சனிக்கிழமைகளில் கண்டிப்பாக இந்த 10 விஷயங்களை செய்யவே செய்யாதீங்க!

0
134
Looking for spiritual guidance? This article explores 10 things to avoid on Saturdays to cultivate a deeper connection with your inner self and the divine.

சனிக்கிழமைகள் என்றாலே முக்கியத்துவம் நிறைந்த நாட்களாகும். சனி பகவானுக்கு உகந்த சனிக்கிழமைகளில் சில வழிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஆன்மிகம் கூறுகிறது. அந்தவகையில், ஒருசிலவற்றை பற்றி இப்போது பார்ப்போம்.

சில பொருட்களை சில நாட்களில் வாங்கும்போது வீட்டில் செல்வம் அதிகரிக்கும். அது போலவே சில பொருட்களை கண்டிப்பாக சில நாட்களில் வாங்கக்கூடாது என்று சொல்வார்கள். அப்படி வாங்கினால், பல்வேறு விதமான பிரச்னைகள் வரும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்படுகிறது.

நவகிரகங்களில் சனீஸ்வர பகவானை நினைத்து மக்கள் அதிகம் பயப்படுவார்கள். ஏனெனில், சனி பெயர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளையும், கஷ்டங்களையும் மக்களால் சமாளிக்க முடியாது என்பதாலேயே இத்தகைய அச்சம் ஏற்படுகிறது. அந்த அளவிற்கு சக்திக் கொண்ட சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட கிழமைதான் சனிக்கிழமையாகும். இந்தக் கிழமையில் தப்பித்தவறிக்கூட சில பொருட்களை வாங்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. அப்படி சனிக்கிழமையில் வாங்கக்கூடாத சில பொருட்களை தெரிந்துகொள்வோம்.

Also Read : வீட்டிற்கு தினமும் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..? சாஸ்திரம் சொல்வது என்ன?

1. சமையலுக்குப் பயன்படுத்தத்கூடிய எண்ணெய் வகைளை சனிக்கிழமையில் வாங்கக்கூடாது. மீறி வாங்கினால், வீட்டில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் சம்பந்தமான பிரச்னைகள் அடிக்கடி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. ஆண்கள் தலைக்கு எண்ணெய் வைத்து குளிக்கலாம்.

2. வீட்டை சுத்தப்படுத்தக்கூடிய மாப், துடைப்பம் போன்ற பொருட்களை சனிக்கிழமையில் வாங்கக்கூடாது. அப்படி வாங்கினால், நிதி சம்பந்தமான பிரச்னைகள், பொருளாதாரத்தில் பிரச்னைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

3. கல் உப்பை சுக்ர ஓரையில் வெள்ளிக்கிழமை வாங்குவது மிகவும் விசேஷமாகும். இதனால் வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. ஆனால், அதே கல் உப்பை சனிக்கிழமையில் வாங்கினால், வீட்டில் சண்டை, பிரச்னை, வீண் விவாதம் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. எனவே, கல் உப்பை சனிக்கிழமையில் வாங்குவதைத் தவிர்க்கலாம்.

4. கருப்பு எள்ளை கண்டிப்பாக சனிக்கிழமையில் வாங்கக் கூடாது. அவ்வாறு வாங்கினால் வீட்டில் சண்டை வரும், நாம் செய்யும் அனைத்துக் காரியங்களும் தள்ளிப்போகும், தடைகள் ஏற்படும் என்கிறார்கள்.

5. இரும்பு சம்பந்தமான பொருட்களை சனிக்கிழமையில் வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. இரும்பு மட்டுமல்லாமல், கூர்மையான பொருட்கள், ஆயுதங்களையும் சனிக்கிழமைகளில் வாங்கக் கூடாது. சனிக்கிழமையில் இரும்புப் பொருட்கள் வாங்கினால், நம்முடைய அதிர்ஷ்டம் குறைந்துக்கொண்டே போகும். மேலும், இது நமக்கு துரதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், கோயில்களுக்கு இரும்பு பொருட்களை சனிக்கிழமைகளில் வாங்கித் தரலாம்.

Uncover the spiritual significance of Saturday and learn about 10 things to refrain from doing on this day for a more fulfilling and spiritually aligned life.

6. கத்தரிக்கோலை சனிக்கிழமையில் வாங்கினால், உறவுமுறைகளில் பெரும் பிரச்னை, சண்டை ஏற்பட்டு பிரிவு கூட உருவாகும் என்று சொல்லப்படுகிறது. எனவே, கட்டாயம் சனிக்கிழமை இதுபோன்ற பொருட்கள் வாங்குவதை முடிந்த அளவு தவிர்த்து விடுவது நல்லதாகும்.

7. சனிக்கிழமைகளில் புதிய ஆடைகளை வாங்க கூடாது, அணியவும் கூடாது. தங்க நகை வாங்கலாம், அணிந்தும் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் சனிக்கிழமைகளில் தாலி கயிறு மாற்றக்கூடாது.

8. எப்போதுமே, சனிக்கிழமையன்று செருப்புகளை தானம் செய்யலாம். இதனால், சனி தோஷங்கள் நீங்கும். ஆனால் காலணிகள், செருப்புகளை பரிசாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

9. சனிக்கிழமைகளில் அசைவ உணவை உண்பது மிகவும் அமங்கலமாக கருதப்படுகிறது. அதேபோல, சனிக்கிழமைகளில் மது அருந்தக் கூடாது. சனிக்கிழமை அன்று முடி, தாடி அல்லது நகங்களை வெட்ட கூடாது. இதுவும், எதிர்மறையான தாக்கத்தை வாழ்க்கையில் ஏற்படுத்து விடும். இந்த செயல்களால் சனி தோஷமும் ஏற்படுவதால், இவைகளை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.

10. சமையலுக்குத் தேவைப்படும் மாவு போன்ற பொருட்களையும் சனிக்கிழமையில் வாங்கக் கூடாது. வெள்ளிக்கிழமையில் மசாலா பொருட்களை வாங்குவதை மற்றும் அரைப்பதை தவிர்க்க வேண்டும்.

Subscribe to our channels on  YouTube  & Telegram &  Tamilnadu  &  Pondicherry