தேசிய கைத்தறி நாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பாக, கோவை குனியமுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் கைத்தறி ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பாஜக மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன், பாஜக நிர்வாகி காயத்திரி ரகுராம் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். வெற்றி பெற்றவர்களுடன் வானதி சீனிவாசன் கேட் வாக் செய்தார். மாணவர்கள் அவரை உற்சாகப்படுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு, ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம் உயிரூட்ட முடியுமா என்று முயற்சிக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், தேசிய சிந்தனையால் – மோடியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பாஜகவிற்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.
Also Read : வரைமுறையின்றி ஆன்டிபயாடிக் உட்கொள்ளும் இந்தியர்கள்! மருத்துவ இதழ் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
காங்கிரஸ் கட்சி ஒரு மூழ்கிய கப்பல். ராகுல் காந்தி நடந்தாலும், ஓடினாலும், மாரத்தான் ஓடினாலும் எந்த பயனையும் தராது. காலம் கெட்டபிறகு சூர்யநமஸ்காரம் செய்வது போல, ராகுல் காந்தியின் இந்த நடைபயணம் உள்ளது. அவரது உடல் நலத்திற்கு வேண்டுமானால் இது நல்லதாக இருக்கலாம். ராகுல் நடைபயணத்தால் நாட்டிற்கும், காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு போதும் பயனில்லை.
கோவை மாநகராட்சியின் 70 வார்டில், இருவர் ஒரே நேரத்தில் அருகருகே அமரும் வகையில் கழிப்பறை கட்டியுள்ளார்கள். கழிப்பறை கட்டுவதில் கூட திராவிட மாடல் என்று மக்கள் பேசட்டும். இந்த கழிப்பறை சம்பந்தமாக மாநகராட்சி ஆணையரிடம் விளக்கம் கேட்கத்தான் போகிறோம். இதையெல்லாம் பார்க்கும் போது திமுக அரசு, மக்களை பற்றி கவலைப்படாமல், ஒப்பந்ததாரர்களை பற்றி மட்டுமே கவலைப்படுவது தெளிவாக தெரிகிறது.” இவ்வாறு வானதி ஸ்ரீனிவாசன் கூறினார்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry