
உடல் எடை அதிகரிச்சுட்டே போகுதா? ராத்திரி தூக்கம் வரலயா? இது இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்குன்னு தெரியுமா? சரியான தூக்கம் இல்லாவிட்டால், உடல் எடை கூடுறதுக்கு நிறைய வாய்ப்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
நீங்க கஷ்டப்பட்டு டயட்ல இருந்தாலும், உடற்பயிற்சி செய்தாலும், தூக்கம் சரியா இல்லைன்னா, உங்களது முயற்சி முழுமையாக வேலை செய்யாமல் போகலாம். ஆனால் கவலைப்படாதீங்க! உங்களுக்காகவே சூப்பரான நான்கு பானங்களை சொல்கிறோம். இதை குடித்துவிட்டு நிம்மதியா தூங்கலாம், உடல் எடையையும் குறைக்கலாம்!
Also Read : தூக்கத்துக்கான 3-2-1 ரூல்! இந்த விதியைப் பின்பற்றினால் விரைவான, ஆழமான தூக்கம் வருமா?
தூக்கமின்மை & உடல் பருமன்: ஒரு ஆபத்தான லிங்க்
தூக்கம் குறையும்போது, நம் உடம்பில் குளுக்கோஸ் அளவு மாறும், இன்சுலின் செயல்பாடு குறையும், கார்டிசோல் அதிகமாகும். இதனால் பசியை உருவாக்கும் ஹார்மோன் (கிரெலின்) அதிகமாக சுரந்து, வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தும் ஹார்மோன் (லெப்டின்) குறைந்துவிடும். இதனால் அடிக்கடி பசி எடுத்து, உடல் எடை கூடுறதுக்கு வாய்ப்பு இருக்கிறது. அதோடு உயர் ரத்த அழுத்தம், உடல் வீக்கம், அல்சைமர் நோய் அபாயமும் உள்ளது.
இதோ சில எளிய தீர்வுகள்:
1. சைலியம் ஆப்பிள் எலுமிச்சை டீ
* தேவையான பொருட்கள்: ஒரு ஆப்பிள், ஒரு கப் எலுமிச்சை டீ (ஆற வச்சது), 2 டீஸ்பூன் சைலியம் உமி தூள், ¼ டீஸ்பூன் பட்டைத்தூள்.
செய்முறை: எல்லா பொருட்களையும் போட்டு மிக்ஸியில் அரைக்கவும். சைலியம் உமி தண்ணீரை உறிஞ்சி, ஜெல்லி போன்று ஆகிடும். இது குடலில் கொழுப்பை உறிஞ்சுவதை குறைக்கும். பட்டை, சர்க்கரை அளவ கட்டுப்பாட்டில் வைக்கும்.
2. கற்றாழை செர்ரி ஜூஸ்
* தேவையான பொருட்கள்: ஒரு கப் குளிர்ந்த தண்ணீர், 1 அவுன்ஸ் கற்றாழை ஜூஸ், 2-4 அவுன்ஸ் செர்ரி ஜூஸ்.
செய்முறை: எல்லாவற்றையும் நன்றாக கலந்து குடிக்க வேண்டும். செர்ரி ஜூஸில மெலட்டோனின் உள்ளது, இது தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோன். கற்றாழை செரிமானத்துக்கு நல்லது, கொழுப்பை குறைக்க உதவும்.
3. எலுமிச்சை இஞ்சி & கெமோமில் டீ
* தேவையான பொருட்கள்: 6 அவுன்ஸ் கெமோமில் டீ, 5-10 வெள்ளரிக்காய் துண்டுகள் (தோலுடன்), 1 டேபிள்ஸ்பூன் துருவிய இஞ்சி, 1 எலுமிச்சையின் சாறு, சிறிதளவு இமாலய உப்பு (விரும்பினால்).
செய்முறை: எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து குடிக்க வேண்டும். வெள்ளரிக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் கொழுப்பை கரைக்க உதவும். எலுமிச்சை சாறு உடம்பில் உள்ள தேவையில்லாத தண்ணீரை வெளியேற்றும். இஞ்சி ஜீரண சக்தியை அதிகரிக்கும். கெமோமில் டீ தூக்கத்தை வரவழைக்கும்.

4. பால் இல்லாத தேன் & ஜாதிக்காய் பால்
* தேவையான பொருட்கள்: ஒரு கப் பால் (பால் ஒவ்வாமை இருந்தால், முந்திரி அல்லது பாதாம் பால் பயன்படுத்தலாம்), 1-2 டீஸ்பூன் தேன், 1/8 டீஸ்பூன் துருவிய ஜாதிக்காய்.
செய்முறை: பாலை காய்ச்சி, தேன் மற்றும் ஜாதிக்காய் சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும். பாலில் ட்ரிப்டோஃபேன் உள்ளது, இது தூக்கத்தை வரவழைக்கும் அமினோ அமிலம். தேன், ட்ரிப்டோஃபேன் மூளைக்கு போக உதவும். ஜாதிக்காய் தூக்கத்தை தூண்டும் பண்புகளை கொண்டுள்ளது.
Also Read : இரவு படுத்தவுடன் தூங்க உதவும் டிப்ஸ்! பகலில் இந்த பழக்கத்தை பின்பற்றுங்கள்..! டீப் ஸ்லீப் உறுதி!
தூங்குறதுக்கு முன்னாடி இதை குடிங்க, நல்லா தூங்குங்க..!
தூக்கம் ரொம்ப முக்கியம்! அதை விட்டுட்டு வெறும் டயட்லயும், உடற்பயிற்சியிலேயும் மட்டும் கவனம் செலுத்தினால் முழுமையான பலன் கிடைக்காது. இந்த பானங்கள் தூக்கத்தை அதிகமாக்கி, உடல் எடைய கட்டுப்பாட்டில் வைக்க உதவும்.
Subscribe to our channels on YouTube & Telegram & Tamilnadu &
Pondicherry