ஓரங்கட்டப்படும் கனிமொழி ஆதரவாளர்கள்! மனம் வெறுத்து தற்கொலைக்கு முயன்ற எம்.எல்.ஏ.! மவுனம் கலைப்பாரா ஸ்டாலின்?

0
28

திமுக மகளிரணி செயலாளர் கனிமொழியின் தீவிர ஆதரவாளரான எம்.எல்.ஏ. பூங்கோதை, தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உண்மையறியாமல், கட்சித் தலைமை கண்டித்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

அண்மைக் காலமாக திமுக-வில் கனிமொழியும், அவரது ஆதரவாளர்களும் ஓரங்கட்டப்படுவது அதிகரித்து வருகிறது. உதயநிதி வளர்ச்சிக்குத் தடையாக கனிமொழி வந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் அவரின் வளர்ச்சி தடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எனவேதான் கனிமொழி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் தொடர்ந்து ஓரங்கட்டப்படுவதாகத் தெரிகிறது. ஆனாலும், மகளிரணியைத் தாண்டி, கனிமொழிக்குக் கட்சிக்குள் செல்வாக்கு வளர்ந்து வருவதை வேல்ஸ் மீடியாவில் ஏற்கனவே குறிப்பிடிருந்தோம்.

Also Read: திமுக-வில் ஓங்கும் கனிமொழியின் செல்வாக்கு! ஸ்டாலினுக்கு அடுத்த தலைவலி ஆரம்பம்! கலக்கத்தில் மூவர் அணி!

இந்நிலையில், உள்கட்சிப் பூசல் காரணமாக எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சரும், திமுகவின் கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவைச் செயலாளருமான டாக்டர் பூங்கோதை, அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தென்காசி மாவட்ட திமுக-வில் பல கோஷ்டிகள் இருக்கும் நிலையில், எந்த அணியிலும் சேராமல் தனித்து செயல்படுபவர் ஆலங்குளம் எம்.எல்.ஏ. பூங்கோதை. தென்காசி மாவட்ட திமுக செயலாளரான சிவபத்மநாதனுக்கும், பூங்கோதை ஆலடி அருணாவுக்கும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. எனவே, பூங்கோதையின் தம்பி எழில்வாணனை தன்னுடன் இணைத்துக்கொண்டு, சிவபத்மநாதன், பூங்கோதைக்கு எதிராக அரசியல் செய்து வருகிறார். ஆலங்குளம் தொகுதிக்கு உள்பட்ட கடையத்தில் கடந்த 18-ந் தேதி கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அதற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான பூங்கோதை அழைக்கப்படவில்லை.

ஆனாலும், தமது தொகுதிக்குள் நடக்கும் கூட்டம் என்பதால் அழையா விருந்தாளியாக அவர் கலந்துகொண்டார். மேடைக்கு அனுமதிக்கப்படாததால், பார்வையாளர்கள் வரிசையில் அவர் அமர்ந்தார். இதனால் ஆவேசமடைந்த பூங்கோதை ஆதரவாளர்கள், கூட்ட ஏற்பாட்டளர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது கடையம் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தை வெளியேறுமாறு பூங்கோதையிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார்கள்.

இதை மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. கட்சி நிர்வாகிகள் செயல்பாடு பற்றி அங்கேயே மாவட்ட செயலாளரிடம் பூங்கோதை முறையிட்டுள்ளார். ஆனால், கட்சி நிர்வாகிகளின் கேள்விக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும் என சிவபத்மநாதன் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், பிரச்சனை ஏற்படுத்துவதற்காகவே கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும் கடிந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் அவமானமடைந்து கூட்டத்தில் இருந்து வெளியேறிய பூங்கோதை, கட்சித் தலைமையிடம் இதுபற்றி தெரிவித்திருக்கிறார். ஆனால், தலைமையோ, பூங்கோதையையே கண்டித்ததாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர் அளவுக்கு அதிகமாக தூக்கு மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். சுயநினைவு இழந்த நிலையில், நெல்லை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அழைத்துவரப்பட்டுள்ளார்.

எல்லா கட்சியிலும் கோஷ்டி அரசியல் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், கட்சியினர் முன் எம்.எல்.ஏ.வையை அவமானப்படுத்தி தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு மாவட்ட செயலாளர் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுவதாக பலதரப்பிலும் கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆலங்குளம் தொகுதி மக்கள் கூறுகின்றனர்.

கடுமையான மன அழுத்தத்தில் இருப்பவர்கள், தற்கொலை எண்ணம் ஏற்படுவோர், SNEHA தற்கொலை தடுப்பு மையம் – 044 2464000, மாநில தற்கொலைத் தடுப்பு மையம் – 104ஐ தொடர்பு கொள்ளவும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry