4.00 Mins Read : வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து, வன்முறையாக அது தீவிரமடைந்த காரணத்தால், பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சொந்த நாட்டிலிருந்து வெளியேறியிருக்கிறார் ஷேக் ஹசீனா. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் சி.ஐ.ஏ. என்றே பலராலும் கூறப்படுகிறது. மாணவர்களை ஆயுதமாகக் கொண்டு ஆட்சியைக் கவிழ்ப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும் அமெரிக்காவின் உளவு அமைப்பான C.I.A., இந்தியாவில் நீட் விவகாரத்தை கையிலெடுக்கலாம் என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
வங்கதேச பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக, Jamaat-e-Islami மாணவர் அமைப்பினர் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 5 திங்கட் கிழமை அவர் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்தியாவில் தற்காலிகமாக தஞ்சமடைந்துள்ள அவாமி லீக் தலைவரான பிரதமர் ஷேக் ஹசீனா, இன்னும் இரண்டு நாட்களில் இங்கிலாந்து செல்வார் என தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஷேக் ஹசீனா லண்டனில் தங்குவதாக இருந்தால், அது அவருக்கு சட்டப்படியான பாதுகாப்பான இடமாக இருக்காது என்று இங்கிலாந்து அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் செல்வாக்கு மிக்க நான்கைந்து நபர்களின் லாபியும், அமெரிக்காவுக்கு ஷேக் ஹசீனா அடிபணிய மறுத்ததுமே அவரது ஆட்சியின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்று தெரிகிறது. பங்களாதேஷ் ஆட்சிக் கவிழ்ப்புக்கு, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் பணியாற்றும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.யும் முக்கிய பங்கு வகித்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த டேவிட் புர்கன், சமூக ஆர்வலர் பினாகி பட்டாச்சார்ஜி, வங்கதேச தேசியவாத கட்சியின் துணைத் தலைவர் தாரிக் ரஹ்மான் மற்றும் நேத்ரா நியூஸ் உரிமையாளர்கள் ஆகியோரே பங்களாதேஷில் பிரச்சனையை ஒருங்கிணைத்ததாக தெரிகிறது.
மேற்கத்திய நாடுகளை குறிப்பாக அமெரிக்காவை ஆதரிப்பதில் ஹசீனா ஆர்வம் காட்டவில்லை. “பங்களாதேஷ் மற்றும் மியான்மரின் சில பகுதிகளைக் கைப்பற்றி வங்கதேசத்தை தளமாகக் கொண்டு, கிழக்கு திமோரைப் போல ஒரு கிறிஸ்தவ நாடாக்க அமெரிக்கா விரும்புகிறது என்று ஹசீனா அறிக்கை வெளியிட்டிருருந்தார். இந்த ஆண்டு ஜனவரியில் பங்களாதேஷ் தேர்தலுக்கு முன்னர் தன்னை சந்தித்த ஒரு “வெள்ளைக்காரர், “தனக்கு எல்லாவற்றையும் உறுதியளித்ததாகவும், தேர்தலின் போது தனக்கு எந்த பிரச்சினையும் ஏற்படாது என்றும் கூறினார். அவர்கள் விமான தளத்தை உருவாக்க விரும்பினர்” என்று ஷேக் ஹசீனா கூறியுள்ளார். பங்களாதேஷில் இருந்து ஒரு புதிய நாட்டை உருவாக்குவதற்கான “சதித்திட்டங்கள் இன்னும் தொடர்கின்றன” என்றும் ஹசீனா அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.
“மனித உரிமையை மீறியதாக பங்களாதேஷின் RAB (Rapid Action Battalion) மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. அதேபோல் மேற்கத்திய நாடுகளின் லாபியிஸ்டுகளுடைய பிரதிநிதிகள், கலிதா ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாத கட்சியில்(Bangladesh Nationalist Party) ஊடுருவியுள்ளனர். பங்களாதேஷில் ஊழல் குற்றம் சாட்டப்பட்ட, நோபல் பரிசு பெற்ற யூனுஸ் ஹசனும் அமெரிக்காவின் லாபியிஸ்டாக செயல்படுகிறார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
ஷேக் ஹசீனா சீனாவுடன் நெருக்கம் காட்டியதாலேயே சி.ஐ.ஏ. களத்தில் இறங்கி ஆட்சியைக் கவிழ்த்ததாக வங்கதேசத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிபடுத்தும் விதமாக, மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன், சீனாவுடன் உறவைப் பேண மாட்டேன் என்றும், பங்களாதேஷில் மேற்கத்திய நாடுகளுக்கு வழிவிடுவேன் என்றும் பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் துணைத் தலைவர் தாரிக் ரஹ்மான் கூறியுள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் மேலுமொரு உத்தி என்னவென்றால், இந்திய துணைக் கண்டத்தில் நிலையற்ற தன்மையை உருவாக்குவது. அப்படியொரு நிலையை ஏற்படுத்தினால்தான் பிரச்சனைகள் உருவாகும். இந்தியாவின் கவனம் மியான்மர், பங்களாதேஷ், மாலத்தீவு மற்றும் சீனாவின் பக்கம் திரும்பும் என அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் நம்புகின்றன.
பங்களாதேஷில் நடந்த வன்முறை அதைத்தொடர்ந்த ஆட்சிக் கவிழ்ப்பில் அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ-வின் கரம் இருப்பதை பல வழிகளிலும் உறுதி செய்ய முடிகிறது. பங்களாதேஷில் நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகள், இலங்கையில் ராஜபக்ச அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டங்களை, வன்முறைகளை ஒத்திருக்கிறது. சீனாவோடு கைகோர்த்து செயல்பட்ட இலங்கையைப் போலவே, பங்களாதேஷில் பிரதமரின் இல்லத்துக்குள் வன்முறை கும்பல் புகுந்தது சூறையாடியது.
பிரதமர் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டது. டாக்காவில் உள்துறை அமைச்சரின் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. முக்கிய தலைவர்களின் சிலைகள் தகர்க்கப்பட்டன. இதேபோல் தாய்லாந்து, மியான்மர் ஆகிய நாடுகளிலும் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த பின்னணியில் சி.ஐ.ஏ நிச்சயமாக உள்ளது. பங்களாதேஷ் தேர்தலில் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி பெரும் பெரும்பான்மையை பெற்ற நிலையில், தேர்தல் முடிவுகளில் நம்பிக்கை இல்லை என்று அமெரிக்கா ஏற்கனவே கூறியிருந்தது.
சர்வதேச அரசியல் நோக்கரும், பிரபல யு டியூபருமான அபிஜித் சாவடா தமது எக்ஸ் பதிவில், மேலுமொரு நாட்டிலிருந்து ஜனநாயகத்தை அமெரிக்கா வெற்றிகரமாக தூக்கியெறிந்துள்ளது. இரண்டாவது பாகிஸ்தான் இப்போது இந்தியாவின் கிழக்கு எல்லையில் செயலில் உள்ளது. புராஜெக்ட் – கே(Kukiland) என்ற பெயரில் பங்களாதேஷ், மியான்மர் மற்றும் இந்தியாவின் மணிப்பூர் & மிசோரம் அடங்கிய கிறிஸ்துவ நாட்டை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா தீவிரமாக உள்ளது. இது மூன்றாவது பாகிஸ்தானாக செயல்படுவதோடு தென்கிழக்கு ஆசியாவிற்கான இந்தியாவின் அணுகலையும் துண்டிக்கும்.
அமெரிக்கா விரைவில் பங்களாதேஷின் செயின்ட் மார்ட்டின் தீவை கையகப்படுத்தி, அதை ஒரு இராணுவ தளமாக மாற்றி, இந்தியா மற்றும் சீனாவின் மீது ‘ஆதிக்கம்’ செலுத்த பயன்படுத்தும். இது இந்தியாவுக்கு கடினமான காலம். நண்பர்கள் போன்று நடிக்கும் வெளிநாடுகளால் சூழப்பட்டுள்ளோம். நமக்கு நண்பர்களும் இல்லை, கூட்டாளிகளும் இல்லை. நம்மை நாமே வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.
Congratulations to the US regime for successfully overthrowing yet another democracy.
A second Pakistan is now active on India’s eastern frontier.
