டீ, காபி குடிப்பதற்கு முன் கட்டாயம் தண்ணீர் அருந்த வேண்டும்! ஏன் தெரியுமா?

0
76
Drinking water before tea or coffee helps hydrate your body, kickstarts digestion, and reduces acidity. Make this simple habit part of your routine for better health and energy levels.

காலையில் எழுந்த உடனே டீ அல்லது காபியோடுதான் தங்களது நாளை பெரும்பாலானோர் தொடங்குகின்றனர். பல பேருக்கு டீ, காபியின் மீது போதை என்றே கூற வேண்டும்.

மன அழுத்தம் போன்ற பிரச்னைகளில் இருப்பவர்கள் கூட, அந்த நேரத்தில் டீ அல்லது  காபியைதான் அதிகமாக  விரும்புகின்றனர். சிலருக்கு டீ அல்லது காபி குடிக்கவில்லை என்றால் தலைவலி, தலைசுற்றல் போன்ற பிரச்னைகள் வருவதாகக் கூறுகின்றனர். இந்த பானங்கள் வாழ்வின் ஒரு அங்கமாகவே மாறிவிட்டது.

Also Read : வாழைத்தண்டு சட்னி! சிறுநீரகம் தொடங்கி பல உறுப்புகள் பாதுகாப்பாக இருக்க உதவும்…!

இதனால் நம் உடலில் பல விளைவுகள் ஏற்படுகின்றன. ஏனெனில் டீ, காபி பானங்களில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும். இது உடலில் பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இந்த இரண்டு பானங்களுமே அமிலத்தன்மை கொண்டவை. மேலும் இந்த இரண்டுமே வயிற்றில் வாயு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. டீ, காபி குடிப்பதால் அஜீரணம், வயிற்றில் அசௌகரியம் ஏற்படலாம்.

பலர் இதைப் பற்றி அறியாமல் ஒரு நாளைக்கு நான்கைந்து டீ அல்லது காபியை பருகுகின்றனர். வாழ்வில் ஓர் அங்கமாக இருக்கும் டீ, காபியை நிறுத்துவது கடினமான ஒன்றுதான். ஆனால் இதனால் ஏற்படும் பாதிப்பை குறைக்க முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துக் கொள்வோம்.

Also Read : நாய்கள் கண்களுக்கு எமன் தெரிவானா? நாய்கள் ஊளையிடுவதற்குப் பின்னால் இத்தனை விஷயங்கள் இருக்கா?

டீ மற்றும் காபியில் டானின் என்ற கலவை இருக்கிறது. இதுதான் டீ, காபியில் கசப்பான சுவையை கொடுக்கிறது. இந்த டானின் கலவைதான் டீ, காபி மீது ஒரு மாதிரியான அடிக்‌ஷனை ஏற்படுத்துகிறது. இது குடல் திசுக்களை சேதப்படுத்தி, வயிறு சம்பந்தமான பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். மேலும் குமட்டல், வாந்தி, வயிற்று வலி போன்ற பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கலாம். அதனால் டீ, காபி பிரியர்கள், அவற்றை அருந்துவதற்கு 15 நிமிடங்களுக்கு முன், தண்ணீர் அருந்த வேண்டும்.

ஏனெனில், டீ மற்றும் காஃபி இரண்டுமே வயிற்றில் அமிலத்தை உருவாக்குகின்றன. டீ, காபி அருந்துவதற்கு முன் தண்ணீர் அருந்துவது உடலின் PH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. டீ-யின் pH மதிப்பு 6-ஆகவும், காபியின் pH மதிப்பு 5 ஆகவும் உள்ளது. இவற்றை அதிக அளவில் எடுத்து கொண்டால், புற்றுநோய் அல்லது அல்சர் போன்ற சில அபாயகரமான நோய்களின் அபாயம் அதிகரிக்கலாம்.

Filter coffee served on a brass cup and saucer. Getty Image.

ஆனால் டீ குடிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால், அதன் அமில விளைவுகளால் ஏற்படும் பாதிப்பை குறைக்கலாம். டீ அருந்துவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் குடலில் ஒரு லேயர் உருவாகிறது. இந்த லேயர் டீ குடிப்பதால் ஏற்படும் அமில விளைவை குறைக்கிறது.

டீ, காபிக்கு முன் தண்ணீர் குடிப்பது பற்களைப் பாதுகாக்கும். காஃபின் கொண்ட இந்த பொருட்களில் உள்ள டானின் வேதிப்பொருள், இது பற்களில் ஒரு அடுக்கை உருவாக்கி துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த பிரச்சனையை தண்ணீர் குடிப்பதன் மூலம் குறைக்கலாம்.

Nandhe Foods Sukku Malli Tea – To order WhatsApp – 9444086655

இதன்மூலம் டீ, காபி குடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகளை குறைக்க முடியும். மேலும் இவ்வாறு தண்ணீர் அருந்தும்போது அது தேநீரில் உள்ள அமிலத்தை நீர்த்துப்போகச் செய்யும். முடிந்தவரை அளவோடு டீ, காபியை பருக வேண்டும். அதுவும் தண்ணீர் அருந்தி 15 நிமிடங்களுக்கு பின் டீ அல்லது காபியை அருந்தினால் பாதிப்புகளை குறைக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry