சற்றுமுன்

வரும் 10-ந் தேதி காய்கறி, பழக் கடைகள் திறக்கப்படாது – வணிகர் சங்கம்

வரும் 10-ந் தேதி காய்கறி, பழக் கடைகள் திறக்கப்படாது – வணிகர் சங்கம்

தமிழகம் முழுவதும் ஆகஸ்ட் 10ம் தேதி ஒருநாள் மட்டும் காய்கறிகள் மற்றும் பழக் கடைகள் முழுவதும் அடைக்கப்படும் என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக சென்னையில் கோயம்பேடு மார்க்கெட் மூலமாக கொரோனா பாதிப்பு அதிகமாகி மற்ற மாவட்டங்களில் பரவியது. இதனால் மார்க்கெட் தற்காலிகமாக மூடப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருமழிசையில் தற்காலிக காய்கனி சந்தை செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோயம்பேடு மொத்த சந்தையை திறக்க கோரி, வணிக சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வரும் திங்கள் கிழமை ஒருநாள் மட்டும் காய்கறிகள் மற்றும் பழ கடைகள் அடைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா அறிவித்துள்ளார்.

மேலும் பிற மாவட்டங்களில் மூடப்பட்டுள்ள மார்க்கெட்டுகளை திறக்ககோரி வியாபாரிகள் சார்பில் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
error: Content is protected !!