Project-K (Kukiland) – an artificial Christian nation carved out of Bangladesh, Burma, and India’s Manipur & Mizoram – is underway.… https://t.co/M9DY9g9C0q
— Abhijit Chavda (@AbhijitChavda) August 5, 2024
சிஐஏ-வைப் பொறுத்தவரை ஒரு நாட்டின் ஜனநாயகத்தை சீர்குலைத்து ஆட்சியைக் கவிழ்ப்பதற்கென சில வழிமுறைகளை வைத்துள்ளது. ஏதாவதொகு காரணத்தைக் கூறி போராட்டத்தை தொடங்க வேண்டும்; இடதுசாரிக் கொள்கையுடைய மாணவர்களே அவர்களது தேர்வாக இருப்பார்கள். ஊடகங்கள் ஒரு கதையை உருவாக்குவதற்காக அமைதியான முறையில் போராட்டத்தை தொடங்க வேண்டும்; பாதுகாவலர்களைத் தாக்கி, வன்முறை சூழ்நிலையை உருவாக்க வேண்டும்; குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து போலீசார் கைது செய்வார்கள்;
போலீஸ் நடவடிக்கையின்போது எடுக்கப்பட்ட காணொளிகள் மூலம் மனித உரிமை மீறப்பட்டதாக பெரு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் செய்தி வெளியாகும்; ஒரு செயலை சட்டவிரோதமாக பயன்படுத்துதல் அல்லது தவறாக பயன்படுத்துதல் என்று நீதித்துறை நடவடிக்கை எடுக்கும்; “நாங்கள் மக்களுக்கு சேவை செய்கிறோம்” என்ற பெயரில் போராட்டக்காரர்களுக்கு இராணுவம் ஆதரவளிக்கும்; போராட்டக்காரர்கள் பிரதமர் அல்லது ஜனாதிபதியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு அவர்களை தப்பி ஓட நிர்பந்திப்பார்கள். இப்படித்தான் சிஐஏ பல நாடுகளிலும் செய்துள்ளது.
Also Read : வரலாற்றில் பல் மருத்துவம்! 7000 ஆண்டுகளுக்கு முன்பே ரூட் கேனால்(Root Canal) செய்து அசத்தியுள்ள முன்னோர்கள்!
இந்தியாவின் அண்டை நாடுகளில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்புகள் :
- 2020 தாய்லாந்து மாணவர் போராட்டங்களை எதிர்கொள்கிறது.
- 2021 மியான்மர் இராணுவப் புரட்சி.
- 2022 இலங்கை போராட்டம், வன்முறை.
- 2022 இலங்கையில் சீன ஆதரவு அதிபர் ராஜினாமா.
- 2023 பாகிஸ்தானில் இம்ரான் கான் கைது.
- 2023 மியான்மர் இராணுவம், ஆயுதம் ஏந்திய(அமெரிக்க ஆதரவு) கிளர்ச்சியாளர்களுடன் மோதல்.
- 2023 மியான்மரில் இருந்து குக்கி போராளிகளின் திடீர் ஊடுருவல்.
- 2024 இந்தியா, பங்களாதேஷ் மற்றும் மியான்மரின் பகுதிகளிலிருந்து ஒரு குக்கி நிலத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக ஷேக் ஹசீனா கூறுகிறார்.
- 2024 பாகிஸ்தான் ராணுவம் ஒரு மோசடி தேர்தலை நடத்தியது.
- 2024 இந்தியத் தேர்தலில் தலையீடு.
- 2024 ஷேக் ஹசீனா இராணுவ தளம் அமைக்க அனுமதி மறுத்த பின்னர், ஆட்சிக் கவிழ்ப்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
- 2024 சீன ஆதரவு கே.பி. ஒளி மீண்டும் நேபாள பிரதமராகிறார்.
சி.ஐ.ஏ. செய்த ஆட்சிக் கலைப்புகள்
- ஆப்கானிஸ்தான் ஆட்சிக் கவிழ்ப்பு
- இலங்கை கலகம்
- பாகிஸ்தான் தேர்தல் தில்லுமுல்லு
- பங்களாதேஷ் ஆட்சிக் கவிழ்ப்பு
- தனக்கு ஆதரவான ஆட்சியை கொண்டு வந்த சீனா
- நேபாள ஆட்சி மாற்றம்
- மியான்மர் இராணுவப் புரட்சி
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஜனநாயகத்தை சீர்குலைத்துள்ள அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ, இந்தியாவில் நீட் பிரச்சினையை கையிலெடுத்து மாணவர்களை தூண்டிவிடும் சாத்தியங்கள் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே சிஐஏ அண்டை நாடுகளில் தனக்கு ஆதரவான சக்திகளை ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
With Input : Thejaipurdialogues
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu & Pondicherry