வாழைக்காயில் இவ்வளவு மருத்துவ குணங்களா? ஆச்சரியப்படவைக்கும் நன்மைகள்! Health Benefits of Vazhaikkai: A Nutritional Powerhouse!

0
64
Discover the health benefits of Vazhaikkai (raw banana), from aiding digestion to boosting heart health. Incorporate this nutritious vegetable into your diet for overall well-being.

பெரும்பாலும் வாழைப்பழங்களுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் வாழைக்காய்க்கு கொடுக்கப்படுவது இல்லை. வாழைக்காய் சாப்பிட்டால் வாயு தொல்லை ஏற்படும் என பலரும் ஒதுக்கிவிடுவதுண்டு. ஆனால் அதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துகள் பற்றி தெரிந்துகொண்டால் நிச்சயம் அன்றாட உணவில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என உணர்வீர்கள்.

ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், பல நோய்களில் இருந்து உடலை பாதுகாக்க உதவும் வாழைக்காயில் உள்ள சத்துக்கள், இதய ஆரோக்கியம் முதல் சர்க்கரை நோய் வரை அனைத்திற்கும் நன்மை பயக்கும். வாழைக்காயில் நார்ச்சத்து வைட்டமின் C, வைட்டமின் A, பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. வாழைக்காயை உங்களுடைய உணவு வழக்கத்தில் சேர்த்து வர பலவிதமான உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

Also Read : அமாவாசை காய்கறிகளில் வாழைக்காய் கட்டாயமானது எப்படி? சுவாரஸ்யமான பின்னணித் தகவல்!

எடை இழப்புக்கு உதவும்

100 கிராம் வாழைக்காயில் 30-32% மட்டுமே கொழுப்பு உள்ளது. இது உடல் எடையை குறைப்பதற்கு சிறந்தது. இதில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியதாக உணர வைக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அதிகரித்து வரும் எடையைக் குறைக்கலாம். இதை சரியான அளவுகளில் உங்கள் உணவு முறையில் சேர்த்து வந்தால், உடல் எடையை சுலபமாக குறைக்கலாம். அதேநேரம், வாழைக்காய் மற்றும் வாழைப் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

மலச்சிக்கலை போக்கும்

வாழைக்காய் குடல் பாக்டீரியாவை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. குடலில் சில நுண்ணுயிரிகள் உள்ளன, அவை குடலுக்கு நன்மை பயக்கக்கூடியவை. இந்த நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கு வாழைக்காய் உதவும். இதன் மூலம் செரிமான ஆரோக்கியத்திற்கு வாழை நன்மை பயக்கின்றன.

வாழைக்காயில் உள்ள நார்ச்சத்து, வயிற்று உப்புசம், அஜீரணம், வாயு, வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற வயிறு தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்கிறது. இதை உட்கொள்வதன் மூலம், செரிமான அமைப்பு ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் உணவு விரைவாக செரிமானமாகும்.

மலச்சிக்கல் தீர வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து குடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவுகிறது. இதை உணவில் தொடர்ந்து சேர்த்து வர செரிமான செயல்முறை சீராக நடைபெறும். வாழைக்காயை சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதோடு மட்டுமின்றி, வயிறு சார்ந்த பிரச்சனைகளையும் தவிர்க்கலாம்.

Constipated colon | Getty Image

பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்தது

வாழைக்காயை பொட்டாசியம் சத்துக்களின் களஞ்சியம் என்று குறிப்பிடலாம். இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும். இதை சரியான அளவுகளில் உணவில் சேர்த்து வர நாள் முழுவதும் சுறுசுறுப்பாக செயல்படலாம். மேலும் வாழைக்காயில் உள்ள வைட்டமின் B6 உடலின் செல்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. உங்களுடைய நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், நோய் தொற்றுகளை எதிர்த்து போராடவும் வாழைக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்

வாழைக்காய் மற்றும் வாழைப்பழங்களுக்கு இடையிலான முக்கிய வேறுபாடு என்னவெனில், வாழைக்காயில் கார்போஹைட்ரேட் ஸ்டார்ச் வடிவத்தில் இருக்கின்றன. வாழைப்பழங்களில் கார்போஹைட்ரேட் படிப்படியாக சர்க்கரையாக மாறுகிறது. அதனால்தான் பெரும்பாலான மக்கள் வாழைக்காயை விடவும் வாழைப்பழங்களைச் சாப்பிட விரும்புகின்றனர்.

ஆனால் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழங்களை அதிகம் உண்ண முடியாது, அவர்களுக்கு வாழைக்காயே நன்மை பயக்கிறது. இவை வாழைப்பழங்களை விடவும் குறைவான அளவில் சர்க்கரையையும், குறைந்த அளவில் க்ளைசெமிக் குறியீட்டையும் கொண்டுள்ளன. எனவே இவை இரத்த சர்க்கரை அளவை வேகமாக அதிகரிப்பது இல்லை.

வாழைக்காயில் குறைந்த அளவில் கார்போஹைட்ரேட் உள்ளது என்றாலும் அது சிறுகுடலில் உடைந்து குளுக்கோஸாக மாறுவதால், அந்த குறைந்த அளவு கார்போஹைட்ரேட் இரத்தத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. வாழைக்காயை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை எளிதில் கட்டுப்படுத்தலாம். இதில் உள்ள நார்ச்சத்து உங்களுடைய பசியையும் போக்கும்.

Also Read : தினசரி வாழைப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா? சுகர் பேஷன்ட்டும் வாழைப்பழம் சாப்பிடலாமா?

இதய ஆரோக்கியம் மேம்படும்

வாழைக்காய் பொட்டாசியத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளன. இதய தசைகள் சுருங்கி இதயம் தொடர்ந்து துடிப்பதற்கு பொட்டாசியம் உதவுகிறது. மேலும் இது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இதனால் இதயத்திற்கு இது கூடுதல் நன்மை பயக்கின்றது. புரதம், கால்சியம், இரும்புச்சத்து போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வாழைக்காய் பக்கவாதம் வருவதை தடுக்கும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால், வாழைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வைட்டமின் சி, வைட்டமின் பி, ஈ, கே போன்ற பல வகையான வைட்டமின்கள் கொண்ட வாழைக்காய், உடலில் பல நொதி செயல்முறைகளுக்கு உதவுகிறது மற்றும் நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.

புற்று நோய்

வயிற்றில் வருகிற பெருங்குடல் புற்று ஒருவருக்கு மிகுந்த வேதனையை தரக்கூடியதாகும். வாழைக்காய் பெருங்குடல் மற்றும் ஜீரண உறுப்புக்களில் தேங்கும் கழிவுகளையும், நச்சுக்களையும் வெளியேற்றுகிறது. எனவே வயிற்றில் புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்க அதிகம் வாழைக்காய் சாப்பிட வேண்டும்.

Colon cancer | Getty Image

எலும்புகள்

உடலுக்கு ஆதாரமாக இருப்பது எலும்புகள் ஆகும். எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருப்பது அவசியம். வாழைக்காயில் எலும்புகளின் வலுவிற்கும், வளர்ச்சிக்கும் தேவையான வைட்டமின், கால்சியம், மெக்னீசியம் ஆகியவை உள்ளது. இவைகள் எலும்பிற்கு போதிய பலம் தந்து எதிர்காலத்தில் மூட்டு வலி, ஆஸ்டியோ போரோஸிஸ் ஆகிய எலும்பு தொடர்பான பிரச்சனைகளிலிருந்து நம்மை காப்பாற்றுகிறது.

அதீத உணர்ச்சிகள்

ஒரு சிலர் சிறு விஷயங்களுக்குக் கூட அதீதமாக உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு வாழைக்காய் சிறந்த உணவாக இருக்கிறது. வாழைக்காயில் ட்ரிப்டோஃபான் என்ற அமினோ அமிலம் இருக்கிறது. இந்த அமிலம் மூளையில் நடக்கும் ரசாயன மாற்றங்களை ஒழுங்குபடுத்தி உணர்ச்சிகரமான மன நிலை உண்டாவைத் தடுத்து மன அமைதியை தருகிறது.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry