சற்றுமுன்

திரையரங்குகளை தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை! அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

திரையரங்குகளை தற்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை! அமைச்சர் கடம்பூர் ராஜு தகவல்

தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார்.

கொரோனா நோய் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அரசு சினிமா படப்பிடிப்புகளுக்கு பல கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கியது.

இதற்கிடையில், கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு கடந்த மே மாதத்தில் இருந்து மத்திய அரசு படிப்படியாக தளர்வுகளை அளித்து வருகிறது. இந்த மாதம் 10ம்தேதி உடற்பயிற்சி கூடங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. வரும் 1ம் தேதியில் இருந்து மத்திய அரசு மெட்ரோ ரெயில்களை இயக்க அனுமதி வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தியேட்டர்களையும் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, மக்கள் அதிகளவில் கூடுவார்கள் என்பதால் தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை என்றார்.

கொரோனா குறைந்து இயல்புநிலை திரும்பிய பின்னரே தியேட்டர்களை திறக்க வாய்ப்புள்ளது, குறைந்த ரசிகர்களுடன் தியேட்டர்கள் திறக்கப்பட்டால் அது தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார். ஓடிடி-யில் படத்தை வெளியிடுவது சினிமா துறைக்கு ஆரோக்கியமானது அல்ல என்று கூறிய அவர்,  தியேட்டர்களை திறக்க சிறிது காலம் ஆகும் எனஅபதால், ஓடிடி-யில் படத்தை வெளியிடுவதை விட, பொறுத்திருந்துதான் ஆக வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Subscribe to our channels on  YouTube  &   WhatsApp   &   Telegram

CATEGORIES
error: Content is protected !!