்பாடும் இல்லாமல் இருந்தால், அது முதுகுவலியையும் அதிகரிக்கிறது. உடல் செயல்பாடுகள் குறையும் போது, தசைகள் மற்றும் எலும்புகள் கடினமாகின்றன. இதனால் முதுகு அல்லது இடுப்பு வலி அதிகரிக்கத் தொடங்குகிறது.
நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும்
உட்கார்ந்து வேலை செய்பவர்களை விட உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வரும் அபாயம் குறைவு. ஹெல்த்லைன் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு நீரிழிவு ஆபத்து 112 சதவீதம் அதிகரிக்கிறது.
Also Read : குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு தயிர் மற்றும் பழங்களை கொடுக்கலாமா? பெற்றோருக்கான யூஸ்ஃபுல் டிப்ஸ்!
கழுத்து மற்றும் தோள்பட்டை விறைப்பு
நாற்காலியில் மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பது உங்கள் இடுப்பு மற்றும் முதுகைப் பாதிப்பது போல், கழுத்து மற்றும் தோள்களையும் பாதிக்கிறது. மணிக்கணக்கில் உட்கார்ந்திருப்பதால் முதுகுத் தோரணை கெட்டுவிடும். அத்தகைய சூழ்நிலையில், தோள்கள் மற்றும் கழுத்து முன் நோக்கி வளைந்திருக்கும், இதன் காரணமாக விறைப்பு மற்றும் வலி பிரச்சனை தொடங்குகிறது. அதிக நேரம் கணினித் திரையை நோக்கி வளைந்து இருப்பவர்களுக்கு இது குறிப்பாக நிகழ்கிறது.
தண்டுவடம்
பெரும்பாலும் மணிக்கணக்கில் உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கு ஏற்படும் முதல் பாதிப்பு இந்த தண்டுவட வலி தான். இது தண்டுவட டிஸ்க் எலும்புகளை வலுவிழக்க செய்கிறது. இதிலிருந்து மீண்டுவர நீங்கள் அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள வேண்டிய அவசியம் கூட ஏற்படலாம்.
வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள்
நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் கால்களில் ரத்தம் சேரும். உடலில் இரத்த ஓட்டம் பாதிக்கப்படலாம். இதன் காரணமாக, வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகள் அல்லது சிலந்தி நரம்புகள் பிரச்சனை ஏற்படலாம். இருப்பினும், இது ஒரு பெரிய பிரச்சனை அல்ல. ஆனால் வெரிகோஸ் வெயின் காரணமாக நரம்புகள் வீங்கி நடப்பதில் சிரமம் ஏற்படும். இதன் காரணமாக, நரம்புகளும் வெளிப்படுகின்றன, அவை மிகவும் மோசமாக மாறக்கூடும்.
கொலஸ்ட்ரால் அதிகரிக்கலாம்
தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்வது கொலஸ்ட்ரால் அதிகரிக்க வழிவகுக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, நீங்கள் தொடர்ந்து 6 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து உட்கார்ந்து வேலை செய்தால், உங்கள் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம். அதுமட்டுமின்றி உடல் பருமனும் வேகமாக அதிகரிக்கிறது.
Also Read : வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லையா..? ஈஸியாக விரட்டும் டாப் 3 டிப்ஸ்..! Natural Cockroach Repellents!
நீரிழிவு ஆபத்து அதிகரிக்கலாம்
ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தொடர்ந்து வேலை செய்வது இன்சுலின் 40 சதவீதம் பாதிக்கிறது. உடலில் இன்சுலின் மற்றும் குளுக்கோஸ் அதிகரிப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், நீரிழிவு நோய்க்கான வாய்ப்பு கணிசமாக அதிகரிக்கிறது. மேலும் இதே முறை நீண்ட நாட்கள் தொடரும் பட்சத்தில் கணையத்தில் பாதிப்புகள் ஏற்படும்.
இதயம் பாதிக்கப்படலாம்
தவறான நிலையில் உட்காருவது முதுகுவலியை ஏற்படுத்துவது மட்டுமின்றி உங்கள் இதயத்தையும் பாதிக்கும். நிபுணர்களின் கூற்றுப்படி, தொடர்ந்து 3 மணி நேரம் உட்காருவதன் மூலம், தமனிகளின் விரிவாக்கம் 50% குறைக்க வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக, நமது இரத்த ஓட்டமும் குறையக்கூடும், மூளையின் அனைத்து பகுதிகளுக்கும் இரத்தம் சென்றடையாது, இது மூளையையும் பாதிக்கலாம். ஒரே இடத்தில் நாற்காலியை விட்டு நகராமல் நாம் வேலை செய்துக் கொண்டிருப்பதால், உடலில் சேரும் கொழுப்பு கரைவதில்லை. இதனால் இதயத்தை சுற்றி உருவாகும் கொழுப்பு அமிலங்கள் இதய நலனை சீர்குலைய செய்கிறது.
பெருங்குடல் புற்றுநோய்
உட்கார்ந்தே வேலை செய்வதால் ஏற்படும் உடல்நல அபாயத்தில், பெருங்குடல் புற்றுநோயும் ஒன்று என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். இதுமட்டுமின்றி, நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வது மார்பக புற்றுநோய் மற்றும் கருப்பை புற்றுநோய் ஏற்படவும் காரணியாக இருக்கிறது.
Also Read : வீட்டு வாசலில் தோரணங்கள் கட்டுவதற்கான காரணம் தெரியுமா?
ஒருவர் 120-180 நிமிடங்கள் தொடர்ந்து உட்கார்ந்திருப்பது பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். நீண்டநேரம் உட்கார்ந்திருப்பது தசை செயல்பாட்டைக் குறைக்கிறது. தசை செயல்பாடுகள் குறைவது, செரிமானப் பிரச்னையையும், கால்களுக்கு ரத்த ஓட்டத்தை குறைப்பது போன்ற அபாயம் பல சிக்கல்களுக்கும் வழிவகுக்கிறது. இது கால் தசைகளில் ரத்தம் தேங்குவதற்கு வழிவகுக்கும்.
நீண்ட நேரம் உட்காருவதால் ஏற்படும் பிரச்னைகளுக்கு பெல்ட் அணிவது போன்ற சிகிச்சைகள் முழுமையாகக் குணப்படுத்தாது. வாழ்க்கை முறை மாற்றங்களால் மட்டுமே ஆரோக்கியம் சாத்தியமாகும்.
பாதிப்புகளை தவிர்ப்பது எப்படி?
ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் உங்கள் நாற்காலியில் இருந்து எழுந்து நகரவும். தொலைபேசியில் பேசும்போது அல்லது டிவி பார்க்கும்போது உட்கார்ந்திருப்பதற்குப் பதிலாக நிற்பதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். நீங்கள் பணிபுரியும் நாற்காலியின் தரத்தை சரிபார்க்கவும். உடைந்த நாற்காலியில் உட்காருவது வலியை அதிகரிக்கும். உடல் செயல்பாடுகளை அதிகரிக்க அவ்வப்போது நடக்க வேண்டும்.
டிரெட்மில்லில் உடற்பயிற்சி செய்வது மற்றும் உங்கள் கால்களை நகர்த்தும் செயல்பாடுகளைச் செய்வது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. எப்போதாவது எழுந்து சிறிது நடைபயிற்சி செல்வது அல்லது சில படிக்கட்டுகளில் ஏறுவதுகூட பலனளிக்கிறது. ஏரோபிக்ஸ் (Aerobics) மற்றும் வேறு சில பயிற்சிகள் உதவியாக இருக்கும். சைக்கிள் ஓட்டுதலும் சிறந்த உடற்பயிற்சி. சைக்கிள் ஓட்டுவதன் வேகம் மற்றும் எவ்வளவு நேரம் சைக்கிள் ஓட்டுகிறீர்கள் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry