சற்றுமுன்

தமிழகத்தில் மேலும் இரண்டு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! தீவிர சிகிச்சை

தமிழகத்தில் மேலும் இரண்டு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று! தீவிர சிகிச்சை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் இரண்டு அதிமுக எம்.எல்..க்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதுரை சோழவந்தான் தொகுதி அதிமுக எம்.எல்.. மாணிக்கத்திற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர், மதுரை கே.கே.நகர் பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 6ம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூடத்தில் எம்.எல்.ஏ மாணிக்கம் பங்கேற்றார். அவருக்கு காய்ச்சல் இருந்தையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  

எம்.எல்.. மாணிக்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்.எல்.. பரமேஸ்வரிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து தமிழகத்தில் இதுவரை 8 எம்.எல்..க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

CATEGORIES
error: Content is protected !!