சற்றுமுன்

புதுச்சேரி அரசு வழக்கறிஞர்கள் பதவி நீட்டிக்கப்படாததான் மர்மம் என்ன? முதலமைச்சர், ஆளுநர் மோதல் காரணமா?

புதுச்சேரி அரசு வழக்கறிஞர்கள் பதவி நீட்டிக்கப்படாததான் மர்மம் என்ன? முதலமைச்சர், ஆளுநர் மோதல் காரணமா?

புதுச்சேரியில், அரசு வழக்கறிஞர்களின் பதவிக்காலம் முடிவடைந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரையில், புதிதாக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படவில்லை. அதேநேரம், அவர்களுக்கு பதவி நீட்டிப்பும் வழங்கப்படவில்லை.

நீதிமன்றத்தில், அரசு வழக்கறிஞர்கள், அரசு கூடுதல் வழக்கறிஞர்கள், அரசு துணை வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரின் பங்கு முக்கியமானதாகும். அரசு துறை சார்ந்த வழக்குகள், கிரமினல் குற்றவாளிகளுக்கு ஜாமின் கோரும் வழக்குகள் போன்றவைகளில் இவர்களின் பங்கு இன்றியமையாதது.

புதுச்சேரியில், இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பொறுப்பில் இருப்பவர்களின் பதவிக்காலம், மூன்று மாதங்களுக்கு முன்பே முடிந்துவிட்டது. ஆனால், இதுவரையில் அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. கோவிட்-19 பெருந்தொற்று ஊரடங்கால், அரசு வழக்கறிஞர்களை புதிதாக நியமிப்பதற்கான எந்தப் பணியும் நடைபெறவில்லை. அதவாது, அரசு வழக்கறிஞர்களின் பணிக்காலம் முடிந்ததாக மாநில சட்டத்துறை, தலைமை நீதியரசருக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும்.

அதன்பிறகு, அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்வதற்கான அறிவிக்கையை தலைமை நீதியரசர் வெளியிடுவார். அந்த அறிவிக்கையின் அடிப்படையில், பார் அசோஷியன் மூலம் வழக்கறிஞர்கள் விண்ணப்பிப்பார்கள். அறிவிக்கை வெளியிட்டு ஒரு மாதம் கழித்தே, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள்

அரசு வழக்கறிஞர்களின் பணிக்காலம் முடிந்ததாக மாநில சட்டத்துறை அறிவிக்காததே தற்போதைய சிக்கலுக்குக் காரணம். அதாவது, தற்போது பொறுப்பில் இருப்பவர்களின் பதவிக்காலம் சட்டப்படி முடிவடைந்துவிட்டது. ஆனால், அரசு ஊதியமின்றியும், அங்கீகாரம் இன்றியும் அரசு வழக்கறிஞர்களாகவே, தற்போது இருப்பவர்கள் பணியாற்றுகிறார்கள்.

இதுகுறித்து  புதுச்சேரி நகர் மாவட்ட பாஜக தலைவரும், வழக்கறிஞருமான அசோக்பாபுவை வேல்ஸ் மீடியா சார்பாக தொடர்பு கொண்டு கேட்டோம். அப்போது, நீதிமன்றங்களில் அரசு வழக்கறிஞர்களின் பணி இன்றியமையாதது. தற்போது இருப்பவர்களுக்கு பதவி நீட்டிப்பு தருவதோ அலலது புதிய அரசு வழக்கறிஞர்களை தேர்வு செய்வதோ, எதுவாக இருந்தாலும் தாமதப்படுத்தாமல் செய்ய வேண்டும் என்றார்.

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, அரசு வழக்கறிஞர் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடுவது தாமதப்பட்டது. அத்துடன் 7 மாதங்களுக்காக அறிவிக்கை வெளியிட்டு புதிதாக அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவது தற்போதைய சூழலில் சாத்தியமில்லை என்றே தெரிகிறது. அரசு மெத்தனத்தாலும், ஆளுநருடனான மோதல் போக்காலும், புதிய வழக்கறிஞர்களும் நியமிக்கப்படவில்லை, இருப்பவர்களுக்கு இதுவரையில் பதவி நீட்டிப்பும் வழங்கவில்லை. இந்த விவகாரத்தில் புதுச்சேரி அரசு உடனடியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry

CATEGORIES
error: Content is protected !!