
இந்தியாவில் பஸ், இரயில் போன்ற பொதுப் போக்குவரத்து மற்றும் தனி நபர் வாகன பயன்பாடுகள் அதிகரித்தாலும், அதே அளவு ஆட்டோக்களும் எண்ணிக்கையில் உயர்ந்துள்ளன. குறைந்த செலவில், பெரும்பாலான இடங்களில் ஆட்டோ பயன்பாட்டிற்கு உள்ளதால், ஆட்டோ பயணம் பொதுமக்களை கவர்ந்துள்ளது. கார்கள் போன்று ஆட்டோக்களுக்கு 4 சக்கரங்கள் இல்லாமல், 3 சக்கரங்கள் மட்டுமே இருப்பது ஏன்?
இருசக்கர வாகனத்தின் பயன்பாடு தற்போது பல மடங்கு உயர்ந்து விட்டது. சாலைகளில் முன்பெல்லாம் நூற்றுக்கணக்கில் ஓடிக்கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் இப்பொழுது ஆயிரக்கணக்கில் ஓடத் தொடங்கிவிட்டன. மக்களும் ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பயணிக்க, அலுவலகம் செல்ல என அனைத்திற்குமே இரு சக்கர வாகனங்களைதான் பயன்படுத்தி வருகின்றனர்.
Also Read : கோபக்காரன் என பெருமைப்படுபவரா நீங்கள்..? உடல் ஆரோக்கியத்தையே புரட்டிப்போடும் கோபம் பற்றி தெரியுமா?
ஆனால் ஒரு காலத்தில், நகரத்தைச் சுற்றிப் பயணிக்க விரும்பினால், ஆட்டோக்கள் தான் பலரது தேர்வாக இருந்தது. பேருந்து வசதி இல்லாத தொலைதூர கிராமங்களிலிருந்து அருகிலுள்ள நகரங்களுக்குச் செல்ல விரும்பினால், மூன்று சக்கர ஆட்டோ மட்டுமே ஒரே வழி.
ஆட்டோ, மூன்று சக்கரங்களைக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஏன் இன்னொரு சக்கரத்தைச் சேர்த்து அதை 4 சக்கர வாகனமாக மாற்றக்கூடாது? பின்புறத்தில் இரண்டு சக்கரங்கள் இருக்கும்போது முன்புறத்தில் இரண்டு சக்கரங்கள் ஏன் இல்லை?
அதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. மூன்று சக்கர ஆட்டோவை சமநிலைப்படுத்துவது, நான்கு சக்கர ஆட்டோவை விட மிகவும் எளிதானது என நிபுணர்கள் சொல்கிறார்கள். அது மட்டுமல்லாமல், 4 சக்கரங்களை விட 3 சக்கர வாகனம் அளவில் சிறியதாக இருக்கும் என்பதால் குறுகலான பகுதிகளிலும் வளைந்து சென்று விடும். மேலும் எளிதாகவும் பார்க்கிங் செய்து விடலாம்.

கூட்டம் அதிகமான நெரிசலான பகுதிகளில் கார், பஸ் போன்ற வாகனங்களை விடவும் ஆட்டோக்கள் எளிதாகச் சென்று விடும். இதற்கு பெரும் அளவில் உதவுவது அதன் 3 சக்கர அமைப்புதான். அளவில் சிறியதாக இருப்பதால் ஆட்டோ எஞ்சின்களை இயக்க மற்ற வாகனங்களை விட குறைவான எரிபொருள் போதுமானது. மிகக் குறைந்த எரிபொருளைப் பயன்படுத்தி, மற்ற வாகனங்களை விட அதிக மைலேஜ் (mileage) பெற முடியும். இதன் மூலம் ஆட்டோ ஓட்டுநர்கள் குறைந்த செலவில் அதிக பயணிகளுக்கு சேவையளிக்க முடிகிறது.
அதுமட்டுமின்றி, நான்கு சக்கர வாகனங்களை விட மூன்று சக்கர வாகனங்கள் தயாரிக்கவும், பராமரிக்கவும் குறைந்த செலவே ஆகும். ஆட்டோவை ஓட்டுபவர்களுக்கு பராமரிப்பு செலவுகள் பெருமளவு குறைகின்றன. ஆட்டோக்கள் சாமானியர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன. எனவே குறைந்த செலவையும், அதிக லாபத்தையும் பெறுவதே இதன் நோக்கம். அதனால்தான் பொறியாளர்கள் மூன்று சக்கரங்கள் கொண்ட ஆட்டோவை வடிவமைத்தனர்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry