இதய பிரச்சனை உள்ளவர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்? பரிந்துரையை மீறினால் படு ரிஸ்க்!

0
101
Heart Health Alert: Why Excess Water Intake is Dangerous for Heart Patients - Heart patients are often advised to limit water intake to avoid complications. Discover the reasons behind this advice and how it can impact heart health.

நம் உடலை ஆரோக்கியமாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க தண்ணீர் குடிப்பது அவசியம். இது சோர்வைக் குறைப்பது, மனநிலையை மேம்படுத்துவது, எடை இழப்புக்கு உதவுவது என பல நன்மைகளைக் கொண்டுள்ளது.

எனவே முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும் என்று பலர் சொல்வதைக் கேட்பீர்கள். ஆனால் தற்போது அதிக தண்ணீர் குடிப்பது உடல் நலத்திற்கு கேடு என மருத்துவர்கள் கூறுகின்றனர். மிதமான அளவில் மட்டுமே தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

Also Read : கிட்னியை சுத்தப்படுத்தி, ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் பழங்கள்! Fruits that detox kidneys!

உதாரணமாக, ஒரு ஆரோக்கியமான நபர் நாள் முழுவதும் 3-4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். அதாவது 7-8 டம்ளர் மட்டுமே குடிக்க வேண்டும். அதேநேரம், போதுமான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால், உடலில் நீர்ச்சத்து குறைபாடு போன்ற கடுமையான பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இது தவிர, கடுமையான வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம்.

இந்நிலையில், இதய நோயாளிகள் தண்ணீர் அதிகம் குடிக்கக் கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஏனெனில் அது அவர்களின் உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதய பிரச்சனை உள்ளவர்கள் அதிக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன?

இதய நோயாளிகளின் உடலில் சோடியம், பொட்டாசியம் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் போன்ற தாதுக்களின் சமநிலையை பராமரிப்பது முக்கியம். அதிக தண்ணீர் குடிப்பது இந்த சமநிலையை சீர்குலைத்து, ஆபத்தை அதிகரிக்கும். இதய தசைகளில் பலவீனம், தமனிகளில் பலவீனம் மற்றும் இதய உந்துதல் செயலிழப்பு போன்ற ஆபத்தை அதிகரிக்கலாம்.

மேலும் இதய நோயாளிகள் அதிக தண்ணீர் குடிப்பது இதயத்தில் அழுத்தத்தை அதிகரிக்கிறது, இதயத் துடிப்பை அதிகரிக்கிறது மற்றும் இதய நோயாளிகளுக்கு மாரடைப்பு, இதய அடைப்பு அபாயத்தை அதிகரிக்கிறது. அதுமட்டுமின்றி, அதிக தண்ணீர் குடிப்பதால் சிறுநீரகத்தில் அழுத்தம் அதிகரிக்கிறது.

இதய நோயாளிகளின் இதயம் துடிக்கும் திறன் பலவீனமடைவதால், அதிகம் தண்ணீர் குடிப்பர். இது இதயம் பலவீனமடையும் அபாயத்தை அதிகரிக்கிறது. எனவே இதய நோயாளிகள் அதிகளவு தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். அதன் படி, அவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு லிட்டருக்கு மேல் தண்ணீர் குடிக்கக் கூடாது. மேலும், உணவில் எந்த வகையான திரவ உட்கொள்ளலையும் சேர்க்கும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

Heart and Stroke Foundation கூற்றுப்படி, குறைவான இதய பாதிப்பு அல்லது ஆரம்பநிலை நோய் அறிகுறிகளில் இருக்கிறார்கள் எனில் அவர்களுக்கு தண்ணீர் அதிகம் குடிப்பதில் எந்த தடையும் இல்லை. எல்லோரையும் போல் தண்ணீர் குடிக்கலாம். சற்று அதிகமான பாதிப்பு இருக்கிறது எனில் ஒரு நாளைக்கு 1.5 – 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது நல்லது. மோசமான இதய செயல்பாடு கொண்டவர்கள் ஒரு நாளைக்கு 1.5 லிட்டர் தண்ணீர் மட்டுமே குடிக்க வேண்டும்.

Also Read : நெய் எத்தனை மாதத்தில் எக்ஸ்பயரி ஆகும்? நெய் ஒரிஜினலா என கண்டுபிடிப்பது எப்படி?

இது தவிர, இதயம் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்க புகைபிடிப்பதைத் தவிர்ப்பது, உப்பு உட்கொள்வதைத் தவிர்ப்பது போன்றவற்றை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். இது தவிர, இதயம் தொடர்பான ஆபத்தைக் குறைக்க தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான உணவு முறையை மேற்கொள்வது அவசியமாகும்.

Image Source : Getty Image.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry