பள்ளி திறந்தாச்சு! புத்தகம் கொடுத்தாச்சு! ஆசிரியர்கள் இல்லையே..! தமிழக ஆசிரியர் கூட்டணி விமர்சனம்!

0
288
ஐபெட்டோ அண்ணாமலை

தமிழக ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும்விழா ஈரோட்டில் 11.06.2023 அன்று நடைபெற்றது. இந்த விழாவுக்குப் பிறகு, அக்கூட்டணியின் மூத்த தலைவரும், ஐபெட்டோ தேசிய செயலாளருமான வா. அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, நாளை (12ம் தேதி) 6 – 12 வகுப்புகள் தொடங்குகின்றன. 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர் காலியப்பணியிடங்களில், தகுதித் தேர்வை முடித்தவர்களை நியமிக்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தினார்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry