சற்றுமுன்

கொரோனா சிகிச்சைக்காக கோவையில் பிரத்யேக சித்தா சிகிச்சை மையம்! 200 படுக்கைகள் ஒதுக்கீடு!

கொரோனா சிகிச்சைக்காக கோவையில் பிரத்யேக சித்தா சிகிச்சை மையம்! 200 படுக்கைகள் ஒதுக்கீடு!

கொரோனா நோயாளிகளுக்கு சென்னையில் சிகிச்சை அளிப்பது போல, கோவையிலும் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிப்பதற்காக சிங்காநல்லூரில் சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட உள்ளது.

கோவை கொடிசியாவில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தில், 670 படுக்கை வசதிகள் உள்ளன. அவற்றில், 100 படுக்கைகள் சித்த மருத்துவ சிகிச்சைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக கோவை மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி தனம் தெரிவித்தார். விரைவில் சித்த மருத்துவ சிகிச்சைக்கென தனி அரங்கம் ஒதுக்கப்படுமென்றும் அவர் கூறினார்.

இதனிடையே, கோவை கொடிசியா வளாகத்தில் சித்தா சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது, சிங்காநல்லூர் வெங்கடலட்சுமி திருமண மண்டபத்தில் சித்தா சிகிச்சைக்கு என பிரத்யேக மையம், 200 படுக்கை வசதிகளுடன் தயார்நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராஜாமணி கூறியுள்ளார். தேவையின் அடிப்படையில் தற்காலிக மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். பொதுமக்களின் விருப்பத்தைப் பொறுத்தும் சூழல்களை பொறுத்தும் படிப்படியாக சித்தா சிகிச்சை வசதி மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை சாலிகிராமம் ஜவஹர் பொறியியல் கல்லூரியிலும், வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியிலும் கொரோனா நோயாளிகளுக்காக தனித்த சித்த மருத்துவ சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்விரு மையங்களிலும் மொத்தம் ஐந்தாயிரத்துக்கும் அதிகமான நோயாளிகள் முழுமையாக குணம் பெற்றுள்ளனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

CATEGORIES
error: Content is protected !!